வில்ஹெம் ரொண்ட்ஜென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்ஹெம் ரொண்ட்ஜென்
Wilhelm Röntgen
வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென்
வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென்
பிறப்பு மார்ச் 27 1845
லென்னெப், புரூசியா
இறப்பு பெப்ரவரி 10 1923 (அகவை 77)
மியூனிக், ஜெர்மனி
தேசியம் ஜெர்மனியின் கொடி ஜெர்மனி
துறை இயற்பியலாளர்
நிறுவனம் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகம்
ஹோஹென்ஹெயிம்
கெயிசன் பல்கலைக்கழகம்
வூர்ஸ்பேர்க் பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
Alma mater ETH சூரிக்
சூரிக் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர் ஆகஸ்ட் குண்ட்
முக்கிய மாணவர் ஹேர்மன் மார்ச்,
ஆப்ராம் லோஃப்
அறியப்பட்டது எக்ஸ் கதிர்கள்
பரிசுகள் படிமம்:Nobel Prize.png 1901 இல் இயற்பியலில் நோபல் பரிசு
ரொண்ட்ஜெனால் எடுக்கப்பட்ட ஆல்பேர்ட் வொன் கோல்லிக்கர் என்பவரின் கையின் ஊடுகதிர் அலைப் படிமம்

வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென் (Wilhelm Conrad Röntgen, மார்ச் 27, 1845பெப்ரவரி 10, 1923) என்பவர் ஜேர்மனியைச் சேர்ந்த Würzburg பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள் அல்லது எக்ஸ் கதிர்கள் என்றும் ரொண்ட்ஜென் கதிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

வில்ஹெம் ரொண்ட்ஜென் மார்ச் 27, 1845 இல் ஜேர்மனியின் லென்னெப் என்ற இடத்தில் ஒரு புடவை தயாரிக்கும் வியாபாரி ஒருவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லட் கொன்ஸ்டன்ஸ் ஃபுரோவெயின் என்பவராவார். மார்ச் 1848 இல் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். வில்ஹெம் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை ஊட்ரெக்ட் தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார்.

1865 இல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பொலிடெக்னிக் கல்லூரியில் (ETH Zurich) சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869 இல் சூரிக் பல்கலைக்கழகத்தில் Ph.D. பட்டம் பெற்றார்.

[தொகு] தொழில்

1874 இல் ரொண்ட்ஜென் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். 1875 இல் Hohenheim, Württemberg இல் விவசாயக் கல்லூரியில் பேராசிரியரானார். 1876 இல் ஸ்ட்ராஸ்பூர்க் திரும்பி அங்கு இயற்பியல் பேராசிரியரானார். 1879 இல் கெயிசன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் 1888 இல் University of Würzburg இலும் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். 1900 இல் மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார்.

[தொகு] குடும்பம்

  • மனைவி: அன்னா பேர்த்தா லூட்விக் (1872 - 1919)
  • பிள்ளைகள்: ஜோசபீன் பேர்த்தா லூட்விக் (வளர்ப்பு மகள், அன்னாவின் சகோதரர் மகள்)

[தொகு] விருதுகள்

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901 இல் வழங்கப்பட்டது. இப்பணப்பரிசு முழுவதையும் அவர் தனது பல்கலைக்கழகத்துக்கே வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற அவர் மறுத்து விட்டதும் அல்லாமல் தான் கண்டுபிடித்த கதிர்களுக்கு தனது பெயரை சூட்டவும் அவர் மறுத்து விட்டார்.[மேற்கோள் தேவை].

[தொகு] படிமங்கள்

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்