விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி
விக்கி நிர்வாகிகள் பள்ளி என்னும் இத்திட்டம், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பல நிர்வாகிகளை உருவாக்கிப் பயிற்றுவித்து, தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கோடு பரிந்துரைக்கப்படுகிறது.
பின்னணி
[தொகு]பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக நம்மால் ஒரு நிர்வாகியைக் கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. பழைய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கொள்கையும் முறையும் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல முயற்சிகள் செய்தும் நம்மால் புதிய கொள்கையையும் உருவாக்க முடியவில்லை. 5 ஆண்டுகளாக இப்படிப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்காமல் இருப்பது மிகவும் விக்கி ஆரோக்கியம் அற்ற நிலை ஆகும். இதை உடனடியாக மாற்றும் நோக்கில் இத்திட்டம் முன்மொழியப்படுகிறது.
தமிழ் விக்கிப்பீடியா தொடக்க காலத்தில், அதாவது 2005 - 2013 காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நான்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து வந்தோம். இந்த அடிப்படையில், நாம் கடந்த 5 ஆண்டுகளில் மேலும் 20 நிர்வாகிகளையாவது இனங்கண்டு பயிற்றுவித்திருக்க வேண்டும். அதற்குத் தகுதி உள்ள எத்தனையோ பேர் நம்மிடையே உள்ளனர். ஆனால், இவர்களைத் தேர்தெடுக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று ஏற்கனவே உள்ள நிர்வாகி தேர்ந்தெடுக்கும் முறையும் ஒருவரை அப்பொறுப்பில் இருந்து விலகச் செய்வதற்கு நம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லை என்பதுமேயாகும்.
தற்போது இதற்கு ஒரு நுட்பத் தீர்வு கிடைத்துள்ளது. அதாவது, புதிய நிர்வாகிகளை உருவாக்கும் போது அவர்களை நிரந்தரமாக நிர்வாகிகள் ஆக்காமல், குறிப்பிட்ட காலத்துக்கு அந்த அணுக்கத்தைக் கொடுத்து பிறகு தொடர்ந்து புதுப்பித்து வரலாம். உலகெங்கும் பல விக்கிப்பீடியாக்களில் மேலாளர்கள் நிர்வாக அணுக்கத்தைத் தரும் போது இந்த முறையையே பின்பற்றுகிறார்கள். இது நம்முடைய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பில் உள்ள தேக்கநிலையைத் தீர்க்க வல்லது. ஒரு நிர்வாகி தன்னுடைய பணியை முறையாக ஆற்றாமல் விட்டுவிடுவாரா என்ற தயக்கத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு முறையை மிகக் கடுமையாக வைப்பதற்குப் பதில், அதில் ஆர்வமுள்ள அனுபவமுள்ள பயனர்களுக்கு அந்த அணுக்கத்தைத் தந்து மற்ற நிர்வாகிகள் அவர்களைத் தொடர்ந்து வழிகாட்டி வர முடியும்.
மிக அற்புதமான தெளிவான முடிவு .இதை நான் வரவேற்கிறேன். வீக்கிபீடியாவில் 100 விழுக்காடு உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த கட்டுரைகளை உருவாக்கி உலகிற்கு அளிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிபுணர் தேவை. இது சாத்தியமானால், பல இலட்சக்கணக்கான திறன் மிகு அறிவுப் பொக்கிஷங்கள் கட்டுரை வடிவில் நமக்குக் கிடைக்கும். எனது நன்றி கலந்த வணக்கங்களையும், வாழ்த்துகளையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இளையதமிழோன் (பேச்சு) 10:20, 27 சூலை 2020 (UTC)
பரிந்துரை (முதல் வரைவு)
[தொகு]முதற்கட்டமாக, 10 நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று முன்மொழிகிறேன்.
இவர்கள்:
இன்றைய தேதி நிலவரத்தின் படி,
- குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்
மற்றும்/அல்லது
- குறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்
ஆகியவற்றைச் செய்து
- கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
- பொதுவாக மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
- பொதுவாக தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
- பொதுவாக தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்
இருந்தால் போதுமானது.
இந்தப் பண்புகளை உடைய பத்து பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காகப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய நிர்வாகப் பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒரு வார காலம், இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியே உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளை பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது
இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
- பத்து பயனர்களுக்கு
- அடுத்த மூன்று மாதங்களுக்கு
உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். இதில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போர் ஒவ்வொருவரும் மற்றொரு புதியவருக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).
மூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப தொடர்ந்து அடுத்து
- 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
- 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
- நிலையான நிர்வாக அணுக்கம்
என்று செயற்படுத்தலாம்.
இது குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். கருத்துகளுக்கு ஏற்ப இந்தப் பரிந்துரையை மேம்படுத்தி, அதன் பிறகு புதிய கொள்கையை வாக்கெடுப்புக்கு விட்டுச் செயற்படுத்தத் தொடங்குவோம். இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம். நன்றி --இரவி (பேச்சு) 20:07, 6 திசம்பர் 2018 (UTC)
கருத்துகள்
[தொகு]உங்கள் கருத்துகளைக் இதன் கீழே தெரிவிக்கலாம்:
- இரவி தாங்கள் கூறும் யோசனை மிகச்சரியானது, எதிர்காலத்தில் விக்கிப்பீடியாவின் நலனைக் கருத்தில்கொண்டும், அடுத்த தலைமுறை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:12, 7 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 01:34, 8 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:29, 8 திசம்பர் 2018 (UTC)
- இது சிறந்த அணுகுமுறை.--Kanags (பேச்சு) 02:34, 8 திசம்பர் 2018 (UTC)
- யோசனை சரியானது.--நந்தகுமார் (பேச்சு) 02:39, 8 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு --ஞா. ஸ்ரீதர்ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 03:21, 8 திசம்பர் 2018 (UTC)
- நீண்ட காலமாக நிர்வாகிகள் தெரிவு நடைபெறாமல் இருந்த நிலையில் இது மிகச்சிறந்த தீர்வு. --சிவகோசரன் (பேச்சு) 03:25, 8 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--அருளரசன் (பேச்சு) 04:09, 8 திசம்பர் 2018 (UTC)
- நல்ல முன்னெடுப்பு. தமிழ் விக்கிக்கு புதிய நபர்கள் தேவை. 3 மாதம் என்பது மிகவும் குறைவாக உள்ளதாக தோன்றுகிறது. 6 மாதமாக இருந்தால் நன்றாக இருக்கும் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:06, 8 திசம்பர் 2018 (UTC)
- I will write in Tamil later. BTW, is it voting since user use {{ஆதரவு}}? --AntanO (பேச்சு) 13:55, 8 திசம்பர் 2018 (UTC)
- மூன்று மாதங்கள் அணுக்கம் வழங்கிப் பின்னர் நீடிப்பு செய்வதென்பது காலவிரயம் என நினைக்கிறேன். அணுக்கம் திரும்பப் பெறப்படுமா என்று மூன்று மாத அழுத்தம் பயனர்களுக்குத் தேவையில்லை. அணுக்கம் வழங்கும் போதே எதிர்பார்ப்புகளைத் தெளிவுப்படுத்தி வழங்கலாம். மாறாகப் பொதுவாக, பயன்படுத்தாத நிர்வாக அணுக்கத்தை மீளமைப்பது தொடர்பாக விவாதித்து கொள்கை வகுக்க வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:38, 8 திசம்பர் 2018 (UTC)
ஆதரவு-- த.சீனிவாசன் (பேச்சு) 16:34, 11 திசம்பர் 2018 (UTC)
- இந்த பரிந்துரையை வரவேற்கிறேன். --கார்த்திகேயன் (பேச்சு) 03:20, 12 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:19, 28 திசம்பர் 2018 (UTC)
@Neechalkaran and Balajijagadesh:, அந்தந்த விக்கிகளில் அதிகாரிகள் இல்லாத நிலையில், மேலாளர்கள் (Steward) நிர்வாக அணுக்க வாக்கெடுப்பு முடிவுகளைக் கவனித்து நிர்வாக அணுக்கம் அளிக்கிறார்கள். இதனை ஒவ்வொரு ஆறு மாதமும் திரும்பத் திரும்பப் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், நாம் முதல் முறை மட்டுமே மூன்று மாதங்கள் தரப் பரிந்துரைக்கிறோம். அதன் பிறகு 6 மாதம், 1 ஆண்டு, பிறகு கால எல்லை இன்றி நீட்டிப்பு வழங்குவது என்று பரிந்துரைத்திருக்கிறோம்.
இப்படி குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை புதுப்பிப்பது என்பது விக்கி நெறிமுறைகளுக்கு முரணாகச் செயற்படும் நிர்வாகிகளின் அணுக்கத்தை நீக்குவதை எளிதாக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. மாறாக, அணுக்கத்தைத் தக்க வைக்கவே ஒருவர் குறிப்பிட்ட அளவு அல்லது முறையில் பங்களிக்க வேண்டும் என்று எந்த அழுத்தமும் இல்லை. அதாவது பங்களிக்க இயலாவிட்டாலோ குறைவாகப் பங்களித்தாலோ பரவாயில்லை. ஒவ்வொருவரின் இயல்பு வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால். விக்கிக் கொள்கைகளுக்கு முரணாக ஒருவர் செயற்பட எத்தனிப்பதைத் தடுப்பதற்கு மட்டும் தான் இந்த checks and balances தேவைப்படுகிறது.
ஒப்பீட்டளவில் ஒரு தேர்வு மிக எளிதாக அமைந்தால் இது போன்ற தக்க checks and balances தேவை. அதே தேர்வு முறை கடினமாக இருந்தால் checks and balances தேவையில்லை. மிகக் கடினமான தேர்வு முறையை வைப்பதன் மூலம் 100% சிறந்த நிர்வாகியையும் அவரைத் தேர்ந்தெடுக்கும் முறையையும் வரையறை செய்ய முயன்றே கடந்த 5 ஆண்டுகளாக தேங்கி நின்று விட்டோம். ஒருவர் மீது புகார் ஏதும் இல்லாத நிலையில், அதிகாரிகளே தானாக இந்த நிர்வாக அணுக்கங்களின் காலாவதித் தேதியைக் கவனித்து நீட்டிப்புச் செய்வதற்குப் புதிய கொள்கையில் வகை செய்யலாம். இதன் மூலம் புதிய நிர்வாகிகளுக்கு கால விரயமோ பதற்றமோ இருக்காது. பத்து இருபது மேலாளர்கள் உலக விக்கிகள் முழுவதையும் நிர்வகிக்கும் சூழலில், தமிழ் விக்கியில் 10 புதிய நிர்வாகிகளுக்கு அவ்வப்போது இப்படி நீட்டிப்பு வழங்குவது அதிகாரிகளுக்குப் பெரிய நேரம் விரயம் கிடையாது.
