உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரியோலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரியோலசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மாதிரி இனம்
கோராசியசு ஓரியோலசு
லின்னேயஸ், 1758
வேறு பெயர்கள்
  • அனால்சிபசு
  • புரோடெரிபசு
  • மைமெட்டா
  • சரோபோலசு
  • சாந்தோனோடசு

ஓரியோலசு (Oriolus) என்பவை வண்ணமயமான பழைய உலக குருவிப் பேரினம் ஆகும். இவை கோர்வோயிடியன் குடும்பத்தினைச் சார்ந்த பறவைகளாகும் இவற்றிற்கும் புதிய உலக ஓரியோல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. புதிய உலக ஓரியோல்கள் இஐக்டெரிட்கள் (குடும்பம் இக்டெரிடே) எனப்படும். இவை பெரும் குடும்பமான பாசுரோசுடியாவைச் சார்ந்தவை.

வகைப்பாட்டியல்

[தொகு]

ஓரியோலசு பேரினமானது கரோலஸ் லின்னேயசால் 1766ஆம் ஆண்டில் இவரது சிஸ்டமா நேச்சுரேயின் 12வது பதிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பேரினத்தின் மாதிரி இனமாகத் தங்க மாங்குயில் (ஓரியோலசு ஓரியோலசு) உள்ளது. 1760-ல், பிரான்சு நாட்டுப் பறவையியலாளர் மதுரின் ஜாக் பிரீசன் தனது ஆர்னித்தாலஜீ பதிப்பில் ஒரியோலசை, துர்டுசுவின் துணைப்பிரிவாக குறித்துள்ளார். ஆனால் விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம் 1955-ல் "ஓரியோலசு பிரிசன், 1760" என்பதை துணைப்பிரிவாக ஏற்றுக்கொள்ளவில்லை[1] லின்னேயசு தனது 10வது பதிப்பைப் புதுப்பித்தபோது 12க்கும் மேற்பட்ட பேரினங்களைச் சேர்த்தார். ஆனால் இவர் பொதுவாகத் தனது ஆர்னிதோலஜியில் பிரிசன் அறிமுகப்படுத்திய புதிய வகைகளை அடிப்படையாகக் கொண்டே பதிவிட்டார். லின்னேயசின் 12வது பதிப்பில் அசல் வெளியீடாகக் குறிப்பிடப்பட்ட ஒரே பேரினம் ஓரியோலசு ஆகும்.[2][3] இந்த பெயர் பழைய பிரெஞ்சு வார்த்தையான ஓரியோலில் இருந்து பெறப்பட்டது. இது இந்தப் பறவையின் ஓசையிலிருந்து பெறப்பட்டது. ஆனால் வேறுசில இதன் பண்டைய இலத்தீன் சொல்லான ஆரியோலசிற்கு "தங்கம்" என்று பொருள் கூறி, இதன் நிறத்துடன் ஒப்பிடுவர். "ஓரியோலின்" பல்வேறு பொருள்கள் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளிலிருந்து உரோமானிய மொழிகளில் உள்ளன.[4]

பரவியுள்ள இனங்கள்

[தொகு]
 
 

சலேயீ

 

மெலனோடிசு

பிளாவோசிங்டசு

சாஜீட்டசு
 

பேகுரோமசு

 

பெளரோனிசு

போர்செடெனீ

 
 
 
 

குளோரோசெப்பாலசு

பிராக்கிரிங்கசு

சாந்தோர்னசு

 
 
 
 
 

நைக்ரிபென்னீசு

பெர்விவாலி

லார்வேடசு

மோனாச்சா

 
 
 

டிபியூசசு

 
 

ஓரியோலசு

குண்டோ

 

சைனென்சிசு (part)

மெலானிசிடிகசு

மேகுலடசு

ஆரேடசு

 
 

கோசீ

குருஎண்டசு

 

மெலியானசு

டிரைலீ

 

