பழைய உலக மாங்குயில்
முற்கால மாங்குயில் | |
---|---|
கரும்பிடரி மாங்குயில் (Oriolus chinensis) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
Superfamily: | |
குடும்பம்: | நிகோலஸ் ஆல்வார்ட் விகார்ஸ், 1825
|
Genere | |
see text |
பழைய உலக மாங்குயில் (Old World oriole) பழைய உலகத்தில் இருந்த பேசரின் குடும்பத்தச் சேர்ந்த பறவையினமாகும்.
வகைபிரித்தல் மற்றும் முறைமை
[தொகு]ஓரியோலிடெ குடும்பத்தில், பயோபியஸ், ஃபிங்பேர்ட்ஸ், பிட்டோஹுயிஸ் மற்றும் முற்கால மாங்குயில்களும் அடங்கும்.[1] டர்னகீரிடா குடும்பத்தில் இருந்த பயோபியஸ், 2011இல் ஓரியோலிடே குடும்பத்தில் சேர்க்கப்பட்டன.[2][3] பல வகை மரபணுக்கள் ஒரியளோஸ் பிரிவைப் பிரித்தெடுக்க முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆப்பிரிக்க கறுப்பு தலைகள் கொண்ட பறவைகள் சில நேரங்களில் தனித்துவமான மரபணு கொண்ட பார்பியுஸ் குடும்பம் எனப்படும். ஓரியோலிடெ குடும்பம் நியூ வேர்ல்டு ஓரியோலுடன் தொடர்புடையதல்ல. மாறாக, அவற்றின் ஒத்த அளவு, உணவு, நடத்தை மற்றும் மாறுபட்ட தோற்ற வடிவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த ஒற்றுமைகள் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
பரந்தவகை இனங்கள்
[தொகு]"ஓரியோலிடெ" குடும்பத்தில் மூன்று இனங்கள் உள்ளன.[4]
மரபணு "ஃபிங்பேர்ட்ஸ்" ( 3 இனங்கள்)
மரபணு "பிடோஹுயிஸ்" - (4 இனங்கள்)
மரபணு "ஓரியோலஸ்" - (29 இனங்கள்)
அழிந்தவகை இனங்கள்
[தொகு]"ஓரியோலிடெ" குடும்பத்தில் குறைந்தபட்சம் இரண்டு வகை இனங்கள் அழிந்துள்ளன.
- மரபணு "பியோபியோ" - ( 2 இனங்கள்)[4]
- மரபணு "லாங்கிமோர்னிஸ்"
விளக்கம்
[தொகு]மாங்குயில் மற்றும் ஃபிக்பேர்ட்ஸ் பறவையினங்கள் சுமாரான உடலமைப்பைக் கொண்டவை. இவை 20-30 செ.மீ நீளத்தில் இருக்கும். ஆண் குயில்களை விட பெண் குயில்கள் சற்றே அளவில் சிறியதாக இருக்கும்.[5] இதன் அலகு சற்றே வளைந்து, இரையைப் பிடிப்பதற்கு ஏதுவாக உள்ளது. இதன் இறகுகள் பிரகாசமாகவும், பகட்டாகவும் இருக்கின்றது. ஆண் இனத்தைவிட பெண் இனத்தின் இறகுகள் மந்தமாகவே உள்ளது. ஆஸ்திரேலியன் மாங்குயில்களின் இறகுகள் பெரும்பாலும் தேன்சிட்டு மரபு வழியைச் சார்ந்த "ஃப்ரையாபேர்ட்ஸ்" ஐ ஒத்துள்ளன.[6]
வாழ்விடம்
[தொகு]இவ்வகை பறவையினங்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக காணப்படுகின்றன. மேலும், தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு புலம் பெயர்கின்றன.
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]இனப்பெருக்கம்
[தொகு]மாங்குயில்கள் ஒருதுணை மணம் கொண்டது. பெரும்பாலும் தன் இணையுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றது.[5] இவை தன் கூடுகளை பெரும்பாலும் 'டிராங்கோ', கீச்சான் மற்றும் "ஃப்ரையாபேர்ட்ஸ்" பறவைகளின் கூடுகளுக்கருகில் அமைக்கின்றன. இவ்வாறு அமைத்து தங்களை தற்காத்துக்கொள்கின்றன. இதன் கூடுகள் மரத்தின் கிளையில் ஆழமான கிண்ணம் போன்ற வடிவத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். ஆனால் அதிக எண்ணிக்கையாக ஆறு முட்டைகள் கணக்கிடப்பட்டிருக்கின்றது.
உணவு
[தொகு]மாங்குயில்கள் திறந்த வனப்பகுதிகளில் உயிர் வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு பழங்கள், பெர்ரி மற்றும் தேன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Orioles, drongos & fantails « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-18.
- ↑ Johansson, Ulf; Eric Pasquet; Martin Irestedt (2011). "The New Zealand Thrush: An Extinct Oriole". PLOS ONE 6 (9): e24317. doi:10.1371/journal.pone.0024317. பப்மெட்:21931679.
- ↑ Zuccon, D.; Ericson, P. G. (2012). "Molecular and morphological evidences place the extinct New Zealand endemic Turnagra capensis in the Oriolidae". Molecular Phylogenetics and Evolution 62 (1): 414–26. doi:10.1016/j.ympev.2011.10.013. பப்மெட்:22056604.
- ↑ 4.0 4.1 Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
- ↑ 5.0 5.1 Walther, B; Jones, P (2008). "Family Oriolidae (Orioles and Figbirds)]". In Josep, del Hoyo; Andrew, Elliott; David, Christie (eds.). உலகப் பறவைகளின் உசாநூல். Volume 13, Penduline-tits to Shrikes. Barcelona: Lynx Edicions. pp. 692–713. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-45-3.
- ↑ Diamond J (1982). "Mimicry of friarbirds by orioles". The Auk 99 (2): 187–196. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v099n02/p0187-p0196.pdf.
மேலும் படிக்கவும்
[தொகு]- Jønsson, K.A.; Bowie, R.C.K.; Moyle, R.G.; Irestedt, M.; Christidis, L.; Norman, J.A.; Fjeldså, J. (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33 (2): 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x.
வெளி இணைப்புகள்
[தொகு]- Internet Bird Collection.com: Oriole videos பரணிடப்பட்டது 2016-03-16 at the வந்தவழி இயந்திரம்