ஒருவர் 2 ஆண்டுகளுக்கு மேல் விக்கியில் எந்தச் செயற்பாடும் இன்றி இருந்தால் அவருடைய அணுக்கம் மீளப்பெறப்படும் என்பதே உலகளாவிய விக்கிக் கொள்கை. அதைத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. அண்மையில் தமிழ் விக்கிநூல்களில் எனக்கு இருந்த அணுக்கம் கூட இவ்வாறே திரும்பப் பெறப்பட்டுள்ளது :) செயற்பாடற்ற நிருவாகிகளின் அணுக்கத்தை நீக்க இதுவே போதுமானது என்று நினைக்கிறேன். இது ஒரு வகையான வலைப் பாதுகாப்பு நடவடிக்கை தான்.
எப்படி, எல்லா பயனர்களுக்கும் கட்டுரை எழுதும் அணுக்கம் இருக்கிறது என்பதாலேயே அவர்கள் கட்டுரை எழுதுவது கட்டாயம் இல்லையோ, அது போலவே ஒரு பயனரை நம்பி நிர்வாக அணுக்கம் தந்த காரணத்தாலேயே அவர் தொடர்ந்து நிர்வாகப் பணியாற்றி தன்னுடைய நம்பகத் தன்மையை நிறுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு சில பயனர்களிடம் மட்டும் நிர்வாக அணுக்கம் இருந்தால் தான் இந்த அழுத்தம் கூடும். மாறாக, நிறைய பயனர்களுக்கு அணுக்கம் இருந்தால் ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொருவர் தொடர்ந்து நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார்கள்.
இந்தப் புதிய முறை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதிகாரிகள் தேர்வுக்கும் இதே போன்ற ஒரு முறையை (அந்த அணுக்கத்துக்குத் தேவையான கூடுதல் விதிகளுடன்) அடுத்து உருவாக்கலாம்.
மற்ற பயனர்களின் கருத்துகளையும் கவனித்து நாளை மறுநாள் மேம்படுத்தி இரண்டாவது சுற்றுப் பரிந்துரையை முன்வைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:31, 12 திசம்பர் 2018 (UTC)
பரிந்துரை (இரண்டாம் வரைவு)
[தொகு](முதல் வரைவில் இருந்து மாறுபட்ட இடங்கள் சாய்வு, தடித்த எழுத்துகளில் சுட்டப்பட்டிருக்கிறது.)
முதற்கட்டமாக, 10 நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று முன்மொழிகிறேன்.
இவர்கள்:
நிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,
- குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்
மற்றும்/அல்லது
- குறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்
ஆகியவற்றைச் செய்து
- கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
- பொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
- பொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
- பொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்
இருந்தால் போதுமானது.
இந்தப் பண்புகளை உடைய பத்து பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய நிர்வாகப் பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒரு வார காலம், இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளை பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது
இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
- பத்து பயனர்களுக்கு
- அடுத்த மூன்று மாதங்களுக்கு
உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். இதில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போர் ஒவ்வொருவரும் மற்றொரு புதியவருக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).
மூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப தொடர்ந்து அடுத்து
- 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
- 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
- நிலையான நிர்வாக அணுக்கம்
என்று செயற்படுத்தலாம்.
- 3 மாத காலத்துக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் புதிய நிர்வாகிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.
- நிர்வாக அணுக்கத்தைப் பெற்றமையாலேயே ஒரு பயனர் குறிப்பிட்ட அளவு கூடுதலாக விக்கி, நிர்வாகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
- இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம்.
- இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து, அதிகாரிகள் தெரிவிற்கும் இதே போன்ற முறையினைச் செயற்படுத்தலாம். ஆனால், அப்பொறுப்புக்கு ஏற்ப வேறு வகையான விதிகள் முன்மொழியப்பட்டு தனியே இன்னொரு புதிய கொள்கை வகுக்க வேண்டி வரும்.
கருத்துகள்
[தொகு]மேற்கண்ட இரண்டாம் வரைவு குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே முதல் வரைவுக்குத் தங்கள் ஏற்பைத் தெரிவித்தவர்கள், மீண்டும் தங்கள் ஏற்பைப் பதியத் தேவையில்லை. கூடுதல் மாற்றங்கள், திருத்தங்கள் தேவைப்பட்டால் மட்டும் தங்கள் கருத்துகளைப் பதிந்தால் போதுமானது. நீங்கள் இப்போது வாக்கிடத் தேவையில்லை. கருத்துகளை மட்டும் சொன்னால் போதும். புதிதாக வரும் கருத்துகளுக்கு ஏற்ப இந்த இரண்டாம் வரைவை மேம்படுத்தி, முறையான கொள்கையை வாக்கெடுப்பினை நோக்கி நகர்வோம். திசம்பர் 24 நள்ளிரவு வரை (இந்தியா/இலங்கை நேரம்) இந்த இரண்டாம் வரைவுக்கான கருத்துக் கேட்பு நடைபெறும். நன்றி --இரவி (பேச்சு) 19:18, 16 திசம்பர் 2018 (UTC)
- ஒவ்வொரு முறையும் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து தயார் செய்வது சரியாக இருக்கும் என கருதுகிறேன். பத்து பயனர்கள் ஒரு முறையில் தேர்ந்தெடுத்து தயார் செய்வது என்பது சரியாக இருக்காது என கருதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 01:45, 18 திசம்பர் 2018 (UTC)
- @Nan:, தமிழ் விக்கிப்பீடியா வழமைப்படி ஆண்டுக்கு 4 பேர் என்ற கணக்கில், 2014 - 2019 காலக்கட்டத்தில், 24 நிருவாகிகள் உருவாகி இருக்க வேண்டும். எனவே, அடுத்த வரும் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆக அதிகம் 6 பேர் பள்ளியில் சேர்ப்பு என்பது சரி வருமா? பொருத்தமான வேட்பாளர்கள் இல்லையெனில், 6 பேர் என்பதும் கட்டாயம் இல்லை. ஓரிருவரைக் கூட சேர்த்துப் பயிற்றுவிக்கலாம். 6 பேரைச் சேர்ப்பது உங்களுக்கு உடன்பாடா எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 02:11, 18 திசம்பர் 2018 (UTC)
- நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்பட வில்லை என்பதால் முதல் முறை மட்டும் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் முதன் முறை அதிக பட்சம் பத்து பேர்(/எட்டு பேர்) வரையும் அதன் பின்னர் அதிக பட்சம் 5 அல்லது 6 பேர் வரை தேர்வு செய்வது போல் செய்யலாமா? நீண்ட நாள் தேர்வு செய்யப்படாததால் முதல் முறை பலர் விண்ணபிக்க வாய்ப்பு உண்டு. அப்பொழுது நிராகரிக்கப்பட்டால் சரியாக வருமா என்பதை சிந்தித்து பாருங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:36, 18 திசம்பர் 2018 (UTC)
- @Balajijagadesh: இதே காரணத்துக்காகத் தான் நானும் 10 என்ற எண்ணிக்கையை முன்மொழிந்தேன். எனினும், ஒரே நேரத்தில் நிறைய புதிய நிர்வாகிகளுக்கான கவனத்தை அளித்துப் பயிற்றுவிக்க முடியாது என்ற தயக்கமும் ஏற்புடையதே. நிர்வாகிகள் தேர்தல் என்பது ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுக்க் போட்டி இல்லை. எனவே, ஆறு பேருக்கு மேல் தேர்வு பெற விரும்பினால், அவர்களில் சிலர் தாமாகவே விட்டுக் கொடுத்து அடுத்த காலாண்டு வரை காத்திருக்க முன்வரலாம். --இரவி (பேச்சு) 07:01, 18 திசம்பர் 2018 (UTC)
- @Ravidreams: ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆக அதிகம் 6 பேர் பள்ளியில் சேர்ப்பு என்பது சரியாகவே தெரிகிறது.--நந்தகுமார் (பேச்சு) 03:52, 18 திசம்பர் 2018 (UTC)
- @Nan: நன்றி --இரவி (பேச்சு) 07:01, 18 திசம்பர் 2018 (UTC)
தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல் என்ற கருத்துரு வரவேற்கத்தக்கது. இதனை மேலும் வளப்படுத்த என் சில பரிந்துரைகள்.
- நிர்வாக நிலை தொடர்பான (வழங்குதல் / நீக்குதல்) வழிகாட்டல்களை முடிவு செய்து அடுத்த கட்டம் நகர்தல்
- அதிகாரி நிலை தொடர்பான (வழங்குதல் / நீக்குதல்) வழிகாட்டல்களை மீள் பரிசீலனை செய்தல்
இங்கு நிர்வாக நிலை தென்னாசிய அரசிலில் காணப்படும் அமைச்சரவை போன்று, எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு நிர்வாகம் அணுக்கம் அளிப்பதும். அதிகாரி நிலை முடியாட்சி போன்று சிலருடன் மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது. இது வரவேற்கத்தக்க "தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல்" என்பதற்கு நேர் எதிரானது. நிர்வாகிகளும், அதிகாரிகளும் தங்களால் தொடர்ச்சியாக பங்களிக்க முடியாத சூழலில் ஒதுங்கவும், முனைப்புடன் பங்களிப்பவருக்கு இடம் அளித்தலும் அவசியம். அத்தகைய அமைப்பை தமிழ் விக்கிச் சமூகம் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், தலைமைத்துவம் தன்னார்வமாக உருவாக வேண்டும். "பதவி அளித்தல்" போன்ற வியாபார உத்தி தலைமைத்துவத் தொடர்ச்சிக்கு உதவாது.
