உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்தில் சோழக் காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாய்லாந்து நாட்டு குவான் லுங் பட் என்ற இடத்தில் சோழர்களின் செப்புக்காசு ஒன்று கிடைத்துளது.[1]

உறுதிப்படுத்திய விதம்

[தொகு]
  • சதுர வடிவினதாகிய இக்காசில் புலிச்சின்னம் இருத்தல். யானை, குதிரை போன்ற விலங்குகள் இழுக்கும் ரதம்.
  • இதே காலத்தில் இங்கு கிடைத்துள்ள பட்டையக்கல்லில் பெரும் பதன் கல் (பொற்கொல்லன்) என்ற வாசகத்தில் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளமை.
  • பத்தன் என்று நகை செய்பவர்களை அழைக்கும் தமிழ் சொல் பதன் என்று திரிந்திருக்க வாய்ப்பு.

இதை அனைத்தையும் கொண்டு சண்முகம் என்பவர் இது சோழர்கள் மூன்றாம் நூற்றாண்டு வெளியிட்ட செப்புக்காசுகளில் ஒன்றென உறுதிப்படுத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ் நாடும் தாய்லாந்தும் தொன்மைத் தொடர்புகள், சண்முகம், ஆவணம் இதழ், சூலை 3, 1993, பக்கம் 81-84

மூலம்

[தொகு]
  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.