குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குன்றாண்டார்கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்னாண்டார்கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,600 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,082 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]


விசலூர் • வீரக்குடி • வத்தனாக்குறிச்சி • வத்தனாக்கோட்டை • வாலியம்பட்டி • வாழமங்கலம் • வைத்தூர் • உப்பிலியக்குடி • உடையாளிப்பட்டி • தென்னங்குடி • தெம்மாவூர் • தாயினிப்பட்டி • தா. கீழையூர் • செங்களூர் • செனையக்குடி • ராக்கதம்பட்டி • புலியூர் • பெரியதம்பிஉடையன்பட்டி • பெரம்பூர் • பாப்புடையான்பட்டி • பள்ளத்துப்பட்டி • ஒடுக்கூர் • ஒடுகம்பட்டி • நாஞ்சூர் • மூட்டாம்பட்டி • மின்னாத்தூர் • மேலப்புதுவயல் • மங்கதேவன்பட்டி • லெக்கனாப்பட்டி • குளத்தூர் • கொப்பம்பட்டி • கிள்ளுக்குளவாய்பட்டி • கிள்ளுக்கோட்டை • கிள்ளனூர் • கண்ணங்குடி • செட்டிபட்டி • அண்டக்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்