கும்பகோணம் இலுப்பையடி விநாயகர் கோயில்

கும்பகோணம் இலுப்பையடி விநாயகர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலாகும்.
மூலவர்[தொகு]
மூலவராக விநாயகர் உள்ளார். அவர் இலுப்பையடி விநாயகர் எனப்படுகிறார். ஹாஜியர் தெரு அருகேயுள்ள கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த தளத்தில் உள்ள இக்கோயில் கருவறை, சிறிய விமானங்களைக் கொண்டுள்ளது.
குடமுழுக்கு[தொகு]
இக்கோயிலின் குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது. [1]
பிற விநாயகர் கோயில்கள்[தொகு]


இலுப்பையடி விநாயகர் கோயில் போல கும்பகோணத்தில் எலந்தமர விநாயகர் கோயில், அரச மர விநாயகர் கோயில்கள் உள்ளன. இவ்விரு கோயில்களும் காசி விசுவநாதர் சன்னதியின் கீழ வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில்களின் குடமுழுக்கு நவம்பர் 2015இல் நடைபெற்றது. [2]
கும்பகோணம் எலந்த மர விநாயர் கோயில்[தொகு]
எலந்த மர விநாயகர் கோயிலில் விநாயகர் மூலவராக உள்ளார்.
கும்பகோணம் அரச மர விநாயகர் கோயில்[தொகு]
அரச மர விநாயகர் கோயிலில் விநாயகர் மூலவராக உள்ளார். விநாயகருக்கு முன்பாக சுவாம்நாதசுவாமி, அய்யப்பன் ஆகியோர் காணப்படுகின்றனர்.