கருந்தலை மாங்குயில்
Appearance
கருந்தலை மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஓரியோலசு
|
இனம்: | ஓ. சாந்தோர்னசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு சாந்தோர்னசு (லின்னேயஸ், 1758 |
கருந்தலை மாங்குயில் (ⓘ) அல்லது கருந்தலை மாம்பழக் குருவி அ்ல்லது (தென்னிலங்கையில்) மாம்பழத்தி (Black-hooded Oriole) எனப்படுவது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தெற்காசியாவின் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து இந்தோனேசியாவரை காணப்படுகிறது. இலங்கையில் இருக்கும் இதன் துணையினம் ஓரியோலசு சாந்தோர்னசு சிலோனென்சிசு எனப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இப்பறவை மைனாவின் பருமனுள்ளது. இது மரங்களில் வாழக்கூடிய பறவையாகும். இதன் இறக்கை, வால் ஒரங்களில் கரிய நிறத்துடன் இருக்கும். இளச்சிவப்பு அலகும், குருதிபோன்ற சிவந்த கண்களையும் உடையது. ஆல், அத்தி, அரசு போன்றவற்றின் பழங்களையும் பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடியது.
துணை இனங்கள்
[தொகு]கருந்தலை மாங்குயில் சிற்றினத்தில் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[2]
- ஓ. சா. சாந்தோர்னசு. (லின்னேயஸ், 1758): வடஇந்தியாவிலிருந்து வடக்கு மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோசீனா வரை காணப்படுகிறது
- தென்னிந்திய கருந்தலை மாங்குயில் ஓ. சா. மதராசபடாணசு. பிராங்க்ளின், 1831: முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் காணப்படுகிறது.
- ஓ. சா. செலோனென்சிசு. போனபார்டே, 1850: முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. இலங்கையில் காணப்படுகிறது.
- ஓ. சா. ருபேனி. அப்துல்லாலி, 1977: அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஓ. சா. தனகே. குரோடா, 1925: வடகிழக்கு போர்னியோவில் காணப்பட்டது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Oriolus xanthornus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.