கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவநீதகிருஷ்ணன் கோயில்

கும்பகோணத்தில் உள்ள குறிப்பிடத்தக்க கிருஷ்ணன் கோயில் இதுவாகும். [1] இக்கோயில் நவநீதகிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படுகிறது.

இருப்பிடம்[தொகு]

கும்பகோணம் நகரில் பாட்ராச்சாரியார் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

மூலவர் கிருஷ்ணன் ருக்மணி சத்யபாமாவுடன் இருந்து அருள் பாலிக்கிறார்.

12 கருட சேவை[தொகு]

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. குடந்தையில் அட்ஷய திருதியை முன்னிட்டு12 வைணவ ஸ்தலங்களில் கருட சேவை
  2. 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016
  3. "கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016". 2018-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)