உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசுபதம் சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானது. பசுபதியை முழுமுதற் தெய்வமாகக் கொண்டது. மகாபாரதம், "பசுபதி, ஸ்ரீகண்ட எனும் நாமங்களை உடையவரும், உமாபதியுமாகிய சிவனே பாசுபதம் எனும் ஞானத்தை உபதேசஞ் செய்தார்" என்கின்றது. இலகுலீசர் என்பவரால் கொள்கைப் படுத்தப்பட்டது. மௌரியர் காலம் முதலாகவே இந்தியாவில் செல்வாக்குப் பெற்ற பிரிவாக விளங்குகின்றது. மகபாபாரதத்தில் அர்ஜுனன் சிவனை நோக்கித் தவமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாசுபதர் எனப்பட்ட காட்டு முனிவர்கள் மனிதர்களைப் பலி கொடுக்கும் கொடியவர்களாக மாறியிருந்தனர். இவர்களுக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த சிறுத்தொண்டர் கூடத் தன் பிள்ளையையே பலியிட்டிருக்கிறார். இத்தகைய கொடிய பிரிவினரை இராமாயண நூற்றந்தாதி வியாக்கியானம் எழுதிய பிள்ளை லோகம் சீயர் தம் விரிவுரையில் கண்டிக்கப்பட்டுள்ளார்.[1]

லகுலீச பாசுபதம்

[தொகு]

லகுலீச பாசுபதம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் பாசுபதத்தின் பிரிவாகும். இந்த சைவப்பிரிவானது நகுலீச பாசுபதம் என்றும், நகுலீச தத்துவம் என்றும் அறியப்படுகிறது. இப்பிரிவினை அமைத்தவர் நகலீசர் ஆவார். இவர் பசுபத்தினை தோற்றுவித்த கண்டரின் சீடர். அதனால் இப்பிரிவு அவருடைய பெயரினையும் இணைத்தே அழைக்கப்பெறுகிறது. காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவு செயல்படுகிறது.

கருவி நூல்

[தொகு]

நயன்தரும் சைவசித்தாந்தம் (நூல்) - நா ஞானகுமாரன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. *மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபதம்&oldid=3913708" இலிருந்து மீள்விக்கப்பட்டது