சங்கர மடம், கும்பகோணம்
கும்பகோணம் மடத்துத்தெருவில் சங்கர மடம் உள்ளது. கும்பகோணத்தில் உள்ள பிற மடங்கள் மௌனசுவாமி மடம்,வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகியவையாகும்.
வரலாறு
[தொகு]‘எல்லா உயிரிலும் இருப்பவன் இறைவன்‘ ‘மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்‘ என்னும் தத்துவங்களைப் பரப்பிவரும் அறநிலையம் காஞ்சி காமகோடி பீடம் சங்கரமடம் ஆகும். காஞ்சியில் நிலவிய இத் திருமரபு குடந்தைக் காவிரிக்கரையில் திருமடத்தை நிறுவியது காமகோடி பீடாதிபதிபர் நான்காம் சந்திரசேகரர் காலத்திலாகும் (1746-1783). ‘பக்தர்கள் இருக்குமிடத்திற்கு முனிவர் சென்று நல்வழிகாட்டுதல்‘ என்னும் நெறிக்கு ஏற்ப காஞ்சி அருளாளர்கள் ஊர் ஊராக யாத்திரை சென்று மக்களுக்குக் காட்சி அளிப்பது சிறப்புமிக்க செயலாகும். [1]
நூல்கள்
[தொகு]‘ஜகத்குரு பரம்பரா நாம மாலா ஜகத்குரு பரம்பரா ஸ்தலம்‘ போன்ற வடமொழி நூல்களுடன், யோகநாதம்பிள்ளை, மழவை சின்னச்சாமி பாரதி, புதுக்கோட்டை, எட்டயபுர சமஸ்தானத் தமிழ்ப்புலவர்கள் பாடிய பாடல்களும் இத்திருமடத்தின் அரிய வரலாற்றுச்செய்திகளைக் கூறுகின்றன. பல மொழிகளில் இவர்களைப் பற்றிய இசைப்பாடல்கள் உள்ளன. ஸ்ரீசங்கரத் போதித்த தத்துவம் அத்வைதம். ஆதலால் அத்வைத நூல்கள் பல தமிழில் எழுதப்பட்டன. [1]
திருப்பணிகள், பிற பணிகள்
[தொகு]பல்வேறு கோயில்களைத் திருப்பணி செய்து மிகச் சிறப்புடன் நிர்வாகம் செய்து வருகிறார்கள். திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் நலிவடைந்த பல்வேறு கோயில்களைத் திருப்பணி செய்துள்ளனர். அங்கு தொடர்ந்து பூசைகள் நடைபெறவும் தக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். பல்வேறு இடங்களில் புதிய கோயில்கள் பலவற்றை நிர்மாணம் செய்துள்ளனர்.
சங்கரமடத்தின் மூலம் இசைப்பணி, தமிழ்ப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, இந்துசமய மன்றம் மூலம் பழைய இலக்கிய பதிப்புப்பணி, புத்திலக்கியங்கள் இயற்றல், உடைநடைநூல்கள் எழுதும் பணி, திருமுறை வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
பிற மடங்கள்
[தொகு]இஷ்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.