நாடுகளின் பொதுநலவாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொதுநலவாய அமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாடுகளின் பொதுநலவாயம்
கொடி Logo
பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் வரைபடம். (கரும் நீலம்)
பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் வரைபடம். (கரும் நீலம்)
தலைமையகம் மார்ல்பரோ மாளிகை
இலண்டன், ஐக்கிய இராஜ்ஜியம்
அலுவல் மொழி ஆங்கிலம்
உறுப்பு நாடுகள்
Leaders
 •  பொதுநலவாயத் தலைமை அரசி எலிசபெத் II
 •  செயலாளர்-நாயகம் கமலேஷ் சர்மா
 •  பொறுப்பிலுள்ள அவைத்தலைவர் மகிந்த ராசபக்ச
உருவாக்கம்
 •  வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 11 திசம்பர் 1931[1] 
 •  இலண்டன் சாற்றுரை 28 ஏப்ரல் 1949 
பரப்பு
 •  மொத்தம் 29 கிமீ2 (1ஆவது)
11 சதுர மைல்
மக்கள் தொகை
 •  2013 கணக்கெடுப்பு 2.328 பில்லியன் (1ஆவது)
 •  அடர்த்தி 75/km2
194/sq mi
மொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $14.623 டிரில்லியன் (3ஆவது)
 •  தலைவிகிதம் $6,222 (116ஆவது)
மொ.உ.உ (பெயரளவு) 2014 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $10.450 டிரில்லியன் (2ஆவது)
 •  தலைவிகிதம் $4,446 (132ஆவது)
Website
thecommonwealth.org
குறிப்பு: தரவரிசையில் உறுப்புநாடுகள் விலக்கப்பட்டுள்ளன.

நாடுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Nations) அல்லது பரவலாக பொதுநலவாயம் (காமன்வெல்த்),[1] எனப்படுவது பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியப் பேரரசின் ஆட்பகுதிகளாக இருந்த, 53 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பன்னாட்டிடை அமைப்பாகும்.[2]

இருபதாம் நூற்றாண்டின் நடுவில், இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. 1949இல் வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பினர் நாடுகள் "கட்டற்றவை மற்றும் சமமானவை" என்று நிறுவப்பட்டது.[3]இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக அரசி எலிசபெத் II பொதுநலவாயத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். பொதுநலவாய இராச்சியம் என அறியப்படும் 16 உறுப்பினர் நாடுகளில் எலிசபெத் II நாட்டுத் தலைவர் தகுதியில் அரசியும் ஆவார். 32 உறுப்பினர் நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது.

பொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும், பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டும் செயல்படுகிறது..[4]

உறுப்பினர் நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு,வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள்,மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்று கூடியுள்ளன.[4] இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் 3, 2013இல், 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த, காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மிக அண்மையில் விலகிய நாடாகும்.[6]

பொதுநலவாய நாடுகள் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய 29,958,050 km2 (11,566,870 sq mi)க்கும் கூடுதலான நிலப்பரப்பை, உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தை, கொண்டுள்ளன. இந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 2.328 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது; இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும்.[7] 2012இல் பொதுநலவாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $10.450 டிரில்லியனாக இருந்தது; இது கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP) கொண்டு மதிப்பிட்டால் மொத்த உலக உற்பத்தியில் 17% ஆகும். இந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annex B — Territories Forming Part of the Commonwealth". Her Majesty's Civil Service (September 2011). பார்த்த நாள் 19 November 2013.
  2. "About us". The Commonwealth. பார்த்த நாள் 2013-10-03.
  3. "The London Declaration". The Commonwealth. பார்த்த நாள் 4 July 2013.
  4. 4.0 4.1 "The Commonwealth". The Commonwealth. பார்த்த நாள் 30 June 2013.
  5. "Charter of the Commonwealth". The Commonwealth. பார்த்த நாள் 30 June 2013.
  6. "Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on The Gambia". The Commonwealth (4 October 2013). பார்த்த நாள் 6 October 2013.
  7. "US and World Population Clock". US Census Bureau (29 June 2013). பார்த்த நாள் 30 June 2013.
  8. டர்பனில் 2022 காமன்வெல்த் போட்டிதி இந்து தமிழ் பார்த்த நாள் 04, செப்டம்பர் 2015