தற்போதுள்ள 34 நிர்வாகிகளில் (4 அதிகாரிகளும் அடக்கம்) 18 பேர்தான் கடந்த ஒரு வருடத்தில் நிர்வாக அணுக்கத்தை செயற்படுத்தியுள்ளனர் (2 பேர் த.வி அல்லாதோர்). 5661 நிர்வாக செயற்பாடுகளில் 3 பேர் தவிர்த்து மீதமுள்ள 15 பேரின் நிர்வாக செயற்பாடுகள் 211 மட்டுமே! ஏன் இந்த நிலை? கடந்த காலத்தில் நிர்வாகம் அணுக்கம் ஏன் என்று புரியாதவர்களுக்கும் நிர்வாகம் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பதிப்புரிமை மீறல் உட்பட முக்கிய விக்கிக் கொள்கை, வழிகாட்டல் தெரியாத நிர்வாகிகள் உள்ளனர். (தேவைப்பட்டால் எடுத்துக்காட்டினை சுட்ட முடியும்)
நிர்வாக செயற்பாடுகளில் முனைப்பாக ஈடுபடும் நிர்வாகிகளில் 3 பேர் மட்டுமே இருக்க, எப்படி 10 பேருக்கு வழிகாட்டுவது (mentoring)? இதில் அந்த 3 பேரும் ஈடுபடுவார்களா? இந்த உரையாடலில் எத்தனை நிர்வாகிகள் பங்கு கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு த.வி நிர்வாகிகள் இயங்குகிறார்கள் என்று. ஏன் இந்த நிலை? நிர்வாக அணுக்கம் ஆண்டுதோறும் திணிக்கப்பட்டது. சிலர் பரப்புரை போன்ற வெளிச்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் இங்கு நிர்வாகியாகச் செயற்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட விரும்புபவர்களின் தற்போதைய நிர்வாகம் சார்ந்த நிலைப்பாடுகள் என்ன? அவர்கள் எந்தளவிற்கு முனைப்பாக உள்ளார்கள்? அவர்களின் ஈடுபாடு என்ன நிலையில் உள்ளது? அவர்கள் ஈடுபாடு காட்டவிட்டால், அவர்களைத் தடுப்பது என்ன? நிர்வாக அணுக்கத்தில் உள்ள கருவிகளைத் தவிர்த்து அவர்கள் ஏன் மற்ற செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டவில்லை. நிர்வாக அணுக்கம் என்ற இலஞ்சம் பெற்றுத்தானா ஈடுபாடு காட்டுவார்கள்?
ஏன் பல பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன? எ.கா: துப்புரவு செயற்பாடுகள், நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் கொள்கை, நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் கொள்கை, ஆசிரியர்கள் உருவாக்கிய பல ஆயிரம் கட்டுரைகள். இங்கெல்லாம் தாங்கள் அந்தந்த பணிகளைச் செய்வோம் என்றவர்கள் விலகிவிட்டார்கள். ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகள் தொடர்பில் என் கருத்திற்கு மாற்றுக் கருத்திட்ட நிர்வாகிகள்/பயனர் இன்றுவரை அக்கட்டுரைகளில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான் உட்பட சிலர்தான் ஆண்டு கழிந்த பின்பு அவற்றின் நிமித்தம் செயற்படுகின்றோம். எங்கே போனார்கள் இந்த நிர்வாகிகள்? எங்கே போனார்கள் புதிதாக நியமிக்கப்பட விரும்புபவர்கள்?
நிர்வாக அணுக்கம் பெற முன்னர் தமிழ் மொழியே முக்கியமானது என்று செயற்பட்டவர்கள் பின்னர் தமிழ் இலக்கணம் தெரியாது கட்டுரை உருவாக்கியதற்கு எல்லாம் எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. புதிதாக நியமிக்கப்பட விரும்புபவர்கள் தமிழ் இலக்கண மீறலுக்கு உதவுவார்களா அல்லது "இதெல்லாம் பொதுவான நடைமுறை" என தங்கள் புரியாமைக்கு வியாக்கியானம் செய்வார்களா? இப்படியான நிலையில் நாங்கள் எப்படிச் செயற்படுவது?
முன்னர் குறிப்பிட்டதுபோல தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல் அதற்கான விக்கி நிர்வாகிகள் பள்ளியில் தற்காலிக நிர்வாகிகளைச் சேர்ப்பது என்ற கருத்திற்கு ஆதரவும், சில குறிப்பிடத்தக்க பயனர்கள் இதற்கு ஏற்புடையவர்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். ஆனாலும் இவ்வரைவு மாற்றப்பட வேண்டியது. அதற்கான நடைமுறைக் காரணங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். என் கருத்தை ஏற்பதும், நிராகரித்துவிட்டு ஒட்டுமொத்த விக்கிச்சமூகம் என்ற பெயரில் ஒருசிலர் இவ்வரைபை நடைமுறைப்படுத்தி 10 பேரை அல்லது 100 பேரை நிர்வாகியாக்கலாம். --AntanO (பேச்சு) 18:11, 23 திசம்பர் 2018 (UTC)
- //நிர்வாக செயற்பாடுகளில் முனைப்பாக ஈடுபடும் நிர்வாகிகளில் 3 பேர் மட்டுமே இருக்க, எப்படி 10 பேருக்கு வழிகாட்டுவது (mentoring)? இதில் அந்த 3 பேரும் ஈடுபடுவார்களா? இந்த உரையாடலில் எத்தனை நிர்வாகிகள் பங்கு கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வாறு த.வி நிர்வாகிகள் இயங்குகிறார்கள் என்று.// இதை நானும் வழிமொழிகிறேன். நிர்வாகியாக இருப்பதால் நிர்வாகப்பணிகளைக் கட்டாயம் செய்யவேண்டும் என்பதில்லாமல் குறைந்தபட்சம் ஆண்டுக்குக் கணிசமான நிர்வாக அணுக்கம் கொண்ட செயலிலாவது ஈடுபாடவேண்டும். அவ்வாறு இயலாத போது முனைப்புடன் அத்தகைய செயல்களில் ஈடுபடும் புதியவர்களுக்கு வழிவிடவேண்டும் அதுவே விக்கி வளர்ச்சிக்கு உதவும் நடைமுறையாகும். அதற்கு வழங்கல்/நீக்கல் கொள்கைகள் இரண்டும் தேவை. நிர்வாகிகள் வழிக்காட்டுதல் என்று சுருக்காமல் நிர்வாகப் புரிதல் கொண்ட யாரும் வழிகாட்டலாம் என்று கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 01:39, 24 திசம்பர் 2018 (UTC)
@AntanO: //சில குறிப்பிடத்தக்க பயனர்கள் இதற்கு ஏற்புடையவர்கள்// தமிழ் விக்கிப்பீடியா தற்போது எதிர்கொள்ளும் சவால் என்பது நீங்கள் ஏற்புடையவர்களாகக் கருதும் இத்தகையோரைத் தேர்ந்தெடுக்கக் கூட நம்மிடம் எந்தக் கொள்கையோ முறையோ இல்லை. ஒரு 100% சரியான நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை உருவாக்குவதற்கான முயற்சியில் 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. உங்கள் பல கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றில் ஏற்பு இருப்பதால் தான், கடந்த ஆண்டுகளில் அத்தகைய கொள்கையை உருவாக்குவதற்கு நானும் பல முறை முயன்று ஓய்ந்துவிட்டேன். வேறு யாராலும் இத்தகைய கொள்கையை உருவாக்கவும் முடியவில்லை. கொள்கையை உருவாக்குவதில் ஏற்படும் இத்தகைய தேக்கநிலை பல வளரும் விக்கிசமூகங்களைப் பின்னிழுப்பதாக விக்கிமீடியா அறக்கட்டளையே உணர்ந்துள்ளதால் தான் அதற்கென தனியே பயிற்சியே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தற்பொழுது ஒவ்வொரு காலாண்டுக்கும் 10 நிருவாகிகளுக்குப் பதில் 6 நிருவாகிகள் தேர்ந்தெடுப்பு என்று மாற்றி உள்ளோம். நீச்சல்காரன் சுட்டியது போல் ஏற்கனவே நிர்வாகிகளாக உள்ளோர் மட்டுமல்லாது நிர்வாகிகளின் பணி புரிந்து மற்றவர்களும் இந்தப் புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க உதவலாம்.
எனவே, //தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்தல் அதற்கான விக்கி நிர்வாகிகள் பள்ளியில் தற்காலிக நிர்வாகிகளைச் சேர்ப்பது என்ற கருத்திற்கு ஆதரவும், சில குறிப்பிடத்தக்க பயனர்கள் இதற்கு ஏற்புடையவர்கள்// என்று நீங்கள் இந்த முயற்சியோடு ஒத்துப் போகும் புள்ளியில் இருந்து இக்கொள்கைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதல் காலாண்டு முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் செயற்பாடுகள் கண்டு, தேவைப்பட்டால் அதன் பிறகு கொள்கையை மேம்படுத்தலாம்.
@Neechalkaran: ஒரு கட்சிக்கு ஒரே ஒரு தலைவர் என்றால் தான் செயற்படாத தலைவர் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் என்ற பேச்சே வரும். இங்கு, எத்தனை நிர்வாகிகள் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாமே? எனவே, பல்வேறு காரணங்களால் முனைப்பாகச் செயற்பட முடியாமல் இருக்கும் பழைய நிருவாகிகளின் பொறுப்பை விலக்கித் தான் புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எந்த ஏரணமும் எனக்குப் புலப்படவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகளாக எந்தத் தொகுப்பும் செய்யாமல் இருக்கும் பயனர்கள் தங்கள் நிர்வாக அணுக்கத்தைத் தாமாகவே இழப்பர். இதற்கான global policy ஏற்கனவே உள்ளது. இதுவே போதுமான நடவடிக்கை தான் என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:30, 24 திசம்பர் 2018 (UTC)
கொள்கை வாக்கெடுப்பு
[தொகு]விக்கி நிர்வாகிகள் பள்ளி என்னும் இத்திட்டம், தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கொள்கையாக முன்மொழியப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு காலாண்டிலும் ஆகக் கூடுதலாக 6 புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவிக்கலாம்.
இவர்கள்:
நிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,
- குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்
மற்றும்/அல்லது
- குறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்
ஆகியவற்றைச் செய்து
- கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
- பொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
- பொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
- பொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்
இருந்தால் போதுமானது.
இந்தப் பண்புகளை உடைய ஆறு பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஒரு வார காலம் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளைப் பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது.
இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
- ஆறு பயனர்களுக்கு
- அடுத்த மூன்று மாதங்களுக்கு
உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரும் நிர்வாகப் பணிகளின் தன்மை அறிந்த நீண்ட நாள் பயனர்களும் புதிய நிர்வாகிகளுக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).
மூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப, தொடர்ந்து
- 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
- 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
- நிலையான நிர்வாக அணுக்கம்
என்று நிர்வாக அணுக்கத்தைத் தரலாம்.
- 3 மாத காலத்துக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் புதிய நிர்வாகிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.
- நிர்வாக அணுக்கத்தைப் பெற்றமையாலேயே ஒரு பயனர் குறிப்பிட்ட அளவு கூடுதலாக விக்கி, நிர்வாகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
- ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முன், இக்கொள்கையை மேம்படுத்த வாய்ப்புண்டா என்பதை ஆய்வு செய்ய ஒரு வார காலம் கலந்துரையாடல் நடைபெறும்.
- இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம்.
- இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து, அதிகாரிகள் தெரிவிற்கும் இதே போன்ற முறையினைச் செயற்படுத்தலாம். ஆனால், அப்பொறுப்புக்கு ஏற்ப வேறு வகையான விதிகள் முன்மொழியப்பட்டு தனியே இன்னொரு புதிய கொள்கை வகுக்க வேண்டி வரும்.
