வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வென்னாந்தூர் ஊராட்சிஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் இராசிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 13,475 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் (ஆங்கிலம்:Vennandur block), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இராசிபுரம் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் ஆகும். இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெண்ணந்தூரில் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளது. [3]

நிலவியல்[தொகு]

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் ( 726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர்-ஏரி வெண்ணந்தூருக்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் அலவாய்மலை உள்ளது இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு அருகில் உள்ள ஆறு. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்:

 1. ஏ. ஜி. பாளையம்,
 2. அக்கரைப்பட்டி, வெண்ணந்தூர்
 3. ஆலம்பட்டி
 4. அலவாய்பட்டி
 5. கள்ளன்குளம்
 6. கட்டணச்சம்பட்டி
 7. கீலூர்
 8. குட்டலாடம்பட்டி
 9. மதியம்பட்டி
 10. மாட்டுவேலம்பட்டி
 11. மின்னக்கல்
 12. மூலக்காடு
 13. நாச்சிப்பட்டி
 14. நடுப்பட்டி
 15. கொமாரபாளையம் எண். 3
 16. சௌதாபுரம்
 17. பழந்திண்ணிபட்டி
 18. பல்லவநாயக்கன்பட்டி
 19. பொன்பரப்பிபட்டி
 20. ஆர். புதுப்பாளையம்
 21. செம்மண்டபட்டி
 22. தேங்கல்பாளையம்
 23. தொட்டிபட்டி
 24. தொட்டியவலசு

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,045 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 32,107 ஆண்கள், 29,938 பெண்கள் ஆவார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. Pachayat Union and Village Pachayats of Namakkal District
 4. NAMAKKAL DISTRICT