பயனர்:இளையதமிழோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளையதமிழோன் ( தமிழாாசிரியன் சிவா)

இளைய தலைமுறை தமிழ் மாணாக்கன் நான். தமிழ் மீது எனக்கு ஆகச்சிறந்த பற்றுண்டு. ஆகவே தமிழ்ப் பணியினை ஓர் ஆசிரியனாகவும், ஆராய்ச்சி மாணவனாகவும் செய்து வருகிறேன். தமிழைக் கற்பதில், தமிழைக் கற்பிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறொன்றில் நிச்சயம் இல்லை என்பதை உணர்ந்தவன். ஆகவே அனைவரும் தமிழைக் கற்போம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் நடப்போம். நமது ஒப்பற்ற கலாச்சாாரம், ஈடு இணையற்ற பண்பாடு மற்றும் மரபு வழிப்பட்ட வாழ்வியலை போற்றிப் பாதுகாப்பதில் தான் தமிழ் மொழியின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அமைந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறையினர் வாழ்வியற் சிறப்பினை எய்திட இன்றே நாம் உழைத்திடும் உள்ளத்தோடு தமிழ்ப்பணி செய்வோம் வாரீர்....

என்றும் அன்புடன்....

இளையதமிழோன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இளையதமிழோன்&oldid=3007742" இலிருந்து மீள்விக்கப்பட்டது