குறிப்பு: இக்கொள்கைக்கு உங்கள் ஆதரவு/நடுநிலை/எதிர்ப்பு வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாக்கெடுப்பு சனவரி 1, 2019 நள்ளிரவு (இந்திய/இலங்கை நேரம்) முடிவடையும். --இரவி (பேச்சு) 04:44, 25 திசம்பர் 2018 (UTC)
ஆதரவு
[தொகு]- ஆதரவு பயிற்சி/mentoring போன்றவற்றில் மாற்றுக்கருத்திருந்தாலும் நிர்வாக அணுக்கம் பரவலாக ஆதரிக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 05:40, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு --ஹிபாயத்துல்லாபேச்சு 06:27, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 06:41, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு- 6மாதங்களுக்கு ஒருமுறை இந்த அணுக்கத் தேர்வு தருதல் சிறப்பு. புதியவரும் கற்றுக் கொள்ள இக்காலம் தேவை.புதியவர்களுக்கும், ஏற்கனவே இருப்பவர்களுக்கும் இடையே கருத்தாடல் இருப்பின் நலம் பயக்கும். --த♥உழவன் (உரை) 09:57, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 10.10, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--Kanags (பேச்சு) 12:45, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--ஞா. ஸ்ரீதர்
- ஆதரவு--அருளரசன் (பேச்சு) 14:34, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--மகாலிங்கம்
- ஆதரவு--சிவகோசரன் (பேச்சு) 15:31, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு இதற்கு என் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தற்போது சிறப்பாக பங்களித்து வரும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அதிகாரி அணுக்கம் செயல்படுத்த வேண்டி, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:57, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு முழுமையாக ஆதரிக்கிறேன் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:50, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- ஆதரவு--☤சி.செந்தி☤ (உரையாடுக) 17:36, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--TI Buhari 19:30, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--Maathavan Talk 18:40, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு இதில் எந்த குழப்பமும் பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை. முன்னெடுத்து செல்லுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:42, 26 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 08:01, 26 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு--கலை (பேச்சு) 21:25, 27 திசம்பர் 2018 (UTC)
நடுநிலை
[தொகு]- நடுநிலை யாரைத் தெரிவு செய்வது, எந்த அடிப்படையில் தெரிவு செய்வது என்பவற்றைச் செய்யும் போது தமிழ் மொழியைப் பற்றி விளக்கமுள்ளவர்களைத் தெரிவு செய்வது நல்லது. மேற்குறித்த வரையறைகளுக்கு உட்பட்டுத் தெரிவு செய்வதாயினும் அவர்களின் தமிழ் எத்தகையது என்பதைப் பற்றியும் பார்த்தாக வேண்டுமென்றே எண்ணுகிறேன். புதிய நிருவாகிகள் தெரிவு தொடர்பில் அண்டன் சொல்வதில் நியாயங்கள் இருப்பதாகத் தோன்றுகின்ற அதே வேளை, பலரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஒரு நிருவாகி எப்போதும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற கடப்பாடு கிடையாதென்றே எண்ணுகிறேன். ஒவ்வொருவரினதும் குடும்ப, சமுதாய, பொருளாதார, உள நல நிலைமைகள் அவர்களின் பணிகளில் தாக்கஞ் செலுத்தலாம் என்பதை எப்போதும் கருத்திற் கொண்டாக வேண்டும். அதே நேரம், நிருவாகித் தெரிவுக்கான முன்மொழிவுகள் ஆக்கபூர்வமாக இருந்தாலும், இங்கு சுட்டிக் காட்டப்படும் குறைகளை நிவர்த்திப்பதற்கான வழிவகைகளை ஆராயவும் வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:35, 26 திசம்பர் 2018 (UTC)
எதிர்ப்பு
[தொகு]கருத்துகள்
[தொகு]- முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு தீர்வு இல்லாமல் அடுத்த கட்டம் நகர்வது ஏன்? என்ன அவசரம்? நிர்வாக அணுக்கம் பெற விரும்புபவர்களின் வாக்குகளைக் கொண்டு தீர்வு கண்டு, புது நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வாழ்த்துக்கள்! --AntanO (பேச்சு) 05:11, 25 திசம்பர் 2018 (UTC)
- புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் எத்தனைக் காலம் பொறுமையாக இருக்க வேண்டும்? கொடுக்கப்பட்டுள்ள வரைவை மேம்படுத்துவதற்கு மற்றவர்கள் கூறிய அனைத்து கருத்துகளும் இயன்ற அளவு உள்வாங்கி கொள்கை வரைவு மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பரிந்துரையின் அடிப்படைப் புள்ளியில் இருந்தே விலகி இருப்பதானால், தாராளமாக எதிர்ப்பு வாக்கினைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதி தாங்கள் மட்டுமே நிருவாகிகளாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்குப் பல்வேறு முட்டுக் கட்டைகளை இட்டு வருகிறார்கள். இது மற்ற பல விக்கிகளின் நிலவரம். --இரவி (பேச்சு) 05:16, 25 திசம்பர் 2018 (UTC)
- //நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதி தாங்கள் மட்டுமே நிருவாகிகளாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்குப் பல்வேறு முட்டுக் கட்டைகளை இட்டு வருகிறார்கள்.// இதைத்தானா அதிகாரிகள் விடயத்திலும் செய்கிறீர்கள்? புதிய அதிகாரிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள்கள் --AntanO (பேச்சு) 05:19, 25 திசம்பர் 2018 (UTC)
- பாகிமின் விண்ணப்பத்தை இப்போது தான் கண்டேன். அங்கு பதில் அளிக்கிறேன். நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புக் கொள்கை 5 ஆண்டுகளாக காலாவதி ஆகி இருக்கும் போது, அதிகாரியை மட்டும் எப்படித் தேர்ந்தெடுப்பது? கடந்த 16 ஆண்டுகளில் எவரேனும் அதிகாரி நிலைக்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்டதா? விக்கி நிர்வாகிகள் பள்ளி முதல் காலாண்டில் செயற்படுத்தி முடிக்கப்பட்ட பிறகு, அதன் வெற்றியைப் பொறுத்து, அதிகாரிகள் தேர்ந்தெடுப்புக்கும் இதே போன்ற முறை செயற்படுத்தப்படும் என்று ஏற்கனவே இந்தக் கொள்கை முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிச்சயமாக, கூடுதல் அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்போம். --இரவி (பேச்சு) 05:34, 25 திசம்பர் 2018 (UTC)
- //நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதி தாங்கள் மட்டுமே நிருவாகிகளாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்குப் பல்வேறு முட்டுக் கட்டைகளை இட்டு வருகிறார்கள்.// இதைத்தானா அதிகாரிகள் விடயத்திலும் செய்கிறீர்கள்? புதிய அதிகாரிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள்கள் --AntanO (பேச்சு) 05:19, 25 திசம்பர் 2018 (UTC)
- புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் எத்தனைக் காலம் பொறுமையாக இருக்க வேண்டும்? கொடுக்கப்பட்டுள்ள வரைவை மேம்படுத்துவதற்கு மற்றவர்கள் கூறிய அனைத்து கருத்துகளும் இயன்ற அளவு உள்வாங்கி கொள்கை வரைவு மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பரிந்துரையின் அடிப்படைப் புள்ளியில் இருந்தே விலகி இருப்பதானால், தாராளமாக எதிர்ப்பு வாக்கினைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதி தாங்கள் மட்டுமே நிருவாகிகளாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்குப் பல்வேறு முட்டுக் கட்டைகளை இட்டு வருகிறார்கள். இது மற்ற பல விக்கிகளின் நிலவரம். --இரவி (பேச்சு) 05:16, 25 திசம்பர் 2018 (UTC)
- துப்புரவுப்பணியை யாரும் செய்யலாமே, நிர்வாக அணுக்கத்தால் தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகள் என்ன? யாருக்கு யார் வழிகாட்டல் என்று பிரிப்பது? வழிகாட்டல் என்பது peer relationship ஆகவும் mentoring ஆக அல்லாமல் இருந்தால் சிறப்பு-நீச்சல்காரன் (பேச்சு) 05:23, 25 திசம்பர் 2018 (UTC)
- விருப்பம்--AntanO (பேச்சு) 05:31, 25 திசம்பர் 2018 (UTC)
- பக்கங்களை நீக்குதல், பயனர்களைத் தடை செய்தல், பக்கங்களை ஒன்றிணைத்தல் போன்ற சில பணிகளை நிர்வாக அணுக்கம் கொண்டவர்களே செயற்படுத்த முடியும். இன்றைய நிலையில் zero பணிகள் தேங்கியிருந்தாலும் இனி வரும் ஒவ்வொரு நாளும் இப்பணிகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே உள்ள ஒரு சில நிர்வாகிகளே இந்தப் பணிகளைச் செய்தால் போதும் என்றால் புதிதாக வரும் பயனர்களுக்கு இப்பணிகளில் ஈடுபாடும் அனுபவமும் இருக்காது. 2012க்குப் பிறகு தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்த ஒருவர் கூட நிர்வாகி ஆக முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். அனைத்து உலக மொழி விக்கிகளிலும் புதிய புதிய நிர்வாகிகள் வருவதை வைத்தே விக்கிச் சமூகத்தின் நலனை அளவிடுகிறார்கள். விக்கி என்றாலே peer relationship தான். புதிய நிர்வாகிகளுக்கு நாம் கூடுதல் கவனம் கொடுத்து உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே mentoring என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, இது ஆசிரியர் - மாணவர், Senior - junior போன்ற உறவாட்டம் அல்ல. வேறு நல்ல சொல் இருந்தால் குறிப்பிடுங்கள். இது, கிட்டத்தட்ட Teahouse போன்ற ஒரு முயற்சியே. யாருக்கு யார் வழிகாட்டல் என்ற அளவுக்கு எல்லாம் இப்போதே கவலைப்படத் தேவையில்லை. அன்றாடம் நான் அனைத்துக் கட்டுரைகளிலும் கவனம் செலுத்துவது போல, அனைத்துப் பயனர்களுக்கும் உதவுவது போல, இயன்றோர் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து செயலாற்றினால் போதும். --இரவி (பேச்சு) 05:34, 25 திசம்பர் 2018 (UTC)
- தற்போதுள்ள நிர்வாகிகள் அணைவருக்கும் நிர்வாக அணுக்கம் நீக்கி புதிதாக நியமிக்கப் பரிந்துரைக்கிறேன். விரும்பினால் இதனை முன்னெடுங்கள். நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதுபவர்களைக் கண்டறியலாம். முடியாவிட்டால், யார் நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதுகிறார்கள் எனக்குறிப்பிடுக. --AntanO (பேச்சு) 05:32, 25 திசம்பர் 2018 (UTC)
