இந்தியத் தங்க மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் தங்க மாங்குயில்
ஆண் மாங்குயில் (மேலே), பெண் மாங்குயில் (கீழே)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓரியோலசு
இனம்:
ஓ. குண்டூ
இருசொற் பெயரீடு
ஓரியோலசு குண்டூ
சைகிசு 1832
உத்தேச பரம்பல்

இந்தியத் தங்க மாங்குயில் (Indian golden oriole)(ஓரியோலசு குண்டூ ) என்பது இந்தியத் துணைக்கண்டத்திலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் ஓரியோலசுப் பேரினமாகும். இந்த சிற்றினம் முன்பு யூரேசியா தங்க மாங்குயிலின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது தனிச்சிற்றினமாக கருதப்படுகிறது. முதிர்ந்த பறவைகளில் யூரேசியன் தங்க மாங்குயிலைத் தவிர, கண்ணுக்குப் பின்னால் நீண்டிருக்கும் கண் கருமைப் பட்டையினால் அறியப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

இந்தியத் தங்க மாங்குயில் இங்கிலாந்தினைச் சார்ந்த இயற்கை ஆர்வலர் வில்லியம் ஹென்றி சைக்சு என்பவரால் 1832இல் விவரிக்கப்பட்டது. இதற்கு ஓரியோலசு குண்டூ என்ற இருசொல் பெயர் வழங்கப்பட்டது.[2] ஆரம்பத்தில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டாலும், இந்திய தங்க மாங்குயில் பொதுவாக யூரேசிய தங்க மாங்குயிலின் துணையினமாகக் கருதப்பட்டது. 2005ஆம் ஆண்டில், பறவையியல் வல்லுநர்களான பமீலா ராசுமுசென் மற்றும் ஜான் ஆண்டர்டன் ஆகியோர் தெற்காசியாவில் பறவைகள் நூலில் உருவவியல், இறகுகள், அழைப்புகள் மற்றும் இரண்டு வகைகளும் ஒன்றோடொன்று சேராததின் அடிப்படையில் இரண்டு வகைகளையும் தனித்தனி இனங்களாகக் கருத முடிவு செய்தனர். இந்த கருத்திற்கான ஆதரவு 2010இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது.[3] மேலும் பெரும்பாலான பறவையியலாளர்கள் இப்போது இந்தியத் தங்க மாங்குயிலைத் தனிச் சிற்றினமாகக் கருதுகின்றனர்.[4] பேல்டிசுடேனிகசு இனம் சார்லசு வாரி என்பவரால் பிரித்தறியப்பட்டு துணையினமாக அறிவிக்கப்பட்டு, இந்தியத் தங்க மாங்குயில் ஒற்றைத் தோற்றமுடையதாகத் தீர்மானிக்கப்பட்டது.[5][6]

உணவும் உணவூட்டமும்[தொகு]

இந்த மாங்குயில் பழங்கள், தேன் மற்றும் பூச்சிகளை உண்கின்றன. உண்ணிச்செடி, லாந்தனா காமாரா உட்படப் பல பெர்ரி-தாங்கும் தாவரங்களின் விதைகளை இவை பரப்பும் திறன் கொண்டவை.[7] மேற்குத் தொடர்ச்சி மலைப் பறக்கும் பல்லிகளை வேட்டையாடுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[8]

அச்சுறுத்தல்கள்[தொகு]

இந்த இனத்திலிருந்து விவரிக்கப்பட்ட ஒரு முதலுயிரி இரத்த ஒட்டுண்ணி, ஹீமோப்ரோடியசு ஓரியோலி, பல ஓரியோசு சிற்றினங்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[9] ஆனால் வெவ்வேறு பரம்பரைகளையும் இவை பிரதிநிதித்துவப்படுத்தலாம்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2020). "Oriolus kundoo". IUCN Red List of Threatened Species 2020: e.T103692955A173328151. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T103692955A173328151.en. https://www.iucnredlist.org/species/103692955/173328151. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. William Henry Sykes (1832). "60. Oriolus kundoo". Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London (2): 87. https://biodiversitylibrary.org/page/26730762. 
  3. Jønsson, K.A.; Bowie, R.C.K.; Moyle, R.G.; Irestedt, M.; Christidis, L.; Norman, J.A.; Fjeldså, J. (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33 (2): 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x. 
  4. Lepage, Denis. "Indian Golden-Oriole Oriolus kundoo Sykes, 1832". Avibase. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
  5. Vaurie, Charles (1958). "Systematic notes on Palearctic birds. No. 32, Oriolidae, Dicruridae, Bombycillidae, Pycnonotidae, Nectariniidae, and Zosteropidae". American Museum Novitates 1869: 1–28. 
  6. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  7. Ali, S. (1936). "Economic ornithology in India". Current Science 4: 472–478. http://www.ias.ac.in/jarch/currsci/4/472-478.pdf. 
  8. Balachandran, S. (1998). "Golden oriole Oriolus oriolus preying on flying lizard Draco dussumieri Dum. & Bibr". Journal of the Bombay Natural History Society 95 (1): 115. https://biodiversitylibrary.org/page/48604635. 
  9. Peirce, M.A. (1984). "Haematozoa of Zambian birds VII. Redescription of Haemoproteus orioli from Oriolus oriolus (Oriolidae)". Journal of Natural History 18 (5): 785–787. doi:10.1080/00222938400770651. 
  10. Dimitrov, D.; Zehtindjiev, P.; Bensch, S. (2010). "Genetic diversity of avian blood parasites in SE Europe: Cytochrome b lineages of the genera Plasmodium and Haemoproteus (Haemosporida) from Bulgaria". Acta Parasitologica 55 (3): 201–209. doi:10.2478/s11686-010-0029-z. 

வெளி இணைப்புகள்[தொகு]