நாகப்பட்டினம் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகப்பட்டினம் துறைமுகம் தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களில் ஒன்றாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்துறைமுகம் இன்றுவரை நங்கூரத் துறைமுகமாகவே இருந்து வருகிறது. கப்பல்கள் ஆழ்கடலிலேயே நங்கூரம் பாய்ச்சப்பட்டு நின்றிருக்க பார்ஜ் எனப்படும் படகுக் கப்பல்களில் சரக்கு மாற்றப்பட்டு துறைமுகத்தை வந்தடையும். மாநில அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும் ஏழு துறைமுகங்களில் இது ஒன்றாகும். (ஏனையவை: கடலூர், பாம்பன், இராமேசுவரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகும்). வங்காள விரிகுடாக் கடலின் கடுவாயாறு முகத்துவாரத்தில் இத்துறைமுகம் அமைந்துள்ளது[1]. இதன் பின்னிலமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

நாகப்பட்டினம் மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இது போர்த்துகேயர்களின் முதன்மை துறைமுகமாக விளங்கியது. 1660இல் டச்சுக் காரர்கள் இதனைக் கைப்பற்றினர். 1781 வரை அவர்கள் வசமே நாகப்பட்டினம் துறைமுகம் இருந்து வந்தது. இங்கு பயணியர் கப்பல்களும் சரக்குக் கப்பல்களும் வந்து போயின. நாகூரைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர்கள் கடல் வணிகத்தில் பெரிதும் பங்கேற்றனர்.

துறைமுக மேம்பாடு[தொகு]

நாகப்பட்டினம் துறைமுகத்தை பொது - தனியார் கூட்டாண்மை அடிப்படையில், 380 கோடி ரூபாய் செலவில், அனைத்து பருவ கால நிலைக்கேற்ப, ஆழ்கடல் கப்பலணை மற்றும் பசுமைச் சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த துறைமுக மேம்பாட்டினால், இதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான, துறைமுக இணைப்பு வசதி கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள இப்பகுதியில், வேலைவாய்ப்பு வசதியும், பொருளாதார வசதியும் ஏற்படும்.[2]

சான்றுகோள்கள்[தொகு]

  1. "Nagappattinam port". தமிழக அரசின் கடல்சார் வாரியம். பார்த்த நாள் அக்டோபர் 06, 2012.
  2. "நாகப்பட்டினம் துறைமுகம் ரூ.380 கோடியில் மேம்பாடு". சனவரி 21,2012. தினமலர். பார்த்த நாள் அக்டோபர் 06, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]