- ஏற்கனவே உள்ள நிர்வாகிகளில் ஒருவரையோ ஒட்டு மொத்தமாகவோ பொறுப்பு நீக்க விரும்பினால், இது தொடர்பான கொள்கையைத் தனியே ஒரு பக்கத்தில் முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:36, 25 திசம்பர் 2018 (UTC)
- யார் நிருவாகி அணுக்கத்தை ஒளிவட்டமாகக் கருதுகிறார்கள்? பெயரைக் குறிப்பிடுக. --AntanO (பேச்சு) 05:39, 25 திசம்பர் 2018 (UTC)
- மற்ற பல விக்கிகளில் என்று ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க - Commons தளத்தில் நிர்வாகிகள் தேர்வு குறித்த தரவுகள் மற்றும் Adminitis. --இரவி (பேச்சு) 05:55, 25 திசம்பர் 2018 (UTC)
- அதனை இங்கு சுட்டக்காரணம்? விக்கிப்பீடியாவை தங்கள் விருப்பத்திற்கேற்ப இயக்கும் போக்கும் மற்ற விக்கிகளில் உள்ளது தெரிந்திருக்கும். அதற்காக நான் அந்த எடுத்துக்காட்டை இங்கு பயன்படுத்தினால் அதற்கு என்ன பொருள் என்பது அந்த இடம் பொருட்டு மாறுபடும். நிற்க, இவ்வரைபில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாமல் நகர்வது ஆரோக்கியமற்றது. நகர்த்திக் காட்டுவேன் என அடம்பிடித்ததால், தாராளமான முன்னெடுக்கவும்! --AntanO (பேச்சு) 06:14, 25 திசம்பர் 2018 (UTC)
- 100% சரியான கொள்கை உருவாக்கும் முயற்சியில் 5 ஆண்டுகளை வீணாக்கி விட்டோம். இந்த வரைவில் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு காலாண்டுக்கும் கொள்கை மீளாய்வு செய்யப்படும் என்று முன்மொழிவிலேயே உள்ளது. தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது தான் விக்கி. எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் 100% சரியாகப் பெறுவது அன்று. இது கட்டுரைகள், கொள்கைகள், நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நன்றி--இரவி (பேச்சு) 06:17, 25 திசம்பர் 2018 (UTC)
- தற்போதும் தனி ஒருவரின் கருத்தே முன்னெடுக்கப்படுகிறது? எத்தனைபேர் ஆக்கபூர்வமான கருத்திட்டுள்ளனர்? ஒருமித்த கருத்துக்கு ஏன் காலம் ஒதுக்கக்கூடாது? காலாவதி என்று ஏதும் கட்டாயம் உள்ளதா? --AntanO (பேச்சு) 06:34, 25 திசம்பர் 2018 (UTC)
- 10 ஆண்டு கொண்டாட்டத்தின்போதும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஏன் என்பதை விளங்கிக் கொள்ளவும். அக்குற்றச்சாட்டுக்கு அங்கு பல மௌனங்கள் இருந்ததையும் கவனத்தில் கொள்ளவும் --AntanO (பேச்சு) 06:36, 25 திசம்பர் 2018 (UTC)
- பாலாஜி, Nan, நீச்சல்காரன் உட்பட பலர் கூறிய கருத்துகளை உள்வாங்கி வரைவை மேம்படுத்தி உள்ளோம். யாராவது ஒருவர் பிரச்சினையைத் தீர்க்க முதல் அடியை எடுத்து வைக்கத் தான் வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தேக்க நிலையை நீக்குவதற்கான முதல் அடியை நீங்களோ வேறு யாருமோ கூட முன்னெடுத்திருக்கலாமே? நன்றி. --இரவி (பேச்சு) 06:41, 25 திசம்பர் 2018 (UTC)
- ஏன் என்ற காரணத்தை ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். --AntanO (பேச்சு) 06:44, 25 திசம்பர் 2018 (UTC)
- பாலாஜி, Nan, நீச்சல்காரன் உட்பட பலர் கூறிய கருத்துகளை உள்வாங்கி வரைவை மேம்படுத்தி உள்ளோம். யாராவது ஒருவர் பிரச்சினையைத் தீர்க்க முதல் அடியை எடுத்து வைக்கத் தான் வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தேக்க நிலையை நீக்குவதற்கான முதல் அடியை நீங்களோ வேறு யாருமோ கூட முன்னெடுத்திருக்கலாமே? நன்றி. --இரவி (பேச்சு) 06:41, 25 திசம்பர் 2018 (UTC)
- 100% சரியான கொள்கை உருவாக்கும் முயற்சியில் 5 ஆண்டுகளை வீணாக்கி விட்டோம். இந்த வரைவில் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு காலாண்டுக்கும் கொள்கை மீளாய்வு செய்யப்படும் என்று முன்மொழிவிலேயே உள்ளது. தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது தான் விக்கி. எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் 100% சரியாகப் பெறுவது அன்று. இது கட்டுரைகள், கொள்கைகள், நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நன்றி--இரவி (பேச்சு) 06:17, 25 திசம்பர் 2018 (UTC)
- பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒருமித்து சொல்லும் கருத்தை தொடர்ந்து மறுத்து தனி ஒருவர் மல்லுக்கட்டுவது ஏன்? --ஹிபாயத்துல்லாபேச்சு 06:54, 25 திசம்பர் 2018 (UTC)
- பத்துக்கும் மேற்பட்டவர்கள் எங்கு கருத்திட்டுள்ளார்கள்? 300+ இற்கு மேற்பட்டவர்கள் பங்களிக்கிறார்கள். 34 நிர்வாகிகள் உள்ளார்கள் என்பதையும் கருத்திற்கொள்க. என் கருத்திற்கு முறையான மறுப்பு காரணத்தை எத்தனை பேர் முன் வைத்துள்ளீர்கள்? // உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும்.// யார் வழிகாட்டுவது? //நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்// இங்குள்ள சூட்சுமம் என்ன? வெற்றுக் கருத்திட வேண்டாம். --AntanO (பேச்சு) 07:57, 25 திசம்பர் 2018 (UTC)
- @AntanO: ஆம், 300+ பேர் பங்களித்தாலும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கை உரையாடல்களில் எப்போதும் குறைவான பங்கேற்பே இருப்பது அறிந்ததே. முதல் வரைவுக்கு வந்துள்ள ஆதரவு, கருத்துகளைக் கவனியுங்கள். முனைப்பாக இருப்பதாக நீங்கள் கருதும் சில நிர்வாகிகளும் ஆதரவுக் கருத்து அளித்துள்ளார்கள். ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரும் நிர்வாகப் பணிகளின் தன்மை அறிந்த நீண்ட நாள் பயனர்களும் புதிய நிர்வாகிகளுக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் என்று கொள்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இன்னும் உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டள்ளது. இதில் ஒரு சூட்சுமமும் இல்லை. இப்படித் தான் எல்லா விக்கிகளிலும் stewardகள் நீட்டிப்பு வழங்குகிறார்கள். நன்றி --இரவி (பேச்சு) 08:08, 25 திசம்பர் 2018 (UTC)
- இவ்வாறுதான் ஆசிரியர்களுக்கான போட்டியின் போது நீங்களும்கூட கட்டுரைகளில் திருத்தம் செய்யவும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும் "வாக்குறுதி" அளித்தீர்கள். தற்போது கட்டுரைகளிள் நிலை என்ன? முன்னரும் முறையீட்டுக்கூடம் அமைக்கப்படும் என்றீர்கள். என்னவாயிற்று? //உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம்// இங்கேயே அவ்வாறானவர்களை முன் வரச்செய்யுங்கள். ஏன் வரைவினை மீள் பரிசீலனை செய்யக்கூடாது? --AntanO (பேச்சு) 08:32, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆசிரியர்கள் கட்டுரைகள் பதிவேற்றம் நடந்த காலத்தில் என்னுடைய துப்புரவுப் பணியை இங்கு காணலாம். உறுதி அளித்த மற்ற பயனர்கள் பங்களிக்க இயலாமல் போயிருந்தால் அவர்களின் வாழ்க்கைச் சூழலை நான் புரிந்து கொள்கிறேன். எல்லாரும் சேர்ந்து இயன்ற அளவு பங்களிப்பது தான் விக்கி. ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பிரச்சினைகள் வராது. ஆனால், விக்கியும் வளராது. வளர்ச்சி நோக்கி ஏதாவது திட்டங்களைச் செயற்படுத்தினால், ஏதாவது பிரச்சினைகள் வரத் தான் செய்யும். இயன்றோர் பொறுப்பு ஏற்கட்டும். விரும்புவோர் தோள் கொடுக்கட்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து நிர்வாகிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை, வழிகாட்டல்களை நான் தருகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 08:46, 25 திசம்பர் 2018 (UTC)
- ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாக சாத்தியமாக வாய்ப்புள்ள ஆலோசனைகளையும், தாங்கள் மனதில் நினைப்பதையும், நீண்ட நாள் அனுபவமுள்ள அனைத்து விக்கிப்பீடியர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நடைமுறைகளை இந்த மாதிரியான நேரங்களில் கூறுவது நலம் பயக்கும். கொள்கை குறித்த உரையாடல்கள் நிகழும் போது அதில் கலந்து கொள்ளாது இ ருந்து விட்டு பின்னொரு நாள் இந்த நடைமுறை குறித்து விவாதிப்பது பயன் தராது. ஆகவே, நீண்ட காலமாக விக்கியில் தங்களின் பங்களிப்பை அளித்து வரும் அனைவரும் தங்களின் கருத்தை திறந்த மனத்துடன் தெரிவித்து பெரும்பான்மையான ஆதரவுடன் முடிவெடுப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்பது எனது தாழ்மையான கருத்து. --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:12, 25 திசம்பர் 2018 (UTC)
- ஆசிரியர்கள் கட்டுரைகள் பதிவேற்றம் நடந்த காலத்தில் என்னுடைய துப்புரவுப் பணியை இங்கு காணலாம். உறுதி அளித்த மற்ற பயனர்கள் பங்களிக்க இயலாமல் போயிருந்தால் அவர்களின் வாழ்க்கைச் சூழலை நான் புரிந்து கொள்கிறேன். எல்லாரும் சேர்ந்து இயன்ற அளவு பங்களிப்பது தான் விக்கி. ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பிரச்சினைகள் வராது. ஆனால், விக்கியும் வளராது. வளர்ச்சி நோக்கி ஏதாவது திட்டங்களைச் செயற்படுத்தினால், ஏதாவது பிரச்சினைகள் வரத் தான் செய்யும். இயன்றோர் பொறுப்பு ஏற்கட்டும். விரும்புவோர் தோள் கொடுக்கட்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து நிர்வாகிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை, வழிகாட்டல்களை நான் தருகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 08:46, 25 திசம்பர் 2018 (UTC)
- இவ்வாறுதான் ஆசிரியர்களுக்கான போட்டியின் போது நீங்களும்கூட கட்டுரைகளில் திருத்தம் செய்யவும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும் "வாக்குறுதி" அளித்தீர்கள். தற்போது கட்டுரைகளிள் நிலை என்ன? முன்னரும் முறையீட்டுக்கூடம் அமைக்கப்படும் என்றீர்கள். என்னவாயிற்று? //உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம்// இங்கேயே அவ்வாறானவர்களை முன் வரச்செய்யுங்கள். ஏன் வரைவினை மீள் பரிசீலனை செய்யக்கூடாது? --AntanO (பேச்சு) 08:32, 25 திசம்பர் 2018 (UTC)
