சீராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீராப்பள்ளி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் இராசிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,403 (2011)

6/km2 (16/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/seerapalli

சீராப்பள்ளி (ஆங்கிலம்:Seerapalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.சீராப்பள்ளி பகுதியில் புகழ் பெற்ற காளியம்மன் மற்றும் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியானது வேளாண்மை, சேகோ ஆலைகள், மஞ்சள் குடோன்கள் நிறைந்த ஊர் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

இராசிபுரம் - ஆத்தூர் மாநில நெடுஞ்சாலை எண் 79-இல் அமைந்த சீராப்பள்ளி பேரூராட்சிக்கு தெற்கில் 35 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் வடக்கில் சேலம் 37 கிமீ; கிழக்கில் நாமகிரிப்பேட்டை 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,344 வீடுகளும், 12,403 மக்கள்தொகையும் கொண்டது. [4]

முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம்[தொகு]

சீராப்பள்ளியின் முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம் ஆகும். இப்பொழுது பெரும்பாலும் விசைத் தறிகளே உள்ளன. இவ்வூரில் கைத்தறி நெசவு அழியும் தருவாயில் உள்ளது. இவ்வூரில் நெய்யப்படும் ஆடைகள் சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் வாயிலாக வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.இவ்வூரினைச் சுற்றிலும் விவசாயம் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இங்கு அதிக அளவில் கிழங்கு பயிரப்படுவதால் அதனை சார்ந்து சவ்வரிசி தொழிற்சாலைகள் (சேகோ பேக்டரி) இப்பகுதியில் அதிகம் உள்ளது.

வல்வில் ஓரி மன்னன்[தொகு]

சீராப்பள்ளியில் சிறப்பு மிக்க செவந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் வல்வில்ஓரி மன்னன் வந்து வணங்கி சென்ற வரலாறு உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் ஆண்டுதோரும், அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள துளக்க சூடாமணி மாரியம்மன் பண்டிகைக்கு சென்று வருவது வழக்கம். ஆண்டுதோறும் இவ்வூரில் பங்குனி மாதம் வரும் இறுதி புதன் கிழமையன்று பூமிதித்து மாரியம்மன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சீராப்பள்ளி பேரூராட்சியின் இணையதளம்
  4. Seerapalli Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீராப்பள்ளி&oldid=3445576" இலிருந்து மீள்விக்கப்பட்டது