சாந்தோனோடசு

 

இசுடேரீ

 

அல்பிலோரிசு

இசபெல்லே

சிற்றினத்திற்குள் உள்ள உயிரினங்களின் தொடர்பு: வரிசைப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வில் சேர்க்கப்படாத இரண்டு வடிவங்கள் ஓ. கிராசிரோசுட்ரிசு ஆகும், இது ஓ. பிராக்கிரைங்கசுக்கு நெருங்கியதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஓ. டெனுயிரோசுட்ரிசு, ஓ. டிப்பசுக்கு நெருங்கிய சிற்றினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[5]

இந்த பேரினத்தில் சுமார் 30 சிற்றினங்கள் உள்ளன:[3][6]

படம் பொதுப் பெயர் அறிவியல் பெயர் பரம்பல்
பழுப்பு மாங்குயில் ஓரியோலசு சலேயீ நியூ கினியா
கரும் பழுப்பு மாங்குயில் ஓரியோலசு பேகுரோமசு வடக்கு மலுக்கு
சாம்பல் கழுத்து மாங்குயில் ஓரியோலசு போர்செடெனீ சீரம்
கருங்காது மாங்குயில் ஓரியோலசு பெளரோனிசு புரு தீவு
தனிம்பார் மாங்குயில் ஓரியோலசு டெசிபின்சு தனிம்பார் தீவுகள்
திமோர் மாங்குயில் ஓரியோலசு மெலனோடிசு திமோர், ரோட்டி மற்றும் செமவு தீவுகள்
வெட்டர் மாங்குயில் ஓரியோலசு பின்சி வெட்டர் மற்றும் அட்டாரூ தீவுகள்
ஆலிவ் முதுகு மாங்குயில் ஓரியோலசு சாஜீட்டசு கிழக்கு ஆத்திரேலியா மற்றும் தெந்மத்திய நியு கினியா
பச்சை மாங்குயில் ஓரியோலசு பிளாவோசிங்டசு ஆத்திரேலியா மற்றும் நியூ கினியா
கருந்தொண்டை மாங்குயில் ஓரியோலசு சாந்தோனோடசு போர்னியோ மற்றும் பிலிப்பீன்சுவழியாக தென்கிழக்கு ஆசியா
பிலிப்பீன்சு மாங்குயில் ஓரியோலசு இசுடேரீ பிலிப்பீன்சு
வெண் முகட்டலகு மாங்குயில் ஓரியோலசு அல்பிலோரிசு லூசன் தீவு (பிலிப்பீன்சு)
இசபெல்லா மாங்குயில் ஓரியோலசு இசபெல்லே லூசன்
ஐரோவாசியா தங்க மாங்குயில் ஓரியோலசு ஓரியோலசு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா, மற்றும் மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தை செலவிடுகிறது
இந்தியத் தங்க மாங்குயில் ஓரியோலசு குண்டோ இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய ஆசியா
ஆப்பிரிக்கத் தங்க மாங்குயில் ஓரியோலசு ஆரேடசு சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே ஆப்பிரிக்கா
மெல்லிய அலகு மாங்குயில் ஓரியோலசு டெனுரோசுடிரசு கிழக்கு இமயமலை முதல் தென்கிழக்கு ஆசியா வரை
கரும்பிடரி மாங்குயில் ஓரியோலசு சைனென்சிசு கிழக்கு சைபீரியா, உசுரிலாந்து, வடகிழக்கு சீனா, கொரியா மற்றும் வடக்கு வியட்நாம்
பசுந்தலை மாங்குயில் ஓரியோலசு குளோரோசெப்பாலசு கிழக்கு ஆப்பிரிக்கா
சாவோ தொமே மாங்குயில் ஓரியோலசு கிரேசியோசிடிரிசு சாவோ டோம் தீவு
மேற்கத்திய மாங்குயில் ஓரியோலசு பிராக்கிரிங்கசு ஆப்பிரிக்கா
எத்தியோப்பிய மாங்குயில் ஓரியோலசு மோனாச்சா வடகிழக்கு ஆப்பிரிக்கா
மலை மாங்குயில் ஓரியோலசு பெர்விவாலி காங்கோ ஜனநாயக குடியரசு மத்திய கென்யா மற்றும் மேற்கு தான்சானியா வரை
ஆப்பிரிக்கக் கருந்தலை மாங்குயில் ஓரியோலசு லார்வேடசு ஆப்பிரிக்கா
கருஞ்சிறகு மாங்குயில் ஓரியோலசு நைக்ரிபென்னீசு சியரா லியோன் மற்றும் லைபீரியா முதல் தெற்கு தெற்கு சூடான், மேற்கு உகாண்டா, மத்திய காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் வடமேற்கு அங்கோலா வரை
கருந்தலை மாங்குயில் ஓரியோலசு சாந்தோர்னசு வெப்பமண்டல தெற்கு ஆசியா இந்தியா மற்றும் இலங்கை கிழக்கே இந்தோனேசியா வரை
கரும் மாங்குயில் ஓரியோலசு கோசீ போர்னியோவில் சரவாக்
கருப்பு கருஞ்சிவப்பு மாங்குயில் ஓரியோலசு குருஎண்டசு இந்தோனேசியா மற்றும் மலேசியா
அரக்கு மாங்குயில் ஓரியோலசு டிரைலீ தென்கிழக்கு ஆசியா
வெள்ளி மாங்குயில் ஓரியோலசு மெலியானசு தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பரப்பில் குளிர்காலம்
சாவகம் மாங்குயில் ஓரியோலசு குரூண்டசு இந்தோனேசிய சாவகம் தீவு