- @AntanO: ஆம், 300+ பேர் பங்களித்தாலும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கை உரையாடல்களில் எப்போதும் குறைவான பங்கேற்பே இருப்பது அறிந்ததே. முதல் வரைவுக்கு வந்துள்ள ஆதரவு, கருத்துகளைக் கவனியுங்கள். முனைப்பாக இருப்பதாக நீங்கள் கருதும் சில நிர்வாகிகளும் ஆதரவுக் கருத்து அளித்துள்ளார்கள். ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரும் நிர்வாகப் பணிகளின் தன்மை அறிந்த நீண்ட நாள் பயனர்களும் புதிய நிர்வாகிகளுக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் என்று கொள்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இன்னும் உறுதி தேவையென்றால் ஏதாவது பத்திரம் இருந்தால் கொண்டு வாருங்கள். வழி காட்ட விரும்பும் அனைவரும் கையெழுத்து போடுகிறோம். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டள்ளது. இதில் ஒரு சூட்சுமமும் இல்லை. இப்படித் தான் எல்லா விக்கிகளிலும் stewardகள் நீட்டிப்பு வழங்குகிறார்கள். நன்றி --இரவி (பேச்சு) 08:08, 25 திசம்பர் 2018 (UTC)
- பத்துக்கும் மேற்பட்டவர்கள் எங்கு கருத்திட்டுள்ளார்கள்? 300+ இற்கு மேற்பட்டவர்கள் பங்களிக்கிறார்கள். 34 நிர்வாகிகள் உள்ளார்கள் என்பதையும் கருத்திற்கொள்க. என் கருத்திற்கு முறையான மறுப்பு காரணத்தை எத்தனை பேர் முன் வைத்துள்ளீர்கள்? // உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும்.// யார் வழிகாட்டுவது? //நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்// இங்குள்ள சூட்சுமம் என்ன? வெற்றுக் கருத்திட வேண்டாம். --AntanO (பேச்சு) 07:57, 25 திசம்பர் 2018 (UTC)
- பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒருமித்து சொல்லும் கருத்தை தொடர்ந்து மறுத்து தனி ஒருவர் மல்லுக்கட்டுவது ஏன்? --ஹிபாயத்துல்லாபேச்சு 06:54, 25 திசம்பர் 2018 (UTC)
AntanO அவர்கட்கு, நிர்வாகி என்ற ரீதியில் நீங்கள் ஆற்றிவரும் சில பணிகள் முக்கியமானவை. ஆனால் அனைத்து நிர்வாகிகளும் உங்களைப் போல் இருந்தால் மட்டுமே நிர்வாகி ஆக இருக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது. அதிக பணிகளைச் செய்த 3 நிர்வாகிகளைத் தவிர மேலும் 15 பேர் நிர்வாகப் பணிகளைச் செய்துள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொள்க. ஆக, 3 பேர் மட்டுமே 10 பேருக்குப் பயிற்றுவிப்பார்களா என்ற கேள்வி பொருத்தமற்றது. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. உங்கள் வாதப்படியே பார்த்தாலும் இப்போது பயிற்றுவிப்பதற்கு 3 பேராவது இருக்கிறார்கள். இவர்களுக்கும் வேறு பணிகள் காரணமாக நிர்வாகப் பணியைச் செய்ய முடியாது போனால் தேங்கும் வேலைகளின் அளவு அதிகமாகும். எனவே புதியவர்களை இணைத்து வழிகாட்ட வேண்டிய தேவை உள்ளது. உங்கள் புள்ளிவிபரங்களைச் சில ஆண்டுகள் பின்நகர்த்தி எத்தனை நிர்வாகிகள் எவ்வளவு பணிகள் செய்தார்கள் என்று பாருங்கள். விக்கிப்பீடியாவில் பல விடயங்களிற் சரியான தெளிவு பெற்றிருக்கும் நீங்கள், அதன் மிக அடிப்படையான ஒன்றான புதிய பயனர்களை அரவணைத்தல்/ ஏனைய பயனர்களுடன் நட்புறவு போன்றவற்றைப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற ஐயம் எழுகின்றது. விக்கிப்பீடியா (அல்லது பொதுவாக விக்கிமீடியாத் திட்டங்கள்) என்பதே இந்த அடிப்படையிற்றான் கட்டமைக்கப்பட்டது. நிர்வாகியாக இருக்கும் தாங்கள் ஏனைய பயனர்களை மாணவர்கள் போலவும் தாங்கள் ஓர் ஆசிரியர்/அதிபர் போலவும் பல சந்தர்ப்பங்களில் நடக்கிறீர்கள். இங்கு நான் முன்வைத்துள்ள கருத்துகளுக்கு என்னிடமே ஆதாரம் கேட்க வேண்டாம். தயவுசெய்து உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற உரையாடல்களில் நான் எனது நேரத்தை வீணடிப்பதில்லை. உங்களை நான் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கருதினாலும் இங்கு குறிப்பிட்டவற்றைப் பெரிதாக எண்ணாமல் விக்கியில் தொடர்ந்து நட்புடன் பயணிப்போம். --சிவகோசரன் (பேச்சு) 16:09, 25 திசம்பர் 2018 (UTC)
நான் நிவாக.அனுக்கம் பெற்றபின் முதற்பக்கம், கட்டுரைகளை.ஒருங்கிணைத்தல் போன்ற சில பணிகளில் கவனம்.செலுத்தினேன். ஆசிரியர்களுக்கான.பயிற்சியின் போது அங்கு பயிற்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஆண்டன் அவர்களால் நிறைய கட்டுரைகள் அழிக்கப்பட்டன. இது போன்ற செய்கைகள் எனக்கு வருத்தத்தைத் தந்தன. விக்கிக்குள் தொடர்ந்து பணி செய்ய அயற்சியைத் தந்தது. அதேபோல முதல் பக்க இற்றை தற்போது நீண்ட காலமா கிடப்பில் உள்ளது. அதற்கும் இதுபொன்ற பிரச்சனைகள் தான் காரணம். அச்சமயத்தில் சிலர் விக்கிப்பீடியாவை விட்டே வெளியேறியத்ம் அனைவருக்கும் தெரியும் அதிக நிர்வாகிகளை நியமித்தல் நிர்வாகப்பணிகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் இதே போல் நிர்வாக அனுக்கம் பெற்றவர்கள் மற்ற பயனர்களுடன் தன்மையாக உறவு பேணாமல் மற்ற பயனர்களுக்கு அல்லது புது பயனர்களுக்கு தக்க வழிகாட்டாமல் அவர்களை அச்சுறுத்துவதுபோல் பேசினாலோ, தனிப்பட்டமுறையில் சொல்லால் தாக்கினாலோ அவர்களை.விக்கிப்பீடியாவிலிருந்தே தடை செய்ய ஏதேனும் வழிகாட்டல், கொள்கைகள் எடுக்கவேண்டும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:11, 25 திசம்பர் 2018 (UTC)
- நீங்கள் உங்களை மாணவனாகவும் என்னை ஆசிரியாகவும் கருதிக் கொள்வதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. தேவையானவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். எனக்கு போதனை செய்வதைவிடுத்து விக்கியில் செயல் ஆற்றுங்கள்.
- கட்டுரைகள் அழிக்கப்பட்டது பிழை என்றால் அது தொடர்பில் இப்போதும் நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் பதிப்புரிமை மீறல் செய்தது சரி என்கிறீர்களா? தேவையற்ற, சான்றற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்த வேண்டாம். வன்மத்தை கொட்டுவோம் என்றால் வரவேற்கிறேன். நானும் தயார்! --AntanO (பேச்சு) 18:54, 25 திசம்பர் 2018 (UTC)
@AntanO: வணக்கம் அண்ணா. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யும் பணிகளை நன்கு அறிந்தவன் நான். நீங்கள் கட்டுரைகளில் செய்யும் துப்புரவு பணி, தீக்குறும்பு அகற்றல் போன்ற செயல்களை கண்டு பிரமித்தும் உள்ளேன். தமிழ் விக்கிப்பீடியா மட்டும் அல்ல ஆங்கில விக்கிப்பீடியா, பொதுவகம் போன்ற அனைத்திலும் தாங்கள் முனைப்பாக பங்களித்து வருவதை நான் கவனித்து வருகிறேன். மேலே சிலர் உங்களை விமர்சித்தும் உள்ளனர். அவர்கள் உங்களைப் பற்றி தெரிந்து வைத்தது அவ்வளவு தான் என்று நான் கருதுகிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது தான், அதை நான் மறுக்கவில்லை. அதற்கு என்ன பன்னுவது? காலத்தின் கட்டாயம் புதுநிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து தான் ஆக வேண்டும். தற்போது எனக்கு தெரிந்தவரை 5 நிர்வாகிகள் மட்டுமே பங்களித்து வருகின்றனர். வரும் காலத்தில் அவர்களும் குடும்ப பணிச்சுமை காரணமாக பங்களிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? கடந்த 5 ஆண்டுகளில் நிர்வாகியே தேர்ந்தெடுக்க முடியாத நிலையில், இந்த கொள்கையை ஒரு சோதனையாக செய்து பார்ப்போம், இதில் ஏதேனும் பிழையிருந்தால், அதன் பிறகு இதைப் பற்றி ஏதேனும் முடிவு எடுக்கலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:47, 25 திசம்பர் 2018 (UTC)
- @Gowtham Sampath:, விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 21:39, 25 திசம்பர் 2018 (UTC)
நான் இங்கு நடந்த உரையாடலைக் கவனித்து வந்தேனாயினும் முதலில் இதைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்த உரையாடல்கள் தொடர்பாக நிலவும் தற்போதைய சூழ்நிலை என்னையும் கருத்துக் கூற இழுத்துக் கொண்டு வந்து விட்டது. இப்போது நான் கூறப் போகும் சில கருத்துக்களின் காரணமாக, தமிழ் விக்கியில் எனக்கு எதிர்ப்புக்கள் வந்தாலும், ஒரு சிலர் மீண்டும் பல காரணங்களைக் கற்பிதம் செய்து கொண்டு என்னைத் தடை செய்ய முனைந்தாலும் பரவாயில்லை. இதற்கு முன் Anton என்னைத் தடை செய்த போது, நான் அதனால் வெறுப்படைந்து போயிருந்தாலும் அதன் பின் விளைவாக எனக்கு ஏற்பட்ட சில நன்மைகளை நினைத்துப் பார்க்கையில் நான் அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்னை ஓராண்டுக்குத் தடை செய்திருந்தார், இன்னும் ஓராண்டு விக்கியின் பக்கம் வர விரும்பாமல் இருந்தேன். இப்போது சுயபுராணம் பாடுவதாகக் கருதிக் கொண்டாலும் பரவாயில்லை. இக்காலப் பகுதியில் நிகழ்ந்த சில முக்கியமான விடயங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
- விக்கிப்பீடியாவுக்கு வெளியில் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் சேவையாற்ற இருக்கும் தேவை மிகப் பரந்தது என்பதை விளங்கிக் கொண்டேன். ஈராண்டு காலம் அதனைப் பார்க்காமலேயே இருந்த போது பலருக்கு உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகத்துக்குரிய செலவுகள், பல வீடுகளுக்குக் குடிநீர் வசதி, மின்சார வசதி, வீடுகளுக்குக் கதவு போடுதல், கூரையடித்தல், தொழில் செய்ய உதவுதல், ஏழைப் பெண்களின் திருமணச் செலவுகளுக்கு உதவி செய்தல், அருகிலுள்ள ஒரு பாடசாலையில் இரு தொண்டர் ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தைக் கொடுத்து வருதல், பாடசாலையை விரிவாக்குவதற்கான காணியைக் கொள்வனவு செய்ய என்னுடைய பங்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதியளித்தல், அண்மையில் சுலாவெசியில் ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் வசதியும் உடுதுணிகளும் வழங்குதல், மலேசியாவில் அநாதரவாக நின்ற இலங்கையரை இலங்கைக்கு அனுப்பப் பணம் கொடுத்தல், இந்தியாவில் சில ஏழைகளுக்குத் தொழில் செய்ய உதவுதல் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் பலருக்கு என்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு உதவ முடிந்தது. செய்ததைச் சொல்லிக் காட்டக் கூடாது. சில வேளைகளில், சொல்லிக் காட்டாதிருப்பது அநியாயம்.
