கருந்தொண்டை மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தொண்டை மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிபார்மிசு
குடும்பம்: ஓரியோலிடே
பேரினம்: ஓரியோலசு
இனம்: ஓ. சாந்தோனோடசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு சாந்தோனோடசு
கோர்சூபீல்டு, 1821

கருந்தொண்டை மாங்குயில் (Dark-throated oriole)(ஓரியோலசு சாந்தோனோடசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது போர்னியோ மற்றும் பிலிப்பீன்சிலிருந்து தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளாகும். இங்கு வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

கருந்தொண்டை மாங்குயில் சில சமயங்களில் பிலிப்பீன்சு மாங்குயில் மற்றும் இசபெலா மாங்குயில் ஆகியவற்றுடன் ஒரு மேம்பட்டச் சிற்றினமாகக் கருதப்படுகிறது.[2] கருந்தொண்டை மாங்குயிலின் மாற்றுப் பெயர்களாகக் கருந்தலை மாங்குயில், மற்றும் மலேசிய மாங்குயில் ஆகியவை அடங்கும். 'கருப்பு-தலை மாங்குயில்' என்ற மாற்றுப் பெயரை, ஓரியோலசு லார்வடசு என்ற பெயருடைய சிற்றினத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.

துணை இனங்கள்[தொகு]

நான்கு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[3]

  • ஓ. சா. சாந்தோனோடசு- கோர்சூபீல்டு, 1821 : மலாய் தீபகற்பம், சுமாத்திரா, சாவகம் மற்றும் தென்மேற்கு போர்னியோ
  • மென்டவாய் கருந்தொண்டை மாங்குயில் (ஓ. சா. மென்டாவி) - சேசன் & குளோசு, 1926 : இந்தோனேசியாவின் சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெந்தாவாய் தீவுக்கூட்டத்தில் காணப்படுகிறது.
  • ஓ. சா. கான்சோபிரினசு - ராம்சே, 1880: முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. போர்னியோ மற்றும் அண்மைத் தீவுகளில் காணப்படுகிறது
  • ஓ. சா. பெர்சுசசு - பேங்சு, 1922 : தென்மேற்கு பிலிப்பீன்சு

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Oriolus xanthonotus". IUCN Red List of Threatened Species 2017: e.T22706369A119431971. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22706369A119431971.en. https://www.iucnredlist.org/species/22706369/119431971. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. "Dark-throated Oriole (Oriolus xanthonotus)". www.hbw.com (ஆங்கிலம்). 2017-02-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.