விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம் International Commission on Zoological Nomenclature
சுருக்கம்ICZN
உருவாக்கம்18 செப்டம்பர் 1895; 126 ஆண்டுகள் முன்னர் (1895-09-18)
வகைபன்னாடு, அரசு சாரா நிறுவனம்
அமைவிடம்
சேவைப் பகுதிஉலகம் முழுவதும்
உறுப்பினர்கள்
27
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரஞ்சு
வலைத்தளம்Official ICZN website

விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம் (International Commission on Zoological Nomenclature-ICZN) என்பது "விலங்குகளுக்கு அறிவியல் பூர்வமாக நிலைப் புதன்மை மற்றும் பொருத்தமான பெயரிடலுக்காக" அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1895ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 19 நாடுகளைச் சேர்ந்த விலங்கியல் வகைப்பாட்டில் ஆய்வு மேற்கொள்ளும் 27 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது[1][2]

அமைப்பு[தொகு]

இந்த ஆணையமானது ஒரு அமைப்புத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வமைப்பின் வெளியீடுகள் பொதுவாக ICZN குறியீட்டோடு வெளியிடப்படுகிறது. [3]

சர்வதேச உயிரியல் அறிவியல் ஒன்றியம் (ஐ.யூ.பி.எஸ்) (I.U.P.S) நிறுவிய விலங்கியல் பெயரிடலின் பிரிவு [4] மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஆணைக்குழுவின் உறுப்பினரின் பொறுப்புக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஒரு உறுப்பினர் தொடர்ந்து மூன்று முறை மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்படலாம். தொடர்ந்து மூன்று முறை (18 ஆண்டுகள்) சேவைக்குப் பின்னர், உறுப்பினராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்பட குறைந்தது 3 வருட இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.[5]

செயல்பாடுகள்[தொகு]

2014முதல், ஆணையத்தின் பணியினை மேற்கொள்ள இதன் செயலகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் செயல்படுகிறது. முன்னதாக, செயலகம் இலண்டனில் அமைந்திருந்தது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு விலங்கியல் பெயரிடலுக்கான சர்வதேச அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்டது.[6] ஆணைக்குழு விலங்கியல் சமூகத்திற்கு "விலங்குகளின் அறிவியல் பெயர்களைச் சரியான முறையில் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை உருவாக்குதல் மற்றும் பரப்புதல்" குறித்த பணிகளை மேற்கொள்கிறது. [2]

இந்த ஆணையம் விலங்கியல் பெயரிடலுக்கான பன்னாட்டுக் குறியீட்டை வெளியிடுகிறது (பொதுவாக "குறியீடு" அல்லது "ICZN குறியீடு" எனப்படும்). இது விலங்குகளாகக் கருதப்படும் அனைத்து உயிரினங்களுக்கும் முறையான அறிவியல் பெயரிடலுக்கான விதிகளை ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநாடு . ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவால் குறியீட்டின் புதிய பதிப்புகள் பதிப்பாகும். [7] குறியீட்டின் 4வது பதிப்பு (1999) ஏழு நபர்களால் திருத்தப்பட்டது.[8]

ஆணைக்குழு தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றிய தீர்ப்புகளையும் வழங்குகிறது. ஏனெனில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் நடுவர் தேவைப்படலாம். இங்குக் குறியீட்டைக் கடைப்பிடிப்பது பயன்பாட்டின் நிலைப்புத்தன்மைக்கு இடையூறாக இருக்கும் (எ.கா. பாதுகாக்கப்பட்ட பெயரைப் பார்க்கவும்). ஆணைய முடிவுகள் விலங்கியல் பெயரிடலின் செய்தி மடலில் வெளியிடப்பட்டுள்ளன.[2] 2017முதல் இச்செய்தி மடல் இணைய வெளியீடாக மாறியது. இந்த ஆணையத்தின் வெளியீடுகளை வெளியிட, பயோஒன் (BioOne) வெளியீட்டுக் குழுமத்தில் தற்பொழுது இணைந்துள்ளது. இதன் மூலம் தொகுடி 65 (2008) முதல் வெளியிடப்பட்ட செய்தி மடல்களை இணையம் மூலம் பெறலாம்.[9]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About the ICZN - International Commission on Zoological Nomenclature". 2019-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 2.2 "About the ICZN - International Commission on Zoological Nomenclature". 2019-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) பிழை காட்டு: Invalid <ref> tag; name "about" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "about" defined multiple times with different content
  3. "International Code of Zoological Nomenclature".
  4. ICZN Code Art. 77.3.1, ICZN Constitution Art. 3.1.1., 4.4.1, 4.5, 11.1.2, 16.1.3
  5. ICZN Constitution Art. 3.1, 3.2
  6. "International Trust for Zoological Nomenclature". ICZN. 5 அக்டோபர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 October 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. ICZN Constitution Art. 16.2
  8. W. D. L. Ride, H. G. Cogger, C. Dupuis, O. Kraus, A. Minelli, F. C. Thompson, P. K. Tubbs, as given in the ICZN Code 4th edition (printed version) p. IV.
  9. "Title additions & departures". BioOne. 31 August 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]