ஆப்பிரிக்கத் தங்க மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்கத் தங்க மாங்குயில்
ஆப்பிரிக்கத் தங்க மாங்குயில் ஓ. ஆ. நோடாடசு
ஜிம்ப்பாபுவே சாம்பெசி ஆற்றில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. ஆரடசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு ஆரடசு
வெயிலோட், 1817
வேறு பெயர்கள்
  • ஓரியோலசு இசுடிரையேடசு

ஆப்பிரிக்கத் தங்க மாங்குயில் (ஓரியோலசு ஆரடசு) அல்லது ஆப்பிரிக்க மாங்குயில், சகாரா பாலைவனத்தின் தெற்கே ஆப்பிரிக்காவில் வசிக்கும் பாசரின் பறவைகளின் ஓரியோலிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவைச் சிற்றினம் ஆகும்.

இது அடர்த்தியான புதர் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் காணப்படும் பறவை. தொங்கும் கூடை வடிவ கூடுகளை மரத்தில் கட்டுகின்றன. இதில் இரண்டு முட்டைகள் வரை இடப்படும். ஆப்பிரிக்கத் தங்க மாங்குயில் பூச்சிகள் மற்றும் பழங்கள், குறிப்பாக அத்திப்பழங்களை உணவாக உண்ணுகின்றன. மாங்குயில்கள் அதிக நேரத்தை மரத்தின் மேற்தளங்களில் செலவிடும்.

வகைப்பாட்டியல்[தொகு]

"ஓரியோசு" என்ற பெயர் முதன்முதலில் (இலத்தீன் வடிவத்தில் ஓரியோலசு) பெரிய ஆல்பர்டால் சுமார் 1250-ல் பதிவு செய்யப்பட்டது. மேலும் தங்க மாங்குயில் எனும் இயல்பொலிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய உலக மாங்குயில்கள் தோற்றத்தில் ஓரியோலிடேயைப் போலவே இருக்கின்றன. ஆனால் பழைய உலகப் பறவைகளுடன் தொடர்பில்லாத இக்டெரிடுகள் ஆகும்.

துணையினங்கள்[தொகு]

இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • செனகல் தங்க மாங்குயில் (ஓ. ஆ. ஆரடசு) - வெயிலோட், 1817 : செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து மேற்கு எத்தியோப்பியா மற்றும் தெற்கு சோமாலியா வரை
  • தென்னாப்பிரிக்க தங்க மாங்குயில் (ஓ. ஆ. நோட்டசு) - பீட்டர்சு, டபிள்யூ, 1868 : அங்கோலாவிலிருந்து மத்திய மொசாம்பிக் வரை

விளக்கம்[தொகு]

ஆண் பறவையானது வழக்கமான மாங்குயில் போலக் கருப்பு மற்றும் மஞ்சள் நிற இறகுகளில் காணப்படும். இருப்பினும் இறகுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பறக்கும் இறகுகள் மற்றும் வால் மையத்தில் மட்டும் திடமான கருப்பு நிறத்தில் இருக்கும். சிறகுகளில் அதிக அளவு தங்க நிறம் காணப்படும். இது ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தில் இருக்கும் ஐரோவாசியா தங்க மாங்குயிலிருந்து இருந்து வேறுபட்டது.

பெண் பறவையானது பச்சை நிறத்தில் காணப்படும். இது ஐரோப்பிய இனங்களிலிருந்து வேறுபட்ட இறக்கைகள் மற்றும் கண்ணைச் சுற்றி கருப்பு நிறத்துடன் காணப்படும். மாங்குயில்கள் கூச்ச சுபாவமுள்ளவை. மேலும் ஆண் பறவையும் கூட விதானத்தின் மஞ்சள் மற்றும் பச்சை நிற இலைகளுடன் மறைந்து பார்ப்பதற்குக் கடினமானதாக காணப்படும்.

பறக்கும் போது இவை அமெரிக்க பாடும் பறவை போலக் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]