ஐரோவாசியா தங்க மாங்குயில்
ஐரோவாசியா தங்க மாங்குயில் | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. ஓரியோலசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு ஓரியோலசு (லின்னேயஸ், 1758) | |
கோடை குளிர்காலம் | |
வேறு பெயர்கள் | |
|
ஐரோவாசியா தங்க மாங்குயில் (Eurasian golden oriole)(ஓரியோலசு ஓரியோலசு), தங்க மாங்குயில் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சிற்றினம் வடக்கு அரைக்கோளத்தின் மிதமான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் பாசரின் பறவைகளின் பழைய உலக மாங்குயில் குடும்பத்தின் ஒரே சிற்றினமாகும். இது ஐரோப்பா மற்றும் பாலேர்க்டிக்கில் கோடைக்கால குடியேற்றம் மற்றும் மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கிறது.
வகைப்பாட்டியல்
[தொகு]ஐரோவாசியா தங்க மாங்குயில் குறித்து 1758ஆம் ஆண்டில் கரோலஸ் லின்னேயஸ் தனது சிசுடமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் விவரித்தார். கொராசியாசு ஓரியோலசு என்ற இருசொல் பெயர் இதற்கு வழங்கப்பட்டது.[3] 1766-ல் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய ஓரியோலசு பேரினத்தில் இந்த சிற்றினம் இப்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4]
ஐரோவாசியா தங்க மாங்குயில் மற்றும் இந்தியத் தங்க மாங்குயில் ஆகியவை முன்னர் தெளிவானதாகக் கருதப்பட்டன. ஆனால் 2005ஆம் ஆண்டில் பறவையியல் வல்லுநர்களான பமீலா ராஸ்முசென் மற்றும் ஜான் ஆண்டர்டன் தென் ஆசியாவின் பறவைகளின் முதல் பதிப்பில் இவற்றைத் தனித்தனி சிற்றினங்களாக விவரித்தனர்.[5][6] இந்த வேறுபாட்டிற்கான ஆதரவு 2010இல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் மூலம் தெளிவாக்கப்பட்டது.[7] மேலும் பெரும்பாலான பறவையியலாளர்கள் இப்போது இந்திய தங்க மாங்குயிலை ஒரு தனி சிற்றினமாகக் கருதுகின்றனர்.[8] ஐரோவாசியா தங்க மாங்குயிலின் மாற்றுப் பெயர்களில் ஐரோப்பியத் தங்க மாங்குயில் மற்றும் மேற்கு ஐரோவாசியா தங்க மாங்குயில் ஆகியவை அடங்கும். இந்த சிற்றினத்தின் கீழ் எந்த உயிரலகும் இல்லை.[4]
சொற்பிறப்பியல்
[தொகு]"ஓரியோல்" என்ற பெயர் முதன்முதலில் 18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. இது அறிவியல் இலத்தீன் பேரினப் பெயரின் தழுவலாகும், இது பாரம்பரிய இலத்தீன் மொழியில் "ஆரியோலசு" என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் தங்கம் என்பதாகும். "ஓரியோலின்" பல்வேறு வடிவங்கள் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளிலிருந்து உரோமனிய மொழிகளில் உள்ளன.[9] பெரிய ஆல்பர்ட் மேக்னசு 1250-ல் இலத்தீன் வடிவமான ஓரியோலசைப் பயன்படுத்தினார் மற்றும் தங்க மாங்குயில் பாடலின் காரணமாக இது ஓனோமாடோபாய்க் என்று தவறாகக் கூறினார். இடைக்கால இங்கிலாந்தில் இதன் பெயர், வூட்வேல் (மரங்கொத்தி இனம்) பாடலிருந்து பெறப்பட்டது.
விளக்கம்
[தொகு]ஆண், வழக்கமான மாங்குயில் நிறமான கருப்பு மற்றும் மஞ்சள் நிற இறகுகளுடன் காணப்படும். ஆனால் பெண் மாங்குயில் பசுமை நிறத்தில் காணப்படும். மாங்குயில் கூச்ச சுபாவமுள்ளவை. மேலும் ஆண் பறவையைக் கூட விதானத்தின் துளிர்விட்ட மஞ்சள் மற்றும் பச்சை இலைகளில் பார்ப்பது மிகவும் கடினம். பறப்பதில் இவை சற்றே அமெரிக்கப் பாடும் பறவை போலவும், வலுவாகவும், நேரடியானதாகவும், நீண்ட தூரத்தில் தாழ்வுகளுடன் பறக்கும்.
