சா. மு. நாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சா. மு. நாசர் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சராவாரும். திமுகவைச் சேர்ந்தவரான சா.மு. நாசர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க. சார்பில் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.[1] இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக பால்வளத் துறை (பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி) அமைச்சசராக பதவியேற்றார்.[2] இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.[3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._மு._நாசர்&oldid=3553268" இருந்து மீள்விக்கப்பட்டது