மு. மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மு. மேத்தா
பிறப்பு முகமது மேத்தா
செப்டம்பர் 5, 1945(1945-09-05)
பெரியகுளம், தமிழ்நாடு,  இந்தியா
தொழில் கவிஞர்
பாடலாசிரியர்

மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்

இறப்பினில் கண் விழிப்பேன்

மரங்களில் நான் ஏழை

எனக்கு வைத்த பெயர் வாழை"

போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.

"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தா முன்னணியில் நிற்பவர்.

படைப்புக்கள்[தொகு]

கவிதை நூல்கள்[தொகு]

 1. கண்ணீர்ப் பூக்கள்
 2. மனச் சிறகு (1978)
 3. ஊர்வலம்
 4. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
 5. நந்தவன நாட்கள்
 6. வெளிச்சம் வெளியே இல்லை
 7. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
 8. மு.மேத்தா கவிதைகள்
 9. ஒற்றைத் தீக்குச்சி
 10. என் பிள்ளைத் தமிழ்
 11. புதுக்கவிதைப் போராட்டம் (2004)
 12. பித்தன்

கட்டுரை நூல்கள்[தொகு]

 1. திறந்த புத்தகம்

நாவல்கள்[தொகு]

 1. சோழ நிலா

சிறுகதை தொகுப்புகள்[தொகு]

 • கிழித்த கோடு
 • மு.மேத்தா சிறுகதைகள்
 • பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

 • "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
 • "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு

வெளிஇணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._மேத்தா&oldid=2122678" இருந்து மீள்விக்கப்பட்டது