டெட்ராநைட்ரேடோபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெட்ராநைட்ரேடோபோரேட்டு (Tetranitratoborate) என்பது நான்கு நைட்ரேட்டு தொகுதிகள் போரானுடன் சேர்ந்து உருவாகும் எதிர்மின் அயனியாகும். இந்த அயனியின் வாய்ப்பாடு [B(NO3)4]−ஆகும். டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேடோபோரேட்டு[1] அல்லது டெட்ராயெத்தில் அமோனியம்டெட்ராநைட்ரேடோபோரேட்டு[2] போன்ற பெரிய நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து இவை உப்புகளை உருவாக்குகின்றன.

சி.ஆர்.குல்பெர்ட்டும் எம்.டி.மார்சலும் 1966 ஆம் ஆண்டில் போரான் நைட்ரேட்டு தயாரிக்க முயன்று தோல்வியடைந்த பின்னர் இந்த அயனியைக் கண்டறிந்தனர்.[1]. டெட்ராநைட்ரேடோபோரேட்டு அயனியுடன் தொடர்புடைய போரான் நைட்ரேட்டு இதன் உருவாக்கத்தை தடை செய்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் -78 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது[2] நைட்ரேட்டுக்குப் பதிலாக பெர்குளோரேட்டு தொகுதிகளைக் கொண்ட தொடர்புடைய மற்ற அயனிகள் சற்று அதிக நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. போரானுக்குப் பதிலாக அலுமினியம் கொண்டுள்ள டெட்ராநைட்ரேடோ அலுமினேட்டும் [3] இதேபோல சற்று அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன.

உருவாக்கம்[தொகு]

டெட்ராமெத்தில் அமோனியம் குளோரைடு BCl3 உடன் வினைபுரிந்து (CH3)4NBCl4 சேர்மத்தை உருவாக்குகிறது. பின்னர் டெட்ராகுளோரோபோரேட்டு -20° செல்சியசு வெப்பநிலையில் N2O4 உடன் வினைபுரிந்து டெட்ராமெத்தில் அமோனியம்நைட்ரேட்டோபோரேட்டும் NO2Cl மற்றும் Cl2.போன்ற வாயுக்களும் உற்பத்தியாகின்றன [2].

20 பாகை செல்சியசு வெப்பநிலையில் குளோரோஃபார்மில் உள்ள BCl3 உடன் ஒரு உலோக நைட்ரேட்டு பலநாட்களுக்கு வினைபுரிந்து குளோரோநைட்ரேட்டோபோரேட்டு [Cl3BNO3]− என்ற ஒரு நிலைத்தன்மையற்ற இடைநிலைப்பொருள் உருவாகிறது.

MNO3 + BCl3 M[Cl3BNO3]
4M[Cl3BNO3] 3M[BCl4] + MB(NO3)4][4]

பண்புகள்[தொகு]

டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோ போரேட்டின் அகச்சிவப்பு அலைமாலையில் 1612 செ.மீ−1 முக்கிய வரிகளில் அதிர்வுகளை வெளிப்படுத்தி v4 சமச்சீர்மையை இயல்பாக்குகிறது. இதேபோல 1297 , 1311 செ,மீ−1 வரிகளில் அதிர்வுகளை வெளிப்படுத்தி v1 சமச்சீர்மையை இயல்பாக்குகிறது. ஒரு ஆக்சிசன் வழியாக நைட்ரேட்டு பிணைந்திருப்பதாலேயே இந்த அதிர்வுகள் உண்டாகின்றன[1].

டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டின் அடர்த்தி 1.555 ஆகும். நிறமற்ற படிகத்தன்மையுடன் இது காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது 51 °செ மற்றும் 62° வெப்பநிலையில் சிலவகையான நிலைமாற்றத்திற்கு உட்படுகிறது. 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைவடைந்து வாயுவாக மாறுகிறது. 112 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பத்தை உமிழ்கிறது[2]

டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டு குளிர் நீரில் கரையாமலும் சூடான நீரில் சிறிதளவும் கரைகிறது. நீருடன் இது வினைபுரிவதில்லை. திரவ அமோனியா, அசிட்டோ நைட்ரில், மெத்தனால், டைமெத்தில்பார்மமேட்டு போன்றவற்றில் கரைகிறது. கந்த டை ஆக்சைடுடன் வினைபுரிகிறது[1][5]

அறை வெப்பநிலையில் டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டு சில மாதங்களுக்கு நிலைத்தன்மையுடன் வெடிக்காமல் காணப்படுகிறது[1]

கார உலோக டெட்ராநைட்ரேடோபோரேட்டுகள் அறைவெப்பநிலையில் சிதைவற்று நிலைப்புத்தன்மையற்று உள்ளன[4]

1-எத்தில்-3-மெத்தில்-இமிடசோலிமியம் டெட்ராநைட்ரேட்டோபோரேட்டு 2002 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அயனித்திரவமான இது -25 ° செல்சியசில் திண்மமாக மாறுகிறது[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Guibert, C. R.; M. D. Marshall (1966). "Synthesis of the Tetranitratoborate Anion". Journal of the American Chemical Society 88 (1): 189–190. doi:10.1021/ja00953a051. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  2. 2.0 2.1 2.2 2.3 Titova, K. V.; V. Ya. Rosolovskii (1970). "Tetraalkylammonium nitratoborates". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 19 (12): 2515–2519. doi:10.1007/BF00854900. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  3. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549231066. பார்க்கப்பட்ட நாள் 3 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 Titova, K. V.; V. Ya. Rosolovskii (1975). "Reaction of nitrates of monovalent cations with BCl3". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 24 (10): 2246–2248. doi:10.1007/BF00929774. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  5. C.C. Addison and D. Sutton. Progress in Inorganic Chemistry. Vol. 8. p. 216.
  6. Jones, C. Bigler; Ralf Haiges; Thorsten Schroer; Karl O. Christe (2006). "Oxygen-Balanced Energetic Ionic Liquid". Angewandte Chemie International Edition 45 (30): 4981–4984. doi:10.1002/anie.200600735. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராநைட்ரேடோபோரேட்டு&oldid=3651783" இலிருந்து மீள்விக்கப்பட்டது