சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (RBTW)
தகவல்
அமைவிடம்சென்னை, இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்15
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்342 கிலோமீட்டர்கள் (213 mi)
மற்றுமொரு பேருந்து இடைவழி அமைப்புத் திட்டமான சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பும் காண்க.

சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (Chennai Rapid Bus Transit Ways, RBTW) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாம் முழுமைத் திட்டத்தில் இடைக்கால மற்றும் நெடுங்கால போக்குவரத்து திட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகும். இது வட்ட வழித்தடங்களாக உயரத்தில் அமைக்கப்பட உள்ள தனிச்சாலைகளைக் கொண்ட சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பின் அங்கமல்ல.

வெகுவிரைவான பேருந்து வழிகள் பின்வரும் ஏழு தடங்களில் 100 கிமீ தொலைவிற்கு இடைக்கால மற்றும் நெடுங்காலத் திட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளன:[1][2]

 • இராசீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை/தகவற் தொழிற்நுட்பத் தாழ்வாரம்) [20 கிமீ]
 • தரமணி இணைப்புச் சாலை [5 கிமீ]
 • MBI சாலை [15 கிமீ]
 • பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை [15 கிமீ]
 • சர்தார் பட்டேல் சாலை [10 கிமீ]
 • என்.எசு.கே சாலை (ஆற்காடு சாலை) - கேஎசு சாலை [20 கிமீ]
 • செயின்ட். தாமசு மலை - பூவிருந்தவல்லி சாலை [15 கிமீ]

பின்வரும் தடங்களில் நெடுங்காலத் திட்டமாக திட்டமிடப்பட்டுள்ளன[1]

 • அண்ணா சாலை [30 கிமீ]
 • பெரியார் ஈவெரா சாலை [25 கிமீ]
 • சவகர்லால் நேரு சாலை (உள் வட்டச் சாலை) [45 கிமீ]
 • ஜிஎன்டி சாலை [20 கிமீ]
 • சிடிஎச் சாலை [15 கிமீ]
 • சென்னை புறவழிச் சாலை [20 கிமீ]
 • வெளி வட்டச் சாலை (ORR) [62 கிமீ]
 • கோயம்பேடு பேருந்து நிலையம் - சிறீபெரும்புதூர் [25 கிமீ]

சான்றுகோள்கள்[தொகு]