உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளஹஸ்தீஸ்வரர் கோயில்

காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் (தஞ்சாவூர் மாவட்டம்) அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

கோயில் வரலாறு

[தொகு]

இக்கோயில் காவிரியாற்றின் தென்புறம் உள்ளது. இத்தலத்தின் விருட்சம் வில்வ மரம் ஆகும். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது. இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரமூர்த்தி சன்னதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இத்தலத்தில் உள்ள இறைவன் காளஹஸ்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை.

கோயில் அமைப்பு

[தொகு]

மூலவர் கருவறையின் வலப்புறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றன. திருசுற்றில் சித்தி விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், காசி விசுவநாதர், சரஸ்வதி, லட்சுமி, கங்கை ஆகியோருக்கான தனி சன்னதிகள் காணப்படுகின்றன. திருச்சுற்றின் இறுதியில் நவக்கிரகங்கள் உள்ளன. அருகே தனியாக ஆஞ்சநேயர் காணப்படுகிறார். கருவறையின் இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது.

இக்கோயிலின் அருகில் உள்ள காமாட்சி ஜோசியர் தெருவில் இக்கோயிலுக்கான மற்றொரு வாயில் உள்ளது. அந்த வாயிலில் சித்தி விநாயகர் கோயிலைக் கடந்து கோயிலின் உள்பகுதிக்கு வலப்புறம் வழியாக வருவதற்கு பாதை உள்ளது.

குடமுழுக்கு

[தொகு]

12.12.2003இல் குடமுழுக்கு நிகழ்ந்ததான குறிப்பு காணப்படுகிறது. மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இக்கோயிலில் அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. [2] [3] [4]

10 நாள் உற்சவம்

[தொகு]

1933-ல் மகாமகத் திருவிழாவின் போது 10 நாள் உற்சவம் நடைபெற்றது.1945,1956,1968,1980,1992,2004 ஆகிய மகாமகத்தின்போது ஒரு நாள் உற்சவம் நடைபெற்றது. 83ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகாமகத்தின்போது 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது. [5]

மேற்கோள்கள்

[தொகு]

26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு

[தொகு]