முன்னாள் இனங்கள்

[தொகு]

முன்பு, சில வகைப்பாட்டியலாளர்கள் இந்த சிற்றினங்த்தினை (அல்லது துணையினம்) ஓரியோலசு பேரினத்தில் உள்ள சிற்றினங்களாக கருதினர்:

  • பசுமை அத்திப்பறவை (ஓரியோலசு விர்டிசு)[7]
  • பழுப்பு காது-சின்னான் (இசுகுவாமிசெப்சு)( ஓரியோலசு இசுகுவாமிசெப்சு)[8]

பரவல் மற்றும் வாழிடம்

[தொகு]

மாங்குயில்கள் முக்கியமாக வெப்பமண்டல பகுதிகளில் வசிக்கும் குருவிகளாகும். இருப்பினும் யூரேசிய தங்க மாங்குயில் மிதவெப்பமண்டலம் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. I.C.Z.N. (1955). "Direction 21: Validation under the Plenary Powers of the generic names Bubo Dumeril, 1806, Coturnix Bonnaterre, 1790, Egretta Forster, 1817, and Oriolus Linnaeus, 1766 (class Aves), by the suppression of older homonyms published by Brisson in 1760 (validation of four erroneous entries on the Official List of Generic Names in Zoology made by the ruling given in Opinion 67)". Opinions and Declarations Rendered by the International Commission on Zoological Nomenclature 1 (Section C, Part C 12): 161–178. https://www.biodiversitylibrary.org/page/34652694. 
  2. Joel Asaph Allen (1910). "Collation of Brisson's genera of birds with those of Linnaeus". Bulletin of the American Museum of Natural History 28: 317–335. http://digitallibrary.amnh.org/handle/2246/678. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  4. "Oriole". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  5. Jønsson, Knud A; Bowie, Rauri C. K; Moyle, Robert G; Irestedt, Martin; Christidis, Les; Norman, Janette A; Fjeldså, Jon (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33 (2): 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x. 
  6. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  7. "Sphecotheres viridis - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
  8. "Hypsipetes amaurotis squamiceps - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரியோலசு&oldid=3837943" இலிருந்து மீள்விக்கப்பட்டது