பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம்
Appearance
பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம் | |||
---|---|---|---|
| |||
மேலோட்டம் | |||
சட்டப் பேரவை | தமிழ்நாடு சட்டப் பேரவை | ||
கூடும் இடம் | புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை | ||
தவணை | மே 7, 2021 | – 6 மே 2026||
தேர்தல் | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | ||
அரசு | தமிழ்நாடு அரசு | ||
எதிரணி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | ||
இணையதளம் | Official website | ||
உறுப்பினர்கள் | 234 | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
எதிர்க்கட்சித் தலைவர் | எடப்பாடி க. பழனிசாமி | ||
Party control | திராவிட முன்னேற்றக் கழகம் |
பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றம் (16th Tamil Nadu Assembly) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 இல் வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராக எம். அப்பாவு மற்றும் துணைத்தலைவராக கு. பிச்சாண்டியும் 11 மே 2021 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
ஸ்டாலின் தலைமையிலான அரசு
[தொகு]2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 தொகுதிகளைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. மதச் சாற்பற்ற முற்போக்குக் கூட்டணி மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த திமுக 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.[2]
அமைச்சரவை
[தொகு]துறை | அமைச்சர் | கவனிக்கும் துறைகள் | பதவி காலம் |
---|---|---|---|
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய , பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட அமலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் | மே 7,2021 முதல் |
நீர்வளத்துறை அமைச்சர் | துரைமுருகன் | சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் | மே 7,2021 |
நகர்ப்புற வளர்ச்சித் துறை | கே. என். நேரு | நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல். | மே 7,2021 முதல் |
பொதுப்பணித் துறை | எ. வ. வேலு | பொதுப்பணிகள் (கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், கரும்பும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு | மே 7,2021 முதல் |
பள்ளிக் கல்வித் துறை | அன்பில் மகேஷ் பொய்யாமொழி | பள்ளிக் கல்வித் துறை | மே 7, 2021 முதல் |
கூட்டுறவு | இ. பெரியசாமி | கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் மேனாள் ராணுவத்தினர் நலன். | மே 7, 2021 முதல் |
வருவாய் துறை | சாத்தூர் ராமச்சந்திரன் | வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை. | மே 7, 2021 முதல் |
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ | தங்கம் தென்னரசு | தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள். | மே 7, 2021 முதல் |
சட்டம் | எஸ். ரகுபதி | சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் | மே 7, 2021 முதல் |
வீட்டுவசதித் துறை | எஸ். முத்துசாமி | வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் | மே 7, 2021 முதல் |
உயர்கல்வி | க. பொன்முடி | உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல். | மே 7, 2021 முதல் |
வேளாண்மை - உழவர் நலத்துறை | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு. | மே 7, 2021 முதல் |
ஊரகத் தொழில் துறை | தா. மோ. அன்பரசன் | ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம். | மே 7, 2021 முதல் |
செய்தித் துறை | எம். பி. சாமிநாதன் | செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை, அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம். | மே 7, 2021 முதல் |
சமூக நலன், மகளிர் உரிமை | கீதா ஜீவன் | மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம். | மே 7, 2021 முதல் |
மீன்வளம்-மீனவர் நலத்துறை | அனிதா ராதாகிருஷ்ணன் | மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு | மே 7, 2021 முதல் |
போக்குவரத்துத் துறை | ஆர். எஸ். ராஜகண்ணப்பன் | போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம். | மே 7, 2021 முதல் |
வனத்துறை | கா. இராமச்சந்திரன் | வனத்துறை | மே 7, 2021 முதல் |
உணவுத் துறை | அர. சக்கரபாணி | உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு. | மே 7, 2021 முதல் |
மின்சாரத்துறை | வே. செந்தில்பாலாஜி | மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்). | மே 7, 2021 முதல் |
கைத்தறி | ஆர். காந்தி (அரசியல்வாதி) | கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம். | மே 7, 2021 முதல் |
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை | மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி) | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன். | மே 7, 2021 முதல் |
வணிக வரி, பதிவுத் துறை | பி. மூர்த்தி | வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைப்கள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு. | மே 7, 2021 முதல் |
பிற்படுத்தப்பட்டோர் நலன், மற்றும் சீர் மரபினர் நலன். | எஸ். எஸ். சிவசங்கர் | பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நலன். | மே 7, 2021 முதல் |
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள். | பி. கே. சேகர் பாபு | இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள். | மே 7, 2021 முதல் |
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை | பழனிவேல் தியாகராஜன் | நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள். | மே 7, 2021 முதல் |
பால்வளத் துறை அமைச்சர் | சா. மு. நாசர் | பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி. | மே 7, 2021 முதல் |
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் | செஞ்சி கே.எஸ்.மஸ்தான் | சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு வாரியம் | மே 7, 2021 முதல் |
சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை | சிவ. வீ. மெய்யநாதன் | சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை | மே 7, 2021 முதல் |
தொழிலாளர் நலன் | சி. வி. கணேசன் | தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு. | மே 7, 2021 முதல் |
தகவல் தொழில்நுட்பத் துறை. | மனோ தங்கராஜ் | தகவல் தொழில்நுட்பத் துறை. | மே 7, 2021 முதல் |
சுற்றுலாத்துறை | மா. மதிவேந்தன் | சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் | மே 7, 2021 முதல் |
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் | என். கயல்விழி செல்வராஜ் | ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் | மே 7, 2021 முதல் |