திருநெல்வேலி வட்டம்
Appearance
திருநெல்வேலி வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி இரட்டை நகரங்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சி இவ்வட்டத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் மதவக்குறிச்சி, கங்கைகொண்டான், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி என 4 குறுவட்டங்களும், 62 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 642,835
- ஆண்கள் = 317,425
- பெண்கள் = 325,410
- குடும்பங்கள் = 166,202
- கிராமப்புற மக்கள்தொகை % = 22.6%
- எழுத்தறிவு = 87.36%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,025 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 64984
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 110,975 மற்றும் 1,760
சமயம்
[தொகு]- இந்துக்கள் = 72.8%
- இசுலாமியர்கள் = 16.09%
- கிறித்தவர்கள் = 10.78%
- பிறர்= 0.06%
கல்வி நிலையங்கள்
[தொகு]இவ்வட்டத்தின் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் சில:
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
- மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி
- சிறீ சாரதா மகளிர் கல்லூரி
- செயின்ட் சேவியர் கல்லூரி
- ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி