பொத்தனூர்
பொத்தனூர் | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | நாமக்கல் | ||
வட்டம் | பரமத்தி-வேலூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | எஸ். உமா, இ. ஆ. ப | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
18,455 (2011[update]) • 2,307/km2 (5,975/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/pothanur |
பொத்தனூர் (ஆங்கிலம்:Pothanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். இதனருகில் புகழூர் (காகித ஆலை) மற்றும் தொடருந்து நிலையம் உள்ளது. கந்தசாமி கவுண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது.[3]
அமைவிடம்
[தொகு]நாமக்கல் - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், நாமக்கல்லிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பொத்தனூர் பேரூராட்சி உள்ளது. இதன் அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,147 வீடுகளும், 18,455 மக்கள்தொகையும் கொண்டது. [5] இந்த ஊரில் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர் ,
வரலாறு
[தொகு]சங்க காலப் புலவர் குன்றூர் கிழார் மகனார் என்பவர் இவ்வூரைப் போந்தை என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் நெடுவேள் ஆதன். இவ்வூரில் ஓரெயில் என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Namakkal - Pothanur".
- ↑ பொத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pothanur Population Census 2011
- ↑ புறநானூறு 338