வெண்ணந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வென்னாந்தூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வெண்ணந்தூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் இராசிபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர் திரு.S.N.K.P.செல்வம்
மக்கள் தொகை 14,568[3] (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இங்கே சனிக்கிழமை சந்தையில் பொருள் வாங்க மற்றும் விற்க அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்தை வெண்ணந்தூரின் மையத்தில் அமைந்துள்ளது.

வரலாறு மற்றும் பெயர் காரணம்[தொகு]

 • வெண்ணந்தூருக்கு 300 வருட வரலாறே உள்ளது. அதற்கு முன் இது சோழ நாட்டிற்கும் வேங்கை நாட்டிற்கும் இடையில் உள்ள ஒரு காட்டு பகுதி. அறிஞர்கள் இவ்வூரில் வெண்ணெய் கொடி தாவரங்கள் அதிகம் இருந்ததால் இவ்வூருக்கு வெண்ணெய்நல்லூர் என்று பின் அது வெண்ணந்தூர் என்று பெயர் பெற்றது என்கின்றனர்.
 • ஆயினும் சில அறிஞர்கள் இவ்வூரின் மேற்கே திருமணிமுத்தாறு எனும் ஆறு, ஏற்காடு மன்ஜவாடி எனும் இடத்தில் உருவாகி தெற்கே நன்சை இடையார் எனும் இடத்தில் கரூர் மாவட்டத்தில் காவேரியுடன் கலக்கிறது. திருமணிமுத்தாரின் இரு கரையில் முத்தும், வெண்நந்தும்(சங்கு) சிதறி கிடக்கும் ஆகையால் இவ்வூர் வெண்ணந்தூர் என பெயர் பெற்றது என்கின்றனர்.
 • மலைமான் பாரி மன்னரின் மகளை திருமணம் செய்ய வடக்கிருந்து இறந்த கபிலர் ஔவையிடம் வேண்ட மும்முடி மன்னர்களின் ஒப்புதலில். திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ள அருள்மிகு கரபுரநாதர் ஆலமத்தில் செய்துவைத்தார்.பாண்டிய மன்னன் திருமணிமுத்தாற்றின் முத்துக்களை எடுத்து மதுரை மீனாட்சி அம்மன்க்கு மாலை செய்து அணிவித்தான்.மும்முடி மன்னர்களாகிய பாண்டியன், சோழன், சேரன் ஆகியவர்கள் முறையே தங்கிய ஊர்களான வீரபாண்டி, உத்தமசோழபுரம், சேலம் வெண்ணந்தூர் அருகே வடமேற்கில் அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

வெண்ணந்தூர் அலவாய்மலையில் இருந்து

வெண்ணந்தூர் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் (726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர் ஏரி வெண்ணந்தூர்க்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் கிழக்கில் அலவாய்மலை உள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு ஆறு வெண்ணந்தூர் அருகில் உள்ள ஆறு. இது சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. வெண்ணந்தூருக்கு வடக்கே பொன்சொரிமலையும் கஞ்சமலையும் அமைந்துள்ளது மற்றும் தெற்கே மதியம்பட்டி ஏரி அமைந்துள்ளது.தெற்கே மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்களின் பண்பாடு கலாச்சாரம்[தொகு]

இங்குள்ள மக்கள் பேசும் மொழி தமிழ் மொழியாகும்.முக்கிய தொழில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் ஆகும்.இங்கு வாழும் பெருவாரியான மக்கள் இந்துக்கள்

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

அருள்மிகு முத்துகுமரன் சுவாமி
 • ஐந்து முனியப்பன் கோவில்
அருள்மிகு ஐந்து முனியப்பன்-வெண்ணந்தூர்
 • அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில்
 • அருள்மிகு சின்ன மாரியம்மன் கோவில்
 • அருள்மிகு செல்வ மாரியம்மன் கோவில்
 • அருள்மிகு பூபதி மாரியம்மன் கோவில்
 • அருள்மிகு தீர்த்தகிரீஷ்வரர் கோவில்
 • அருள்மிகு வாமன நாராயணன் சுவாமி கோவில்
 • அருள்மிகு விஸ்வநாதர் கோவில்
 • அருள்மிகுபெருமாள் கோவில்
 • அருள்மிகு அண்ணன்மார் தங்காள் சுவாமி திருக்கோவில்
 • புனித மரிய மதலேனால் தேவாலயம்
 • மசூதி

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

 • மாரியம்மன் பண்டிகை
 • முனியப்பன் பண்டிகை
 • பொங்கல் பண்டிகை
 • தீபாவளி பண்டிகை
 • தை பூசம் பண்டிகை
 • கந்த சஷ்டி பண்டிகை
 • கார்த்திகை தீப பண்டிகை
 • தமிழ் புத்தாண்டு பண்டிகை
 • சுகந்திர தினம்
 • குடியரசு தினம்
 • ஆங்கில புத்தாண்டு பண்டிகை
 • ரமலான் பண்டிகை
 • புனித மரிய மதலேனால் தேவாலய

திருமண மண்டபங்கள்[5][தொகு]

 • செங்குந்தர் திருமண மண்டபம்
 • சுளுக்கு பிள்ளையார் கோவில் திருமண மண்டபம்
 • ஸ்ரீ பூபதி மாரியம்மன் திருமண மண்டபம்

உணவு முறை[தொகு]

