வெண்ணந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெண்ணந்தூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர் திரு.S.N.K.P.செல்வம்
மக்கள் தொகை 13,475 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கே சனிக்கிழமை சந்தையில் பொருள் வாங்க மற்றும் விற்க அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்தை வெண்ணந்தூரின் மையத்தில் அமைந்துள்ளது.

பகுதி[தொகு]

வரலாறு மற்றும் பெயர் காரணம்:[தொகு]

     வெண்ணந்தூருக்கு 300 வருட வரலாறே உள்ளது. அதற்கு முன் இது சோழ நாட்டிற்கும் வேங்கை நாட்டிற்கும் இடையில் உள்ள ஒரு காட்டு பகுதி. அறிஞர்கள் இவ்வூரில் வெண்ணெய் கொடி தாவரங்கள் அதிகம் இருந்ததால் இவ்வூருக்கு வெண்ணெய்நல்லூர் என்று பின் அது வெண்ணந்தூர் என்று பெயர் பெற்றது என்கின்றனர். ஆயினும் சில அறிஞர்கள் இவ்வூரின் மேற்கே திருமணிமுத்தாரு எனும் ஆரு வடகே ஏற்காடு மன்ஜவாடி எனும் இடதில் உருவாகி தெற்கே நன்சை இடையார் எனும் இடத்தில் கரூர் மாவட்டத்தில் காவேரியுடன் கலக்கிறது. திருமணிமுத்தாரின் இரு கரையில் வெண் நந்து(சங்கு) சிதறி கிடக்கும் ஆகையால் இவ்வூர் வெண்ணந்தூர் என பெயர் பெற்றது என்கின்றனர்.

நிலவியல் :[தொகு]

வெண்ணந்தூர் அலவாய்மலையில் இருந்து

வெண்ணந்தூர் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் ( 726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர்-ஏரி வெண்ணந்தூர்க்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் கிழக்கில் அலவாய்மலை உள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு வெண்ணந்தூர் அருகில் உள்ள ஆறு. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. வடக்கே பொன் சொரி மலையும் கஞ்ச மலையும் அமைந்துள்ளது. தெற்கே மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வென்னாந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்:[தொகு]

  • ஏ. ஜி. பாளையம்,
  • அக்கரைப்பட்டி,
  • ஆலம்பட்டி,
  • அலவாய்பட்டி,
  • கள்ளன்குளம்,
  • கட்டணச்சம்பட்டி,
  • கீரணூர்,
  • குட்டலாடம்பட்டி,
  • மதியம்பட்டி,
  • மாட்டுவேலம்பட்டி,
  • மின்னக்கல்,
  • மூலக்காடு,
  • நாச்சிப்பட்டி,
  • நடுப்பட்டி,
  • கொமாரபாளையம் எண். மூன்று,
  • ஓ.சௌதாபுரம்,
  • பழந்திண்ணிபட்டி,
  • பல்லவநாயக்கன்பட்டி,
  • பொன்பரப்பிபட்டி,
  • ஆர். புதுப்பாளையம்,
  • செம்மாண்டபட்டி,
  • தேங்கல்பாளையம்,
  • தொட்டிபட்டி,
  • தொட்டியவலசு.

மக்கள் வகைப்பாடு:[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,475 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். வென்னாந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. வென்னாந்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கிய இடங்கள்:[தொகு]

  • முத்துகுமரன் சுவாமி கோவில்
அருள்மிகு முத்துகுமரன் சுவாமி
அருள்மிகு முத்துகுமரன் சுவாமி
  • ஐந்து முனியப்பன் கோவில்
அருள்மிகு முனியப்பன்
அருள்மிகு ஐந்து முனியப்பன்-வெண்ணந்தூர்
  • அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில்
  • அருள்மிகு சின்ன மாரியம்மன் கோவில்
  • அருள்மிகு செல்வ மாரியம்மன் கோவில்
  • அருள்மிகு பூபதி மாரியம்மன் கோவில்
  • அருள்மிகு தீர்த்தகிரீஷ்வரர் கோவில்
  • அருள்மிகு வாமன நாராயணன் சுவாமி கோவில்
  • அருள்மிகு விஸ்வநாதர் கோவில்
  • அருள்மிகுபெருமாள் கோவில்
  • புனித மரிய மதலேனால் தேவாலயம்
  • மசூதி

கட்டப்படுகிறது:[தொகு]

அருள்மிகு ஐயப்பன் கோவில

அருள்மிகு அங்காளம்மன் கோவில்

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

  • மாரியம்மன் பண்டிகை
  • முனியப்பன் பண்டிகை
  • பொங்கல் பண்டிகை
  • தீபாவளி பண்டிகை
  • தை பூசம் பண்டிகை
  • கந்த சஷ்டி பண்டிகை
  • கார்த்திகை தீப பண்டிகை
  • தமிழ் புத்தாண்டு பண்டிகை
  • சுகந்திர தினம்
  • குடியரசு தினம்
  • ஆங்கில புத்தாண்டு பண்டிகை
  • ரமலான் பண்டிகை

உணவு முறை[தொகு]

  • பிரதான உணவு அரிசி உணவுகள்
  • குச்சி கிழங்கு உணவு வகைகள்(மரவள்ளி கிழங்கு)
  • முருக்கு, அதுரசம்
  • நுங்கு, பனை உணவு வகைகள்

கல்வி நிறுவனங்கள்[தொகு]

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி-1

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி-2

தில்லையாடி வள்ளியம்மை உயர்நிலை பள்ளி

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி

ஸ்ரீ வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லூரி

ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி

மருத்துவமனைகள்[தொகு]

அரசு மருத்துவமனை வெண்ணந்தூர்

தொழில்[தொகு]

  • விவசாயம்
  • நெசவு

போக்குவரத்து[தொகு]

தரைவழி[தொகு]

  • வெண்ணந்தூர் வழியாக ராசிபுரத்திற்கும் இளம்பள்ளைக்கும் தமிழ்நாடு போகுவரத்து கழகத்தின் மூலமாக 15ஆம் எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
  • வெண்ணந்தூரில் இருந்தது சேலத்திற்கு தமிழ்நாடு போகுவரத்து கழகத்தின் மூலமாக 51,33,13/40,40 எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
  • வெண்ணந்தூரில் இருந்தது ஆத்தூர், மேட்டூர் அணை, எடப்பாடி ஆகிய இடங்களுக்கு தமிழ்நாடு போகுவரத்து கழகத்தின் மூலமாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
  • இது தவிர பல தனியார் பேருந்துகள் சேலம், ஈரோடு, ராசிபுரம், நாமக்கல், சங்ககிரி இயக்கப்படுகிறது.

இரயில் மார்க்கம்[தொகு]

  • அருகில் உள்ள இரயில் நிலையம் மல்லூர் இரயில் நிலையம் (8கிமீ)ஆகும். இங்கு பயணிகள் இரயில் மட்டும் நிருத்தப்படும் இங்கிருந்து சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர்க்கு செல்லலாம்.
  • ராசிபுரம் இரயில் நிலையம்(15கிமீ): இங்கு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சில விரைவு இரயில் நிருத்தப்படும் ஆகையால் சேலம் வழியாக பெங்களூரு, மற்றும் நாமக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கும், காரைக்கால் வரை செல்லலாம்.
  • சேலம் சந்திப்பு(25கிமீ):சேலம் சந்திப்பு மூலமாக நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்றுவரலாம்.

ஆகாய மார்க்கம்[தொகு]

சேலம் மற்றும் கோவை விமானநிலையம்

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணந்தூர்&oldid=2451523" இருந்து மீள்விக்கப்பட்டது