உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலாம்பாளையம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் திருச்செங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. உமா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

20,286 (2011)

1,966/km2 (5,092/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.32 சதுர கிலோமீட்டர்கள் (3.98 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/aalampalayam

ஆலாம்பாளையம் (ஆங்கிலம்:Alampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஈரோடு மாநகராட்சியின் மேற்கு புறத்தில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் [3], காவேரி ரயில் நிலையமும்[4] உள்ளது. இப்பேரூராட்சியின் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும்

அமைவிடம்

[தொகு]

ஆலம்பாளையம் பேரூராட்சி, திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்செங்கோடு 15 கி.மீ.; மேற்கில் ஈரோடு 7 கி.மீ.; வடக்கில் பரமத்தி-வேலூர் 45 கி.மீ.; தெற்கில் குமாரபாளையம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

10.32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,785 வீடுகளும், 20,286 மக்கள்தொகையும் கொண்டது.[6]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-18. Retrieved 2019-04-10.
  4. https://indiarailinfo.com/arrivals/cauvery-cv/6598
  5. "ஆலம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-10. Retrieved 2019-04-10.
  6. Alampalayam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பாளையம்&oldid=4251060" இலிருந்து மீள்விக்கப்பட்டது