2014 உலகக்கோப்பை கால்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo FIFA
பிரேசில் 2014

2014 ஃபீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு பிரேசிலின் கொடி பிரேசில்
நாட்கள் 13 சூன் - 13 சூலை
அணிகள் 32
மைதானங்கள் 12 (12 நகரங்களில்)
2010
2018

2014 உலகக்கோப்பை கால்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20வது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறுகின்றன.

இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னர் 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது.