விக்கிரமசீலா
விக்கிரமசீலா विक्रमशिला | |
---|---|
சிதலமடைந்த விக்கிரமசீலாவின் முக்கிய தூபி | |
இருப்பிடம் | பாகல்பூர், பிகார், இந்தியா |
ஆயத்தொலைகள் | 25°19′29″N 87°17′05″E / 25.32472°N 87.28472°E |
வகை | பௌத்த கல்வி மையம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | பொ.ஊ. 8-9ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு |
நிகழ்வுகள் | தில்லி சுல்தான் பக்தியார் கில்ஜியால் 1200இல் சிதைக்கப்பட்டது. |
விக்கிரமசீலா (Vikramashila) (IAST: Vikramaśilā) பாலப் பேரரசு மற்றும் நந்தர்கள் காலத்தில் தற்கால பிகார் மாநிலத்தில் பௌத்த சமயத்தின் முக்கிய கல்வி மையமாக விளங்கியது. பாலப் பேரரசர் தர்மபாலர் (பொ.ஊ. 783–820) விக்கிரமசீலா பௌத்த கல்வி மையத்தை நிறுவினார்.[1][2] இக்கல்வி மையத்தை தில்லி சுல்தான் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைகள் பொ.ஊ. 1200 முற்றிலும் சிதைத்து விட்டது.[3] பண்டைய விக்கிரமசீலா நகரம், தற்கால பிகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தின் ஆண்டிசக் எனும் கிராமத்தின் பெயர் கொண்டுள்ளது. இக்கிராமம் பாகல்பூரிலிருந்து கிழக்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விக்கிரமசீலாவைப் பற்றிய குறிப்புகள் திபெத்திய பௌத்த சாத்திரங்கள் மூலமாக அறியப்படுகிறது.[4]
நாளாந்தா மற்றும் தக்சசீலாவைப் போன்று விக்கிரமசீலா பௌத்தக் கல்வி மையத்தில் நூற்றிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்றனர்.
படக்காட்சிகள்
[தொகு]-
விக்கிரமசீலா அருங்காட்சியகம்
-
விக்கிரமசீலா பல்கலைகழகத்தின் தூண்கள்
-
விக்கிரமசீலாவில சிதலங்கள்
-
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விக்கிரமசீலாவின் வரலாறு
-
விக்கிரமசீலாவின் பராமரிப்பு பணிகள்
-
தூபியைச் சுற்றியுள்ள தோட்டங்கள்
-
சிதிலங்களுக்கிடையே ஒரு கருங்கல் தூபி
-
சுவர்களில் தேவதைகளின் சிற்பங்கள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2009-11-18 at the Stanford Web Archive. Khilji later moved to Bengal and fought with the Sena dynasty
- ↑ Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen 42 (2): 141–155. doi:10.1163/1568527952598657.
- ↑ Sanderson, Alexis. "The Śaiva Age: The Rise and Dominance of Śaivism during the Early Medieval Period." In: Genesis and Development of Tantrism,edited by Shingo Einoo. Tokyo: Institute of Oriental Culture, University of Tokyo, 2009. Institute of Oriental Culture Special Series, 23, pp. 89.
- ↑ "Excavated Remains at Nalanda". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.