எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எருமைப்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,570 பேர் ஆவர். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,054 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 435 பேர் ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அழங்காநத்தம்
  2. போடிநாயக்கன்பட்டி
  3. பொம்மசமுத்திரம்
  4. தேவராயபுரம்
  5. காவக்காரன்பட்டி
  6. கொடிக்கால்புதூர்
  7. கோணங்கிப்பட்டி
  8. மேட்டுப்பட்டி
  9. முத்துகாபட்டி
  10. முட்டாஞ்செட்டி
  11. பழையபாளையம்
  12. பவித்திரம்
  13. பவித்திரம் புதூர்
  14. பெருமாபட்டி
  15. பொட்டிரெட்டிப்பட்டி
  16. புதுக்கோட்டை
  17. ரெட்டிப்பட்டி
  18. செவந்திபட்டி
  19. சிவநாயக்கன்பட்டி
  20. திப்ரமாதேவி
  21. வடவாத்தூர்
  22. வலவந்தி
  23. வரதராஜபுரம்
  24. வராகூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  2. Census of Namakkal district 2011
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்