பிள்ளாநல்லூர்
தோற்றம்
| பிள்ளாநல்லூர் | |
| ஆள்கூறு | 11°25′56″N 78°07′54″E / 11.4323°N 78.13170°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| வட்டம் | இராசிபுரம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,181 (2011[update]) • 2,399/km2 (6,213/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 4.66 சதுர கிலோமீட்டர்கள் (1.80 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/pillanallur |
பிள்ளாநல்லூர் (ஆங்கிலம்: Pillanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மிகுந்த பகுதியாகும்.
அமைவிடம்
[தொகு]பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குத் தெற்கில் நாமக்கல் 21 கி.மீ.; கிழக்கில் இராசிபுரம் 8 கி.மீ.; வடக்கில் சேலம் 28 கி.மீ. மற்றும் மேற்கில் திருச்செங்கோடு 32 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]4.66 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,127 வீடுகளும், 11,181 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பிள்ளாநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pillanallur Population Census 2011