- இந்த ஈராண்டு காலத்தில் என்னுடைய வருமானம் பல மடங்காக உயரந்தது. நான் விக்கிப்பீடியாவைப் பற்றிக் கவனிக்காமலேயே இருந்ததால் என்னுடைய சொந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. இந்தோனேசியாவில் சில ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு வாசனைத் திரவிய விவசாயக் காணியும் ஒரு குடியிருப்புக் காணியும், இலங்கையில் சந்தனப் பயிர்ச் செய்கை செய்யப்படும் ஒரு காணியும் அகில் பயிரிடப்படும் மற்றொரு காணியும் ஒரு குடியிருப்புக் காணியும் ஒரு கடையும் வாங்கினேன். என்னுடைய தாய் தந்தையருக்கான வீட்டைக் கட்டினேன், சகோதரியின் வீட்டுக்கு வசதிகள் செய்து கொடுத்தேன். இன்னும் ஏராளம் செலவு செய்ய முடிந்தது.
- விக்கிப்பீடியாவில் பின்பற்றப்படும் தமிழ் நடை சாதாரண மக்களின் தமிழ் நடைக்கு ஒவ்வாதது என்பதை இங்குள்ளவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, நான் ஒரு தொழின்முறை மொழிபெயர்ப்பாளன் என்ற அடிப்படையில் இதனை நன்கு உணர்ந்துள்ளேன். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் என்னுடைய மொழியாற்றல்கள் மேம்படத் தொடங்கின. ஒரு சொல்லுக்காக வீண் விவாதம் செய்து காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
இத்தனையும் விக்கிப்பீடியாவை விட்டு வெளியேற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நன்மைகள். இந்த நன்மைகளைப் பார்க்கும் போது அண்டனுக்கு நன்றி சொல்ல வேண்டுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போதைய சூழலில் பின்ருவரும் விடயங்களைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
- தமிழுக்குத் தொண்டாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட இங்கு நிருவாகிகள் உட்பட ஏராளமானோர் தமிழ் மொழியைச் சிதைப்பதைக் காணும் போது ஆத்திரமாகத்தான் இருக்கிறது. ஏராளமான எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் காணப்படுகின்றன. விக்கிப்பீடிய மென்பொருட் கட்டமைப்பிலேயே மொழி சிதைக்கப்படுகிறது. இதைக் காணச் சகிக்காமையே நான் அதிகாரி தரத்துக்கு விண்ணப்பிக்கக் காரணம். அப்போதுதான் இத்தகைய பிழைகளைத் திருத்த இயலும். ஒரு சாதாரண பயனரால் அவற்றைச் செய்ய முடியாத அதே வேளை, பல நிருவாகிகளுக்கு அவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. நான் ஒரு தொழின்முறை மொழியிலாளன் என்ற வகையில் மொழிப் பிழைகளைத் திருத்துவது என் தொழில். இதுதான் இக்கட்டமைப்பிலுள்ள மொழிப் பிழைகளைத் திருத்த விரும்பக் காரணம். நான் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சிங்கள மொழிக்கான பிரதான மொழியியலாளனாக இருந்த போதிலும் தமிழ் மொழிக்கு நான் ஆற்றும் தொண்டாகவே இதனைக் கருதுகிறேன்.
- விக்கிப்பீடியாவில் நடுவு நிலைமை தாண்டிச் செயற்படும் போக்கு நிருவாகிகள் உட்பட ஏராளமானோரிடம் காணப்படுகிறது. இதைப் பற்றி அண்மைய நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்களையும் பலர் அறிந்திருக்கலாம். இந்த நடுவு நிலைமை மீறல்கள், விசேடமாகத் தமிழை அல்லது தமிழரைப் பற்றி மிகையெண்ணங் கொண்டு அல்லது கொள்ள வைக்கச் செயற்படும் பக்கச் சார்பான பலருக்கு விளங்காதிருக்கலாம். ஆயினும், நடுவு நிலைமையற்ற செயலைப் பற்றிக் கேள்வி கேட்கப் போய்த்தான் முன்னர் என்னைத் தடை செய்தார்கள். இதற்காக மீண்டும் தடை செய்தாலும் செய்யக் கூடும். நான் அப்போது கொண்டிருந்த கருத்தைத்தான் விக்கிப்பீடியப் பயிற்றுவிப்பாளர்களும் கொண்டிருக்கிறார்கள். அண்மைய பயிலரங்குகளிற் கலந்து கொண்டோர் இதைப் பற்றி விளங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், மிகையெண்ணம் கொண்ட பலருக்கு இதில் தெளிவில்லை.
தற்போதைய நிருவாகிகள் தெரிவு தொடர்பான கருத்துக்களில் விரும்பினால் இக்கருத்துக்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 02:32, 26 திசம்பர் 2018 (UTC)
- @Fahimrazick: //விக்கிப்பீடிய மென்பொருட் கட்டமைப்பிலேயே மொழி சிதைக்கப்படுகிறது. இதைக் காணச் சகிக்காமையே நான் அதிகாரி தரத்துக்கு விண்ணப்பிக்கக் காரணம்.// விக்கிப்பீடியா மென்பொருள் தமிழாக்கம் பெரும்பாலும் translatewiki.net என்ற இணையதளத்தில் நடக்கிறது. இங்கு யார் வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். அதிகாரி/நிர்வாகி அனுக்கம் தேவையில்லை. தங்களுக்கு மொழிபெயர்ப்புகள் சரி செய்ய வேண்டும் என்றால் இங்கே செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அதிகாரிகள் மட்டுமே மாற்றக்கூடிய நிலையில் எழுத்துப்பிழைகள் ஏதேனும் உள்ளனவா? தெரிந்துகொள்வதற்காக இக்கேள்வி. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:53, 4 சனவரி 2019 (UTC)
ஆம், ஏராளமான பிழைகள் இருக்கின்றன. முன்னர் நான் மெட்டாவிக்கியில் மாற்றிய சிலவற்றிற்கூட இப்போது கை வைக்க முடிவதில்லை. அவை சாதாரண பயனர்களுக்குப் பூட்டப்பட்டுள்ளன.--பாஹிம் (பேச்சு) 17:57, 5 சனவரி 2019 (UTC)
- @Fahimrazick: //முன்னர் நான் மெட்டாவிக்கியில் மாற்றிய சிலவற்றிற்கூட இப்போது கை வைக்க முடிவதில்லை. அவை சாதாரண பயனர்களுக்குப் பூட்டப்பட்டுள்ளன.// எடுத்துக்காட்டு இணைப்பு தரமுடியுமா? தமிழ் விக்கிபீடியாவில் அதிகாரி ஆனால் மெட்டாவிக்கியில் எப்படி சிறப்பு அணுக்கம் கிடைக்கும். தெரிந்துகொள்வதற்காக. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:37, 6 சனவரி 2019 (UTC)
- எனது கருத்துகள்:
- 1. 'விக்கி நிர்வாகிகள் பள்ளி' எனும் திட்டம் நல்லதொரு முன்னெடுப்பு. 2013 ஆம் ஆண்டு வரையிலான 'நிர்வாகிகள் தேர்வு' அந்தக் காலகட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது. புதிய திட்டம் அறிவியல்பூர்வமாக இருப்பது சிறப்பு.
- 2. இந்தப் பேச்சுப் பக்கத்திற்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும், இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில கருத்துகள் தொடர்பான எனது கருத்துகளை பதிவிடுதல் அவசியம்.
- 2.1 நிர்வாகப் பணியின் அளவுகோல் இதுவரை முறைப்படி எங்கேனும் வரையறுக்கப்பட்டிருக்கிறதா? நிர்வாகப் பணி என்பது பரந்து விரிந்தது. குறிப்பிட்ட சில செயல்களை செய்யாவிட்டால் 'நீங்கள் நிர்வாகி இல்லை' என்று எவரையும் குறை சொல்ல முடியாது. மேலும், இது தன்னார்வப் பணியே. நிர்வாக அணுக்கம் இல்லாத ஒரு பயனருக்கு பங்களிப்பு அளவுகோல்களை நாம் எவ்விதம் நிர்ணயிக்க இயலாதோ அதுவே நிர்வாகிக்கும் பொருந்தும். மேலும் நிர்வாகி என்பவர் சிறப்புப் பதவி பெற்றவர் அன்று. அவர் மெய்ப்பித்துள்ள உண்மைத்தன்மை கருதி கூடுதல் அணுக்கம் தரப்பட்டுள்ளது. அவருக்கு ஏன் பங்களிப்பு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்?
