வேலூர் (நாமக்கல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேலூர்(நாமக்கல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

வேலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

இப்பேரூராட்சி பகுதியில் வாழை, வெற்றிலை, கோரை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஜேடார்பாளையம் தடுப்பணை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

வேலூர் பேரூராட்சியானது கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 37-இல் காவேரி ஆற்றின் வடகரையில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் மோகனூர் 16 கிமீ; மேற்கில் கபிலர்மலை 13 கிமீ; தெற்கில் கரூர் 22 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

15 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [2]

கல்வி[தொகு]

கந்தசாமி கவுண்டர் கலைக் கல்லூரியும், பிஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இங்கே அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_(நாமக்கல்)&oldid=2690695" இருந்து மீள்விக்கப்பட்டது