 • பிரதான உணவு அரிசி உணவுகள்
 • குச்சி கிழங்கு உணவு வகைகள்(மரவள்ளி கிழங்கு)
 • முருக்கு, அதுரசம்
 • நுங்கு, பனை உணவு வகைகள்

கல்வி நிறுவனங்கள்[தொகு]

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி-1

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி-2

தில்லையாடி வள்ளியம்மை உயர்நிலை பள்ளி

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி

ஸ்ரீ வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லூரி

ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி

மருத்துவமனைகள்[தொகு]

 • அரசு மருத்துவமனை வெண்ணந்தூர்.
 • கருணாகரன் மருத்துவமனை, வெண்ணந்தூர்.
 • செந்தில் மருத்துவமனை, வெண்ணந்தூர்.
 • தங்கதுரை மருத்துவமனை, வெண்ணந்தூர்.

தொழில்[தொகு]

வெண்ணந்தூரின் முக்கிய தொழில் விவசாயமும், நெசவுமாகும்.

 • விவசாயம்:

சில பூர்வீக மக்கள் ஏற்றுக்கொண்ட தொழில் விவசாயம் ஆகும். வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியை சுற்றி மலைகளும், மேற்கே திருமணிமுத்தாறும், பல ஏரிகளும் உள்ளடக்கியது.

ஆறு, ஏரிகளை ஓட்டிய பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிரடப்படுகிறது. தென்னை மரங்கள் வளர்க்கப்படுகிறத.

மற்றபகுதியில் தக்காளி, வெண்டை, கத்திரி, கீரைவகைகள், புதினா, கொத்தமல்லி பயிரடப்படுகிறது.

வெண்ணந்தூரின் பெரும்பகுதி செம்மண் பூமி ஆகும். எனவே மரவள்ளி கிழங்கு வகைகள், வேர்கடலை, பருத்தி ஏராளமாக பயிரிடப்படுகிறதது.

 • நெசவு:

வெண்ணந்தூரின் பூர்வீக மக்களில் ஒரு பிரிவினர் நெசவு தொழிலை வழிவழியாக செய்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் ஆரம்பகாலத்தில் கைதரி மூலம் நெசவு செய்தனர். தற்பொழுது இயக்குதரி, விசைத்தரி, தானியங்கு தரி என வளர்ச்சியடைந்துள்ளது.

இம்மக்கள் பருத்தி ஆடைகளை நெய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். துண்டு, சட்டை துணி, கால் சட்டை துணி, உள்ளாடை துணி, மேலாடை துணி, பாவாடை துணி, வேட்டி துணி, சீலை துணி முதலியனவாகும்.

 • சந்தைப்படுத்தல்:

இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருள் மற்றும் விவசாய பொருட்கள் துணி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகும்

 • சவ்வரிசி ஆகியவை உற்பத்தி:

இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் சவ்வரிசி உற்பத்தி நடைபெறுகிறது.

தற்பொழுது இங்கே வணிகம் சிறு குறு தொழில்கள் உணவகங்கள் அமைக்கப்படுகின்றது.

போக்குவரத்து[தொகு]

தரைவழி[தொகு]

 • வெண்ணந்தூர் வழியாக ராசிபுரத்திற்கும் இளம்பள்ளைக்கும் தமிழ்நாடு போகுவரத்து கழகத்தின் மூலமாக 15ஆம் எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 • வெண்ணந்தூரில் இருந்தது சேலத்திற்கு தமிழ்நாடு போகுவரத்து கழகத்தின் மூலமாக 51,33,13/40,40 எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 • வெண்ணந்தூரில் இருந்தது ஆத்தூர், மேட்டூர் அணை, எடப்பாடி ஆகிய இடங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மூலமாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 • இது தவிர பல தனியார் பேருந்துகள் சேலம், ஈரோடு, ராசிபுரம், நாமக்கல், சங்ககிரி இயக்கப்படுகிறது.

இரயில் வழி[தொகு]

 • அருகில் உள்ள இரயில் நிலையம் மல்லூர் இரயில் நிலையம் (8கிமீ) ஆகும். இங்கு பயணிகள் இரயில் மட்டும் நிறுத்தப்படும் இங்கிருந்து சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர்க்கு செல்லலாம்.
 • ராசிபுரம் இரயில் நிலையம் (15கிமீ): இங்கு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சில விரைவு இரயில் நிருத்தப்படும் ஆகையால் சேலம் வழியாக பெங்களூரு, மற்றும் நாமக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கும், காரைக்கால் வரை செல்லலாம்.
 • சேலம் சந்திப்பு (25கிமீ): சேலம் சந்திப்பு மூலமாக நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்றுவரலாம்.

வான்வழி[தொகு]

சேலம் மற்றும் கோவை விமானநிலையம்

அரசியல்[தொகு]

பிரதான கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகும்.இவ்வூர் இராசிபுரம் சட்டசபை மற்றும் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியாகும். திரு.சுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். திருமதி.சரோஜா அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திரு.செல்வம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆவார்.[6]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. CENSUS OF INDIA 2011, NAMAKKAL DISTRICT
 4. List of Town Panchayats Name in Tamil Nadu
 5. http://townpanchayat.in/vennandur
 6. "பேரூராட்சி தலைவர்".

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணந்தூர்&oldid=2525239" இருந்து மீள்விக்கப்பட்டது