கும்பகோணம் நந்தவனத்து மாரியம்மன் கோயில்
கும்பகோணம் நந்தவனத்து மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
பெயர்க்காரணம்[தொகு]
வயல்வெளி சூழ்ந்திருக்க மாரியம்மன் அமைந்துள்ளதால் இவர் நந்தவனத்து மாரியம்மன் என அழைக்கப்படுகிறார். இந்த அம்மனை வடக்குத்தெரு மாரியம்மன் என்றும் அழைக்கின்றனர்.
மூலவர்[தொகு]
இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் ஆவார். மூலவர் சிலைக்கு முன்பாக வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர்.
சன்னதி[தொகு]
சன்னதியில் வலப்புறம் காத்தவராயன், மதுரை வீரன் சிலைகள் உள்ளன. பாப்பாத்தியம்மன், லாட சன்னியாசி, ஓமாந்தூரார் ஆகியோரைக் குறிக்கும் மாடங்கள் காணப்படுகின்றன. இடப்புறம் நவக்கிரகங்கள் உள்ளன. அப்பகுதியில் பதினெட்டாம்படி கருப்பசாமி உள்ளார். சப்தகன்னி, தியாகராஜசுவாமி, கருப்பாயி அம்மனைக் குறிக்கும் வகையில் மாடங்கள் உள்ளன.