இதன் அழைப்பு ஒரு கடுமையான "குவியாக்", என்றோ வீலா-வீ-வீயோ அல்லது ஓர்-ய்ய்-யோல் ஒவ்வொரு சொற்றொடருக்கும் இடையே நுட்பமான மாறுபாடுகளுடன் ஒலிக்கும்.[10]
இந்திய தங்க மாங்குயிலில் ஆணின் (ஓரியோலசு குண்டூ) கண்ணுக்குப் பின்னால் கருப்புக் கண் பட்டை காணப்படும். நீளமான மற்றும் வெளிறிய சிவப்பு நிறத்தில் இது உள்ளது. இறகுகளில் அதிக மஞ்சள் நிறத்துடன் காணபப்டும்.[11][12]
பரவலும் வாழிடமும்
[தொகு]ஐரோவாசியா தங்க மாங்குயில் சிற்றினத்தின் இனப்பெருக்க வரம்பு மேற்கு ஐரோப்பா மற்றும் எசுக்காண்டினாவியா கிழக்கிலிருந்து சீனா வரை பரவியுள்ளது. இவை மத்திய மற்றும் தென்னாப்பிரிக்காவில் குளிர்காலத்தில்[1] பொதுவாக இரவில் இடம்பெயர்கின்றன. ஆனால் வசந்த கால இடப்பெயர்ச்சியில் பகலில் பயணிக்கின்றது. இலையுதிர்கால இடம்பெயர்வின் போது இவை கிழக்கு மத்தியதரைக்கடல் வழியாக இடம்பெயர்கின்றன. இங்கு இவை பழங்களை உண்கின்றன. இதன் காரணமாக இவை பெரும்பாலும் இப்பகுதியில் தீங்குயிரியாகக் கருதப்படுகின்றன.[13] இவை முன்பு இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டன. கடைசியாக 2009-ல் கிழக்கு ஆங்கிலியாவில் இனப்பெருக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.[14][15]
ஐரோவாசியா தங்க மாங்குயில் பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் இவை திறந்த அகன்ற காடுகள் மற்றும் தோட்டங்கள், காப்ஸ்கள், ஆற்றங்கரை காடுகள், பழத்தோட்டங்கள், பெரிய தோட்டங்களை விரும்புகின்றன. கிழக்கு ஐரோப்பாவில் இவை அதிக தொடர்ச்சியான காடுகளிலும், கலப்பு அல்லது ஊசியிலையுள்ள காடுகளிலும் வாழ்கிறது. இவை பொதுவாக மரங்களற்ற வாழ்விடங்களைத் தவிர்க்கின்றன, ஆனால் இங்கே தீவனம் தேடக்கூடும். இவற்றின் குளிர்கால வாழ்விடங்களில் பகுதி வறண்ட ஈரப்பதமான வனப்பகுதி, உயரமான காடுகள், ஆற்றங்கரை காடுகள், வனப்பகுதி/சவன்னா மொசைக் மற்றும் சவன்னா ஆகும்.
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]இனப்பெருக்கம்
[தொகு]ஐரோவாசியா தங்க மாங்குயில்கள் 2 அல்லது 3 வயதிற்குப் பின்னர் இனப்பெருக்கம் செய்யத் துவங்குகிறது. ஆண் பறவைகள் பொதுவாகப் பெண் பறவைகளுக்குப் பல நாட்களுக்கு முன்பே இனப்பெருக்கப் பகுதிக்கு வந்து சேரும். ஒரு பிரதேசத்திற்கு அல்லது ஒரு குறிப்பிட்ட கூடு தளத்தில் ஏற்பட்ட இனப்பெருக்க நம்பகத்தன்மை, இணை-பிணைப்பு ஒரு இனப்பெருக்க காலத்திலிருந்து அடுத்த இனப்பெருக்க காலத்திற்கும் தொடரலாம்.[16] இவை மரத்தின் உச்சியில் ஆழமான கோப்பை வடிவ கூட்டினை சிறிய கிளையின் கிடைமட்ட பிளவில் அமைக்கின்றன. கூடுகள் பெண் பறவைகளால் கட்டப்படுகிறன. ஆனால் ஆண் பறவைகளும் சில நேரங்களில் கூடுகட்டத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும். கூட்டினை நிலைநிறுத்த 40 செ.மீ. வரை நீளமுள்ள தாவர இழைகளைப் பயன்படுத்தும். புல், இறகுகள் மற்றும் கம்பளியும் பயன்படுத்தப்படுகிறது. கூடுகளில் 3 முதல் 5 முட்டைகள் வரை இருக்கும். முட்டைகள் ஒரு நாள் இடைவெளியில் அதிகாலையில் இடப்படும். முட்டைகள் சராசரியாக 30.4 மிமீ × 21.3 மிமீ (1.20 × இல் 0.84 இல்) 7.3 கணக்கிடப்பட்ட எடையுடன் இருக்கும். இவை வெள்ளை, களிம்பு அல்லது மிகவும் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்துடன் மற்றும் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். முட்டைகளைப் பெண் பறவைகள் அடைகாக்கின்றன. ஆனால் ஆண்பறவைகளும் குறுகிய காலத்திற்கு அடைகாக்கும். இக்காலத்தில் பெண் பறவைகள் இறை தேடும். முட்டைகள் 16-17 நாட்களுக்குப் பிறகு பொரிக்கின்றன. குஞ்சுகள் இரண்டு பறவைகளாலும் உணவளிக்கப்படும். இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இளம் பறவைகள் கூட்டிலிருந்து பறந்து செல்கின்றன.. பெற்றோர்கள் தங்கள் கூட்டை தீவிரமாகப் பாதுகாப்பதால் முட்டைகள் அரிதாகவே வேட்டையாடுபவர்களிடம் இழக்கப்படுகிறது.[17]
1986ஆம் ஆண்டு லிங்கன்சயரில் வளையமிடப்பட்டு, 1996ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்சயரில் உயிருடன் காணப்பட்ட ஒரு ஆண் பறவை, 10 ஆண்டுகள் மற்றும் 1 மாதம் ஆயுளை உடையது என்பது ஐரோவாசியா தங்க மாங்குயிலின் பதிவு செய்யப்பட்ட அதிக பட்ச ஆயுட்காலமாக உள்ளது.[18][19]
உணவு
[தொகு]இவை பூச்சிகள் மற்றும் பழங்களை உண்கின்றன. இவற்றின் அலகுகளைப் பயன்படுத்தி பிளவுகளில் மறைந்திருக்கும் பூச்சிகளை எடுக்கின்றன.
