எத்தியோப்பிய மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பிய மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. மோனாச்சா
இருசொற் பெயரீடு
ஓரியோலசு மோனாச்சா
(ஜிமெலின், 1789)
வேறு பெயர்கள்

துருடசு மோனாச்சா

எத்தியோப்பிய மாங்குயில் (Ethiopian oriole)(ஓரியோலசு மோனாச்சா) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகளாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

எத்தியோப்பிய மாங்குயில் 1789ஆம் ஆண்டில் செருர்மனிய இயற்கை ஆர்வலர் ஜோகன் பிரெட்ரிக் கெமெலின் தனது திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட கரோலஸ் லின்னேயசின் சிஸ்டமா நேச்சுரே பதிப்பில் முறையாக விவரிக்கப்பட்டது. இவர் இதை துர்டசு பேரினத்தில் வகைப்படுத்தி துர்டசு மோனாச்சா என்ற இருசொல் பெயரை உருவாக்கினார். மோனாச்சா என்ற குறிப்பிட்ட பெயருக்கு "துறவி" என்று பிந்தைய இலத்தின் மொழியில் பொருள். 1775ஆம் ஆண்டில் பிரான்சு பல்துறையறிஞர் காம்டே டி பபன் என்பவர் தனது பல-தொகுதி பறவைகளின் இயற்கை வரலாறு (கிசுடோயர் நேச்சர்ல் டெசு ஓய்சாக்சு) நூலில் விவரிக்கப்பட்ட "மோலோக்ஸி டா" அல்லது "அபிசினியின் கன்னியாத்திரி" என்பதன் அடிப்படையில் ஜிமெலின் தனது விளக்கத்தை உருவாக்கினார். எத்தியோப்பிய மாங்குயில் இப்போது 1766-ல் லின்னேயசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரியோலசு பேரினத்தில் வைக்கப்பட்ட 30 மாங்குயில்களில் ஒன்றாகும். பிற பொதுவான பெயர்களில் இருண்ட தலை அல்லது கருப்பு தலை மாங்குயில் மற்றும் அபிசீனியன் மாங்குயில் ஆகியவை அடங்கும்.

துணை இனங்கள்[தொகு]

இரண்டு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • ஓ. மோ. மெனெலிக்கி புளுண்டெல் & லோவட், 1899 – முதலில் ஒரு தனி சிற்றினமாக விவரிக்கப்பட்டது. தெற்கு எத்தியோப்பியாவில் காணப்படுகிறது
  • ஓ. மோ. மோனாச்சா (ஜிமெலின் , 1789) - வடக்கு எத்தியோப்பியா, எரித்திரியாவில் காணப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Oriolus monacha". IUCN Red List of Threatened Species 2016: e.T22706415A94068649. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706415A94068649.en. https://www.iucnredlist.org/species/22706415/94068649. பார்த்த நாள்: 16 November 2021.