நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | எம். எஸ். காசி விஸ்வநாதன் மனோகர் பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | கல்யாண் குமார் தேவிகா |
வெளியீடு | ஆகத்து 2, 1963 |
நீளம் | 4472 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1]
நடிப்பு
[தொகு]இசை
[தொகு]இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.
வரவேற்பு
[தொகு]நெஞ்சம் மறப்பதில்லை தமிழ்த் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6]
மறு ஆக்கம்
[தொகு]2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குநர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5]
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Randor Guy (2013-02-02). "Nenjam Marapathillai 1963". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode". The Hindu. 2006-03-17. Archived from the original on 2008-04-11. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "'Traditional music should not be diluted'". The Hindu. 2002-12-29. Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Special » Tamil Cinema Classics – Nenjam Marappathillai". 600024.com. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ 5.0 5.1 "Sridhar's film to be remade by Selvaraghavan - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Old is still gold - Tamil Movie News". Indiaglitz.com. 2007-02-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.