வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி DannyS712ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 78: வரிசை 78:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=514734&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88:%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81வடகலை, தென்கலை பிரச்னை: உயர் நீதிமன்றம் உத்தரவு தினமணி]
* [http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=514734&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88:%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81வடகலை, தென்கலை பிரச்னை: உயர் நீதிமன்றம் உத்தரவு தினமணி]
* [http://www.sanskrit.org/www/Ramanuja/Vadagalai.Tenakalai.html வடகலை/தென்கலை]
* [http://www.sanskrit.org/www/Ramanuja/Vadagalai.Tenakalai.html வடகலை/தென்கலை] {{Webarchive|url=https://web.archive.org/web/20070523220101/http://www.sanskrit.org/www/Ramanuja/Vadagalai.Tenakalai.html |date=2007-05-23 }}


{{வைணவ சமயம்}}
{{வைணவ சமயம்}}

04:56, 13 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

வைணவ சமயம் (Vaishnavism) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் 14[சான்று தேவை] வைணவ உபநிடதங்களாகும்.

இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.

குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.[1]

வைணவ தத்துவம்

படிமம்:Bhagavan Vishnu.jpg
வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் வழிபடும் திருமால்

இராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.

இதற்கு பிரமாணம் பிருஹதாரண்யக உபநிஷத்து (3-7-22):

யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:.

இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.

உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விஜாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம் (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.

ஸ்ரீ

விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். அன்னை தத்துவத்தை "தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தம் பேசும் ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலாயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை தொழுத பின் தாயார் ஆகிய திருமகளை தொழுது பின் கோயில் மூலவரை தொழும் வழக்கமுள்ளது.

வைணவத்தில் மோட்சம்

படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஓர் உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவ தில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.

வைணவத்தில் கடவுள்

இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணு, இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும்.. யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும், தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை, சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.

வைணவ ஆச்சாரியர்கள்

காண்க: தென்கலை ஆச்சாரியர்கள், வடகலை ஆச்சாரியர்கள், வைணவ குருபரம்பரை

புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.

சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. ஸ்ரீரங்கம் கட்டுரை

நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர்.

இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தைப் பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று, பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.

தமிழ் பாசுரங்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதப்பட்டு, அந்த தேசத்து வைணவப் பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தன. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது, கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்துப் பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாகக் கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

ஆழ்வார்கள்

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.

அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.[சான்று தேவை]


வைணவ இலக்கியங்கள்

திருமண்

திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

  • வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் வடகலை


  • தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் தென்கலை

வைணவ பிரிவுகள்

வைணவ சமயத்தில் ஸ்ரீவைணவம், பிரம்ம வைணவம், ருத்ர வைணவம், குமார வைணவம் என பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை, ராமாநந்தி, ஸ்வாமிநாராயண் என்று நான்கு பிரிவுகள் உள்ளன. பிரம்ம வைணவத்தில் தத்வவாதம், கெளடீய வைணவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.

துணை நூல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணவ_சமயம்&oldid=3229531" இலிருந்து மீள்விக்கப்பட்டது