கும்பகோணம் பவானியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணம் பவானியம்மன்
பவானியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:கும்பகோணம்
கோயில் தகவல்கள்
விமானம்
சன்னதி

கும்பகோணம் பவானியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

இருப்பிடம்[தொகு]

இக்கோயில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது நாகர், லிங்கம் காணப்படுகின்றன. முன் மண்டபத்தில் விநாயகர், முருகன் உள்ளனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிங்கம் காணப்படுகிறது.

மங்காளிம்மன் விழா[தொகு]

மங்காளியம்மன் திருவிழா இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் திருவிழாவாகும். 2017ஆம் ஆண்டிற்கான திருவிழா 3 ஜனவரி 2017இல் அம்மன் பிரதிஷ்டையுடன் தொடங்கியது. அம்மன் வீதியுலா 4 ஜனவரி 2017இல் நடைபெற்றது. உலாவின்போது மணமாகாத இளைஞரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அருக்கு பெண் உடை அணிவித்து அம்மனைப் போல வேடமிட்டு அம்மன் முகக்கவசம் வைத்துச் செல்வர். இதனை அம்மன் பண்டிகை என்றும் மங்காளியம்மன் பண்டிகை என்றும் கூறுவர்.[1]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 25 ஏப்ரல் 2013இல் நடைபெற்றது. [2]

மேற்கோள்கள்[தொகு]