பாதுகாப்பு
[தொகு]தங்க மாங்குயில்கள் மிகப் பெரிய வரம்பில் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையும் அதிகம், நிலையானவை. எனவே, இவை பன்னாட்டு பறவை வாழ்க்கை மூலம் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 BirdLife International (2017). "Oriolus oriolus". IUCN Red List of Threatened Species 2017: e.T103692938A111783061. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103692938A111783061.en. https://www.iucnredlist.org/species/103692938/111783061. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Oriolus oriolus (லின்னேயஸ், 1758) - Eurasian Golden Oriole". Natural History Museum, London. பார்க்கப்பட்ட நாள் 2019-08-07.
- ↑ Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Holmiae:Laurentii Salvii. 1758.
- ↑ 4.0 4.1 "Orioles, drongos, fantails". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. July 2023. பார்க்கப்பட்ட நாள் 31 July 2023.
- ↑ Rasmussen, P. C. Birds of South Asia. The Ripley Guide. Smithsonian National Museum of Natural History and Lynx Edicions.
- ↑ Check-list of birds of the world. Museum of Comparative Zoology.
- ↑ Jønsson, K.A.; Bowie, R.C.K.; Moyle, R.G.; Irestedt, M.; Christidis, L.; Norman, J.A.; Fjeldså, J. (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33 (2): 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x.
- ↑ Lepage, D. "Indian Golden-Oriole Oriolus kundoo Sykes, 1832". Avibase. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
- ↑ "Oriole". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ "Eurasian Golden Oriole (Oriolus oriolus) - Loriot d'Europe". பார்க்கப்பட்ட நாள் 7 August 2022.
- ↑ Rasmussen, P.C.; Anderton, J.C. (2012). Birds of South Asia. The Ripley Guide. Vol. 2((: Attributes and Status)) (Second ed.). Washington D.C.: Smithsonian National Museum of Natural History. p. 586. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-87-3.
- ↑ Walther, B.; Jones, P. (2017). "Indian Golden Oriole (Oriolus kundoo)". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. எண்ணிம ஆவணச் சுட்டி:10.2173/bow.ingori1.01. S2CID 216174760. பார்க்கப்பட்ட நாள் 18 December 2017.
- ↑ del Hoyo, J.; Elliott, A.; Christie, D.A., eds. (2008). Handbook of the Birds of the World. Lynx Edicions.
- ↑ Dagley, J.R. (1994). "Golden Orioles in East Anglia and their conservation". British Birds 87: 205–219. https://britishbirds.co.uk/wp-content/uploads/article_files/V87/V87_N05/V87_N05_P205_219_A057.pdf.
- ↑ Eaton, Mark; Rare Breeding Birds Panel (2022). "Rare breeding birds in the UK in 2020". British Birds 115 (11): 623-692 [629]. https://rbbp.org.uk/wp-content/uploads/2023/07/rbbp-report-2020.pdf.
- ↑ Cramp & Perrins 1993, ப. 421.
- ↑ Cramp & Perrins 1993, ப. 429-430.
- ↑ "Longevity records for Britain & Ireland in 2016". British Trust for Ornithology. Archived from the original on 21 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "European Longevity Records". Euring. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
ஆதாரங்கள்
[தொகு]- Cramp, Stanley; Perrins, C.M., eds. (1993). Handbook of the Birds of Europe the Middle East and North Africa. The Birds of the Western Palearctic. Oxford University Press.
வெளி இணைப்புகள்
[தொகு]- Oriolus oriolus in Field Guide: Birds of the World on Flickr
- Ageing and sexing (PDF; 5.3 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze பரணிடப்பட்டது 2016-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Internet Bird Collection: Golden Oriole videos, photos and sounds
- (European =) Eurasian golden oriole - Species text in The Atlas of Southern African Birds.
- Listen to an oriole singing
- Xeno-canto: audio recordings of the Eurasian golden oriole