2013: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: nds-nl:2013 |
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: vec:2013 |
||
வரிசை 162: | வரிசை 162: | ||
[[ur:2013ء]] |
[[ur:2013ء]] |
||
[[uz:2013]] |
[[uz:2013]] |
||
[[vec:2013]] |
|||
[[vi:2013]] |
[[vi:2013]] |
||
[[vls:2013]] |
[[vls:2013]] |
18:26, 1 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2013 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2013 MMXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 2044 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2766 |
அர்மீனிய நாட்காட்டி | 1462 ԹՎ ՌՆԿԲ |
சீன நாட்காட்டி | 4709-4710 |
எபிரேய நாட்காட்டி | 5772-5773 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2068-2069 1935-1936 5114-5115 |
இரானிய நாட்காட்டி | 1391-1392 |
இசுலாமிய நாட்காட்டி | 1434 – 1435 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 25 (平成25年) |
வட கொரிய நாட்காட்டி | 102 |
ரூனிக் நாட்காட்டி | 2263 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4346 |
ஆண்டு 2013 (MMXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. இது கி.பி. 2013ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 13ஆம் ஆண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் 13ஆம் ஆண்டாகும். மேலும் 2010களின் நான்காம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 1 – ஃப்ரான்சு நாட்டின் மார்செய்லியும் சுலோவோக்கியா நாட்டின் காசைசும் ஐரோப்பியக் கலாசாரத் தலைநகரங்களாக அறிவிக்கப்பட்டது.
- சனவரி 1 – வளைகுடா கூட்டுறவுக் கழகத்தைச் சேர்ந்த நாடுகள் ஒரு நிதியத்தை அறிமுகப்படுத்தின.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
- மே 10 – தென் பசிபிக் பகுதிகளில் வளையக் கதிரவ ஒளிமறைவு ஏற்படும், இது ஆத்திரேலியாவில் பார்க்கப்படும்.
- சூன் – ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும். இது அபிள் விண்வெளித் தொலைநோக்கிக்குப் பதிலாகச் செயலாற்றும்.
- ஆகத்து – பெப்பிகொலம்போ என்ற விண்கலம் புதன் கோளுக்கு ஏவப்படும்.
- செப்டம்பர் 7 – 2020ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக்கை நடத்தும் நாட்டைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பியூனஸ் அயர்சில் நடைபெறும்.
- நவம்பர் 3 – கலப்பினக் கதிரவ ஒளிமறைப்பு (முழு ஒளிமறைப்பும் வளைய ஒளிமறைப்பும் சேர்ந்து ஏற்படும்)
நாள் தெரியாதவை
- சீனம் தனது முதல் ஆளிலா நிலவுப் பயணத்தை மேற்கொள்ளும்.[1]
- நாசாவின் வீனஸ் இன்-சிடு எக்ஸ்ப்ளோரர் எனும் திட்டமானது நியூ ஃப்ரான்டியர்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும்.
- செவ்வாய்க் கோளின் வளிமண்டல ஆய்வுக்காக நாசாவானது மாவென் (MAVEN) என்ற விண்கலத்தை ஏவும்.
- எரிபொருள் சிக்கனம் கொண்ட ஏர்பஸ் A350 - 900 ஆனது தனது சேவையை கோடைக் காலத்திலிருந்து துவங்கும்.[2]
- நினைவுகொள் மின்தடையை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]
- தற்போதைய கிழக்கு ஆப்பிரிக்கச் சமூகம் ஆனது 2013க்குள் ஒரே நாடாக ஒன்றிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[4]