பஞ்சாப் லோக் காங்கிரஸ்
Appearance
பஞ்சாப் லோக் காங்கிரஸ் அரசியல் கட்சியான்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்கால் 2 நவம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது.[1][2]19 செப்டம்பர் 2022 அன்று, பஞ்சாப் லோக் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.
பின்னணி
[தொகு]பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக, அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து 18 செப்டம்பர் 2021 அன்று விலகினார்.[3] பின் 2 நவம்பர் 2021 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியை துவக்கினார்.