இஷ்டகா மடம், கும்பகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இஷ்டகா மடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இஷ்டகா மடம் கும்பகோணத்தில் இருந்த மடங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இம் மடம் இருந்ததற்கான சான்றுகள் தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

இருப்பிடம்[தொகு]

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மடங்களில் ஒன்றாக இஷ்டகா மடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

15ஆம் நூற்றாண்டு[தொகு]

இந்த மடம் கும்பகோணத்தில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இம்மடத்தைச் சேர்ந்த ஸ்ரீபுருஷோத்தமபாரதி ஸ்ரீபாதங்கள் என்பவர் நன்னிலம் வட்டம் கூத்தாநல்லூரில் உள்ள சரசுவதி தேவிக்குக் கொடையளித்துள்ளார்.[1] கூத்தாநல்லூர் என்று தற்போது அழைக்கப்படும் இக்கூத்தனூரே ஒட்டக்கூத்தர் ஊர் என்ற ஒரு கருத்தும் உண்டு.

தற்போதைய நிலை[தொகு]

கும்பகோணத்தில் சங்கர மடம், மௌனசுவாமி மடம்,வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகிய மடங்கள் தற்போது உள்ளன. இஷ்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

மேற்கோள்[தொகு]

  1. கும்பகோணம் இஷ்டகா மடம், மகாமகம் 1992 சிறப்பு மலர்