உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. புதுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரா.புதுப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரா.புதுப்பட்டி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் இராசிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். உமா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

7,478 (2011)

435/km2 (1,127/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.20 சதுர கிலோமீட்டர்கள் (6.64 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/r-pudupatty

ஆர். புதுப்பட்டி (ஆங்கிலம்:R.Pudupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினந்தோறும் 70 எல்.பி.சி.டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது


அமைவிடம்

[தொகு]

ஆர். புதுப்பட்டி பேரூராட்சிக்கு தெற்கில் 41 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் கிழக்கே ஆத்தூர் 43 கிமீ; வடக்கில் சேலம் 38 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

17.20 சகிமீ பரப்பும், பேரூராட்சி மன்ற 15 உறுப்பினர்களையும், 31 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,105 வீடுகளும், 7,478 மக்கள்தொகையும் கொண்டது. [4]

பள்ளி௧ள்

[தொகு]
  • அரசினர் உயர்நிலைப் பள்ளி, இரா.புதுப்பட்டி
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்௧ப் பள்ளி, இரா.புதுப்பட்டி
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்௧ப் பள்ளி, இரா.பு.காட்டூர்
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, முனியப்பன் புதூர்
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்௧ப் பள்ளி, வெள்ளகல்பட்டி

அலுவலகங்கள்

[தொகு]
  • பேரூராட்சி அலுவலகம் தொலைபேசி : 04287 - 244160, 244580
  • தமிழ்நாடு மின்வாரியதுறை, உதவிபொறியாளர், இரா.புதுப்பட்டி, தொலைபேசி : 04287 - 244543
  • இரா.புதுப்பட்டி அஞ்சல் அலுவலகம் தொலைபேசி : 04287 - 244111
  • இரா.புதுப்பட்டி தொலைபேசி இணைப்பகம் பொது விசாரணை மற்றும் குறைகள் : 04287 - 244198
  • அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம், நாமகிரிப்பேட்டை, தொலைபேசி : 04287 - 242071
  • காவல்நிலையம், நாமகிரிப்பேட்டை, தொலைபேசி : 04287 - 244198
  • தீயணைப்புத் துறை, இராசிபுரம், தொலைபேசி : 04287 - 222801
  • டி.பி.யெஸ் வங்கி (DBS Bank), இரா.புதுப்பட்டி, தொலைபேசி : 04287 - 244223

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆர். புதுப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. R.Pudupatti Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._புதுப்பட்டி&oldid=3866619" இலிருந்து மீள்விக்கப்பட்டது