அரக்கு மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரக்கு மாங்குயில்
ஓ. டி. டிரைலீ நேபாளத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. டிரைலீ
இருசொற் பெயரீடு
ஓரியோலசு டிரைலீ
(விகோரசு, 1832)
வேறு பெயர்கள்
  • பாசுடர் டிரைலீ

அரக்கு மாங்குயில் (Maroon oriole)(ஓரியலசு டிரைலீ) எனும் சிற்றினப் பறவை ஓரியோலிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

அரக்கு மாங்குயில் முதலில் பாஸ்டர் பேரினத்தின் கீழ் விவரிக்கப்பட்டது. கரும் மாங்குயில், கருப்பு மற்றும் கருஞ்சிவப்பு மாங்குயில் மற்றும் வெள்ளி மாங்குயில்களுடன், இது சிவப்பு மற்றும் கருப்பு மாங்குயில்களின் கிளையினைச் சார்ந்தது.[2]

துணைச்சிற்றினங்கள்[தொகு]

இந்த சிற்றினத்தின் கீழ் நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]

விளக்கம்[தொகு]

அரக்கு மாங்குயில்

அரக்கு மாங்குயில், அரக்கு மற்றும் கருப்பு நிற இறகுகளுடன் கருப்பு தலை, கழுத்து மற்றும் இறக்கைகள் நீல நிற அலகுடன் காணப்படும். பெண் பறவைகள் சற்றே கருமையான உடலையும், இளம் வயதினர் இலகுவான உடலையும் கொண்டுள்ளன.[4] வயது வந்த ஆண் பளபளப்பான இளம் நீலம் கலந்த கருஞ்சிவப்பு-அரக்கு நிறத்தில், கருப்பு தலை, கழுத்து மற்றும் இறக்கைகள் மற்றும் ஒரு செம்பழுப்பு-அரக்கு வாலினைக் கொண்டுள்ளது. பெண்கள் மற்றும் முதிர்ச்சியடையாத ஆண்களுக்குக் கருப்பு நிற கோடுகளுடன் சாம்பல்-வெள்ளை அடிப்பகுதியுடன் காணப்படும். வண்ணங்கள் வரம்பில் ஓரளவு மாறுபடும். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பறவைகள் மங்கலான நிறங்களைக் கொண்டுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ளன பிரகாசமான வண்ணங்களைக் கொண்டுள்ளன. மேலும் ஓரளவு சிவப்பு நிற தொனியுடன் காணப்படும்.

வாழிடமும் பரவலும்[தொகு]

அரக்கு மாங்குயில், வங்கதேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தைவான், தாய்லாந்து, திபெத் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், இது இமாச்சலப் பிரதேசத்திலிருந்து கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மலைகள் வரை காணப்படுகிறது.[5]

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.

நடத்தை[தொகு]

அரக்கு மாங்குயில் தனியாகவோ அல்லது இணையாகவோ காணலாம். கூடு கட்டும் காலம் ஏப்ரல் முதல் மே வரை. கூடு என்பது தாவரத்தோல் நாரினால் ஆழமான பாரிய கோப்பை வடிவிலானது. இது சிலந்தி வலைகளால் பிணைக்கப்பட்டிருக்கலாம். ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் பெற்றோரின் கடமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[5]

உணவு[தொகு]

அரக்கு மாங்குயில் காட்டு அத்தி, பெர்ரி, பூச்சி மற்றும் தேன் ஆகியவற்றை உண்ணுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Oriolus traillii". IUCN Red List of Threatened Species 2018: e.T22706446A130378420. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706446A130378420.en. https://www.iucnredlist.org/species/22706446/130378420. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Jønsson, KA; Rauri C. K. Bowie; Robert G. Moyle; Martin Irestedt; Les Christidis; Janette A. Norman; Jon Fjeldsa (2010). "Phylogeny and biogeography of Oriolidae (Aves: Passeriformes)". Ecography 33: 232–241. doi:10.1111/j.1600-0587.2010.06167.x. http://www.nrm.se/download/18.25ba04a21296cc434f980005871/J%25C3%25B6nsson%2Bet%2Bal%2BOriolidae.pdf. 
  3. "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
  4. "Taiwan Ecological Conservation". பார்க்கப்பட்ட நாள் 29 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 5.2 Ali, Salim (1996). The Book of Indian Birds. India: Oxford University Press. பக். 227. https://archive.org/details/bookofindianbird0000alis. Ali, Salim (1996).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கு_மாங்குயில்&oldid=3819452" இலிருந்து மீள்விக்கப்பட்டது