சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மற்றுமொரு பேருந்து இடைவழி அமைப்புத் திட்டமான சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பும் காண்க.
சென்னை பிஆர்டிஎசு
தகவல்
அமைவிடம்சென்னை
போக்குவரத்து
வகை
உயரத்திலமைந்த பேருந்து விரைவுவழி
மொத்தப் பாதைகள்1
நிலையங்களின்
எண்ணிக்கை
21 (முதல் கட்டம்)
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்70.3 கிலோமீட்டர்கள் (43.7 mi)

சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு (Chennai Bus Rapid Transit System) (BRTS) சென்னையின் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுச் சாலைவழி திட்டத்தின் அங்கமாக அமைக்கப்பட இருக்கும் ஓர் பேருந்துகளுக்கான தனி விரைவு இடைவழியாகும். அடையாரிலிருந்து துவங்கி சைதாப்பேட்டை, ஜாஃபர்கான்பேட்டை, இராமாவரம், புழல், மணலி, சென்ட்ரல் தொடருந்து நிலையம், கலங்கரை விளக்கம் வழியாக அடையாருக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நீளம் 70.3 கிலோமீட்டர்கள் (43.7 mi) தொலைவிற்கு இருக்கும். உயரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த இடைவழித் தடம் அடையாறு ஆற்றின் கரையோரமாகவும் பக்கிங்காம் கால்வாய் கரையோரமாகவும் கட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம் 2013இல் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.[1]

சான்றுகோள்கள்[தொகு]