உள்ளடக்கத்துக்குச் செல்

வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், 1931[1]
நீளமான தலைப்பு1926இலும் 1930இலும் இம்பீரியல் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை செயற்படுத்த வகைசெய்யும் சட்டம்.
அதிகாரம்22 & 23 Geo. 5 c. 4
நாட்கள்
அரச ஒப்புமை11 திசம்பர் 1931
நிலை: நடப்பிலுள்ள சட்டம்

வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 (Statute of Westminster 1931) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டச் சட்டமாகும். இது திசம்பர் 11, 1931 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தன்னாட்சி உடைய பிரித்தானியப் பேரரசின் மேலாட்சி நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்துடனும் மற்ற மேலாட்சிகளுடனும் சமநிலையை அளித்தது. இந்தச் சட்டத்தை ஒத்த ஆனால் தனியான சட்டங்களை ஒவ்வொரு பொதுநலவாய இராச்சியமும் தங்கள் நாடாளுமன்றங்களில் உடனடியாகவோ அல்லது ஏற்பு வழங்கியபோதோ நிறைவேற்றின. இச்சட்டத்தினை விலக்கும் மாற்றுச் சட்டம் நிறைவேற்றப்படும்வரை இந்த பொதுநலவாய இராச்சியங்களில் இச்சட்டம் செயற்பாட்டில் உள்ளது. இந்த நாடுகளின் சட்டவாக்க அவைகளுக்கு முழுமையான விடுதலை கொடுப்பதுடன் பொதுநல இராச்சியங்களுக்கும் பிரித்தானிய அரசிக்கும் (அரசர்) இச்சட்டம் பிணைப்பை உருவாக்குகிறது.[2]

நினைவு விழா

[தொகு]

தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஓர் பாகமாக இருக்கும் சில நாடுகள், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுறும் வண்ணம் கொண்டாடுகிறார்கள். கனடாவில் திசம்பர் 11 அன்று அரசக் கட்டிடங்களில் ஐக்கிய இராச்சியக் கொடி (கனடாவில் இது ரோயல் யூனியன் கொடி என்றழைக்கப்படுகிறது) பறக்கவிடப்படுவது கட்டாயமாகும்.[3] இதற்கான கொடிமரங்கள் இந்தக் கட்டிடங்களில் உள்ளன.

மேலும் காண்க

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. சட்டத்தின் s. 12படியான குறும் தலைப்பு; ஐக்கிய இராச்சியத்தில் குறும் தலைப்புகளை குறிப்பிடும் தற்கால வழக்கம் காற்புள்ளியைத் தவிர்ப்பதாகும்.
  2. Mackinlay, Andrew (10 மார்ச் 2005). "Early day motion 895: Morganatic Marriage and the Statute of Westminster 1931". Queen's Printer. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Kinsella, Noël (11 December 2006), Statute of Westminster Day (PDF), Queen's Printer for Canada, archived from the original (PDF) on 18 டிசம்பர் 2014, பார்க்கப்பட்ட நாள் 11 December 2012 {{citation}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]