- 2.2 ஒரு நிர்வாகியிடம் இருக்கவேண்டிய குறிப்பிடத்தக்க தகுதி:- பயனர்களிடம் கனிவாகவும், கண்ணியமாகவும் நடப்பது. இதனை இனிவரும் தேர்வுகளில் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். விக்கி குறித்து எதுவுமே அறியாமல், எழுத்தார்வத்தால் எழுதத் தொடங்கிய என்னை அரவணைத்து வழிநடத்திய நிர்வாகிகள் பலர். அந்தக் கனிவு அன்று கிடைத்திராவிட்டால், என்னுடைய சிறு பங்களிப்புகளும் விக்கியில் இல்லாமல் போயிருக்கும். உரையாடல்களில் கண்ணியம் இருக்க வேண்டும் என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
- 2.3 நிர்வாகிகள் உள்ளிட்ட சக பயனர்களை குறை கூறிக்கொண்டு இருக்காமல், அவரவரால் இயன்றதைச் செய்வது தமிழ் விக்கிப்பீடியாவை தரத்தோடு வளர்த்தெடுக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:40, 26 திசம்பர் 2018 (UTC)
- ஆதரவு அருமையாக கூறினீர்கள் @Selvasivagurunathan m:. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:53, 4 சனவரி 2019 (UTC)
@@Fahimrazick: //தமிழ் மொழியைப் பற்றி விளக்கமுள்ளவர்களைத் தெரிவு செய்வது நல்லது// இது தான் உங்கள் முக்கியமான கவலை என்றால், குறிப்பிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் போது, அவர்களுக்கு வாக்கிடும் போது இதனைக் கருத்தில் கொண்டால் போதும். இந்த நிர்வாகிகள் பள்ளி திட்டத்தை ஆதரிக்கத் தயங்கத் தேவையில்லை. ஒருவரின் மொழித்திறன் சிறப்பாக இருப்பது விரும்பக்கூடிய தன்மை என்றாலும் அதனைக் கட்டாயம் ஆக்குவதில் எனக்குச் சில தயக்கங்கள் உள்ளன. ஏன் எனில், ஒருவரது மொழித் திறன் தொடர்ந்து மேம்படக்கூடியது. கட்டுரைப் பணிகள் குறைவாகவும் ஆனால் நுட்பம், விக்கிப்பீடியா கொள்கைகள் முதலிய புரிதலுடன் சிறப்பான பணி ஆற்றிய நிருவாகிகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்துள்ளனர். நல்ல தமிழில் கட்டுரை எழுத முடிவது மட்டுமே நிருவாகப் பணியாற்றுவதற்கான தேவை அன்று. பக்கங்களை நீக்குவது, பயனரைத் தடை செய்வது போன்று ஒரு நிருவாகி எழுதும் கட்டுரை என்பது மற்ற அனைவரும் எளிதில் திருத்த முடியாமல் போவது அன்று. ஒரு நிருவாகி என்பவர் எல்லா வகையிலும் 100% சிறப்பான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. அதனால் தான், ஒருவர் தொடர்ந்து கற்றுக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டவராக இருக்கிறாரா என்பதைப் பார்த்தால் போதும் என்ற அடிப்படையிலேயே இதனைப் பள்ளி என்றே குறிப்பிடுகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 08:33, 26 திசம்பர் 2018 (UTC)
- //அவர் என்னை ஓராண்டுக்குத் தடை செய்திருந்தார்// விக்கிமீடியா அறக்கட்டளையின் கவனத்துக்கு உட்பட்டு பன்னாட்டு விக்கிமீடியா மேலாளர்கள் மேற்கொண்டுள்ளனர் --AntanO (பேச்சு) 19:41, 26 திசம்பர் 2018 (UTC)
//நிர்வாகிகள் உள்ளிட்ட சக பயனர்களை குறை கூறிக்கொண்டு இருக்காமல், அவரவரால் இயன்றதைச் செய்வது தமிழ் விக்கிப்பீடியாவை தரத்தோடு வளர்த்தெடுக்கும்!//. மிக காத்திரமாக அதிக நேரத்தை இதில் தந்து பங்களிக்கும் முனைப்பான பங்களிப்பாளர்களை/ நிருவாகிகளை பாராட்டுவதுடன் தனிப்பட்ட பணிச்சூழல்களால் பங்களிக்கும் நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்துபோகின்றவர்களாயுள்ள நாங்களும் விக்கிப்பீடியாவை ஆக்கறையுடனே பார்க்கின்றோம். தனிப்பட்டுத் தாக்காமல் கூடி முடிவெடுப்போம். எல்லாரும் வந்திருந்தார்களா என்பதை விட வந்தவர்கள் எல்லாரும் என்ன முடிவிலுள்ளனர் என்பது முக்கியம். விக்கிச் சமுகத்தில் எல்லாரும் ஒரே வாகுள்ளவர்களாயிருப்பதை விட இயல்புப் பன்மைத்துவம், கருத்து/ பார்வை முரண், இருப்பதுவே நம்மை நீண்ட காலத்துக்கு தக்க வைக்கும். எந்தக் கருத்தும் முடிந்த முடிவாய் இல்லாமல் மாற்றம் கொள்ளக் கூடியதாய் கொள்கைகள் இருக்கட்டும். ஓடிப் பார்த்து இடரும் இடத்தல் திருத்தலாம். நீக்கல் கொள்கையிலும் பதிப்புரிமைக் கொள்கையிலும் கூட எல்லாரும் இறுக்கமற்றும் இருக்க வேண்டியதில்லை. இறுக்கமாயும் இருக்க வேண்டியதில்லை. கொள்கையின் இயல்பான நெகிழ்வை அனுசரிப்பதே சரி.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:01, 28 திசம்பர் 2018 (UTC)
- //நீக்கல் கொள்கையிலும் பதிப்புரிமைக் கொள்கையிலும் கூட எல்லாரும் இறுக்கமற்றும் இருக்க வேண்டியதில்லை. இறுக்கமாயும் இருக்க வேண்டியதில்லை.// It seems to me out of subject. Let's focus on the subject/topic. --AntanO (பேச்சு) 15:30, 29 திசம்பர் 2018 (UTC)
- https://xtools.wmflabs.org/adminscore பலர் நிர்வாகிக்கு விண்ணப்பித்தால் இந்த கருவி ஒவ்வொரு பயனர் பற்றிய விவரங்களை அறிய உதவியாக இருக்கும். இக்கருவி ஒவ்வொரு பயனரின் செயல்களை ஆராய்ந்து score என்று ஒரு எண்ணைக்கூட தருகிறது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:53, 4 சனவரி 2019 (UTC)
- ஆதரவு-- இத்திட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்; தற்போதைய நிர்வாகிகள் சிறப்பாக செயற்பட்டாலும் சில
வேளைகளில் தேக்கநிலை தென்படுவதாகவே உணர்கிறேன், (தற்போதுதான் கவனித்தேன்) சிறப்பான திட்டம் நன்றிகள்... --அன்புமுனுசாமிᗔ உரையாடுக! : 06:58, 24 ஏப்ரல் 2019 (UTC)
முடிவு
[தொகு]வாக்கிட்ட, கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 20-1-0 என்ற வாக்குகள் அடிப்படையில், இங்கு முன்மொழியப்பட்ட நிருவாகிகள் தேர்ந்தெடுப்புக்கான புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது. --இரவி (பேச்சு) 08:33, 2 சனவரி 2019 (UTC)
கொள்கை மீளாய்வு
[தொகு]இக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளது போல, கடந்த காலாண்டில் இக்கொள்கையை நிறைவேற்றிய முறை குறித்தும் மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் பயனர் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஒரு வார காலம் கழித்து, ஒத்த கருத்துள்ள மேம்பாடுகளைத் தொகுத்து இக்கொள்கையின் புதிய வடிவம் வாக்கெடுப்புக்கு விடப்படும். நன்றி--இரவி (பேச்சு) 17:50, 5 ஏப்ரல் 2019 (UTC)
கடந்த நிர்வாகிகள் தேர்தலில் பின்வரும் விசயங்களின் தேவை புலப்பட்டது:
- விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் உரை தெளிவு வேண்டி திருத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த முறையின் அடிப்படையிலேயே நிர்வாகிகள் தேர்வு அமையும் என்று விக்கி நிர்வாகிகள் பள்ளி பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
- ஒரு காலாண்டில் 6க்கு மேற்பட்ட நிர்வாகிகள் தேர்வானால், அவர்கள் விண்ணப்பித்த தேதி வரிசையின் அடிப்படையில் முதல் 6 பேருக்கு நிர்வாக அணுக்கம் வழங்கப்படும். 6க்கு மேற்பட்டவர்கள் தேர்வாகும் நிலையில், அடுத்த காலாண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நிர்வாகிகள் எண்ணிக்கை அதற்கு ஏற்ப குறைக்கப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு காலாண்டில் 10 நிர்வாகிகள் தேர்வானால், அடுத்த காலாண்டில் 2 நிர்வாகிகள் மட்டுமே தேர்வாகலாம். 12 பேர் தேர்வாகியிருந்தால் அடுத்த காலாண்டில் தேர்தல் நடக்காது.
- அதே போல் நிர்வாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்கும் காலமும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் முதல் 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் காலத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் அடுத்த காலாண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஏற்ப முதல் காலாண்டு முடியும் வாரத்திலேயே தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
- இந்தக் காலாண்டில் தேர்வான அனைத்து நிர்வாகிகளும் அனுபவம் வாய்ந்த பயனர்கள் என்பதால் விக்கி நிர்வாகிகள் பள்ளியின் செயற்பாடு பெரிதாகத் தேவைப்படவில்லை. எனினும், அடுத்து வரும் காலாண்டுகளில் விக்கி நிர்வாகிகள் பள்ளியில் இன்னும் கூடுதல் பங்களிப்புகளை நல்க வேண்டும்.
- மேற்கண்ட அனைத்து விசயங்களும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களே. அடிப்படையான கொள்கையில் பெரிய மாற்றங்கள் ஏதும் தேவைப்படுவதாக நான் கருதவில்லை.
மற்ற அனைவரின் கருத்துகளுக்கும் பொறுத்திருந்து இன்னும் 3 நாட்களில் மேம்படுத்திய கொள்கையைப் பயனர்களின் ஆதரவு கோரி வாக்கெடுப்பு விட இருக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:59, 26 ஏப்ரல் 2019 (UTC)
மேம்படுத்தல் தேவை
[தொகு]ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முன், இக்கொள்கையை மேம்படுத்த வாய்ப்புண்டா என்பதை ஆய்வு செய்ய ஒரு வார காலம் கலந்துரையாடல் நடைபெறும். இது இடம்பெறவில்லை. மேலும் ஆலமரத்தடியில் கருத்து வைக்கப்பட்டள்ளது. அதுபற்றி உரையாடி தீர்வு கண்டதும், அடுத்த கட்ட உரையாடலுக்கு நகரலாம். AntanO (பேச்சு) 03:56, 20 சூலை 2024 (UTC)