கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்
கோயில்

கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி கோயில் கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

இருப்பிடம்[தொகு]

இக்கோயில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் கருவறையில் படிதாண்டா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் உள்ளார். மூலவரின் வலது புறம் பச்சைக்காளியும், இடது புறம் பவளக்காளியும் உள்ளனர். சன்னதியில் நீலகண்டேஸ்வரியும், பவளகண்டேஸ்வரியும் உள்ளனர்.

சிறப்பு[தொகு]

ஒவ்வோராண்டும் இக்கோயிலில் நடைபெறும் திருநடன உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஒவ்வோராண்டும் உற்சவத்தின்போது படிதாண்டா பரமேஸ்வரி நீலகண்டேஸ்வரி (பச்சை காளியம்மன்), பவள கண்டேஸ்வரி (பவள காளியம்மன்) அம்மன்களுக்கு காப்புக்கட்டி கரக திருநடன உற்சவ விழா தொடங்கும். பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் புறப்பாடு நடைபெறும். மாலை காவிரியாற்றுக்குச் சென்று இரவில் அங்கிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரை, பந்தம் ஆகியவற்றுடன் அம்பிகை நடனமாடிக்கொண்டு வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். 2014இல் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. [1] கடந்த ஆண்டும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. [2]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலில் 12 சூலை 2000இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

அருகிலுள்ள கோயில்கள்[தொகு]

நீலகண்டேஸ்வரி கோயில்[தொகு]

நீலகண்டேஸ்வரி கோயில் விமானம்

படிதாண்டா பரமேஸ்வரி கோயிலின் அருகே சீனிவாச நந்தவனத்தில் நீலகண்டேஸ்வரி கோயில் உள்ளது. கருவறையில் நீலகண்டேஸ்வரி காணப்படுகிறார்.

எல்லையம்மன் கோயில்[தொகு]

எல்லையம்மன்கோயில்

படிதாண்டா பரமேஸ்வரிகோயிலின் அருகே எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் உள்ளார். வாயிலின் இருபுறமும் விநாயகர் முருகன் உள்ளனர். சந்தன கருப்பசாமியும் உள்ளார். திருச்சுற்றில் ஆதிகாலத்து எல்லையம்மன் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]